ஐபிஓ-வை தள்ளி வைத்தது பைஜூஸ் - 2022ல் நஷ்டம் ரூ.300 கோடியில் இருந்து ரூ.4,500 கோடியாக அதிகரிப்பு!
பல மாதங்கள் தாமதத்திற்கு பிறகு வெளியாகி உள்ள நிதி நிலை அறிக்கை, தள்ளி வைக்கப்பட்டதன் காரணமாக 40 சதவீத வளர்ச்சியை பிரதிபலிக்கவில்லை என்று பைஜூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திங்க் & லேர்ன் நிறுவனத்தால் நடத்தப்படும் கல்வி நுட்ப நிறுவனம் பைஜுஸ், 2020-21 ம் ஆண்டுக்கு மாற்றம் இல்லாத வருவாய் வளர்ச்சியை அறிவித்துள்ளதோடு, குறிப்பிடத்தக்கத்த வளர்த்தக வளர்ச்சியை தள்ளி வைக்க நேர்ந்தாலும், இந்த நிதியாண்டு இறுதிக்குள் நேர்நிறையான ரொக்க வரத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மதிப்பு மிக்க ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜுஸ், பரந்துப்பட்ட பொருளாதார காரணிகளால் பொது பங்கு வெளியீட்டை 9 – 12 மாதங்கள் தள்ளி வைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
22 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ள பைஜுஸ், வெற்று காசோலை நிறுவனத்தால் கையக்கப்படுத்தப்படுவது அல்லது சிறப்பு நோக்கம் கையகப்படுத்தல் நிறுவன (SPAC) வழியில் கையகப்படுத்தப்படுவது மூலம் அமெரிக்காவில் பொது பங்குகளை பட்டியலிட திட்டமிட்டிருந்தது.
“வருவாய் தள்ளி வைக்கப்பட்டாலும், செலவுகள் அல்ல. இதன் காரணமாக, மொத்த அளவில் நஷ்டம் ரூ.300 கோடியில் இருந்து ரூ.4,500 கோடியாக (FY22) அதிகரித்துள்ளது,” என இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. பைஜு ரவீந்திரன் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு நிறுவன நஷ்டம் குறைந்திருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்திய White Hat Jr நிறுவனம் ரொக்கத்தை சாப்பிடும் விதம் கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். நிறுவனம் 2020 நிதியாண்டில் ரூ.262 கோடி நஷ்டம் கொண்டிருந்தது.
”பரந்துப்பட்ட பொருளாதார காரணிகளால், ஐபிஓ வெளியீட்டை 9- 12 மாதங்கள் தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளதாகவும், எனினும், இந்த நிதியாண்டுக்குள் நேர்நிறையான ரொக்க வரத்தை பெறுவோம் என எதிர்பார்ப்பதாகவும்,” அவர் கூறியுள்ளார்.
நிறுவனம் 22 நிதியாண்டில் மொத்த வருவாயாக ரூ.10,000 கோடி ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்லது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை ரூ.4,530 கோடி வருவாய் உள்ளது.
நிதி அறிக்கை தாமதம் மற்றும் நிதி திரட்டும் சிக்கல்கள் காரணமாக பிரச்சனைகளில் சிக்கிய பைஜூஸ், 2021 நிதியாண்டிற்காக தனது தணிக்கையாளர்கள் Deloitte Haskins & Sells நிறுவனத்திடம் இருந்து அன்குவாலிபைடு அறிக்கையை பெற்றதாக தெரிவித்துள்ளது.
பைஜூஸ், ஆகாஷ் எஜுகேஷன் மற்றும் கிரேட் லேர்னிங் மூலம் நல்ல ரொக்க வரத்தை நோக்கி முன்னேறி வருவதாக அவர் கூறியுள்ளார். எனினும், White Hat Jr இன்னமும் ரொக்கத்தை செலவிட்டு வருவதாகவும், லாபம் ஈட்ட சில காலாண்டுகள் ஆகலாம் என்றும் தெரிவித்தார்.
பைஜுஸ் குழும வருவாய் 2021 நிதியாண்டில் ரூ.2,248 கோடியாக இருந்தது. 21 மற்றும் 20 நிதியாண்டுகளில் நிறுவனம் குறிப்பிட்டத்தக்க வர்த்தக வளர்ச்சி கண்டாலும், கோவிட் தொடர்பான சூழலால் புதிய வருவாய் மாதிரி உணரப்பட்ட முதல் ஆண்டாக இது அமைந்தது என்று பைஜு ரவீந்திரன் யுவர்ஸோட்ரி நேர்காணலில் கூறியிருந்தார். இதன் காரணமாக, 40 சதவீத வருவாய் தள்ளிவைக்கப்படும் நிலை ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார்.
“இது கடினமாக இருந்தாலும், நல்ல அனுபவத்தை அளித்தது. 2021 நிதியாண்டில் நல்ல வருவாய் வளர்ச்சி இருந்தாலும், Deloitte அறிவுறுத்திய வருவாய் மாற்றங்களால், தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையை பார்க்க முடியாது. ரூ.2,428 கோடிய வருவாய் 2020 நிதியாண்டிற்கு நிகரானது.”
வேகமாக வளரும் ஆனால் நஷ்டத்தை ஏற்படுத்தும் கையகப்படுத்தலும் நஷ்டத்திற்கான இன்னொரு காரணம் எனக் கூறியுள்ளார்.
Whitehat Jr நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் செலவுகளை குறைத்து, நல்ல ரொக்க நிலையை பெற எதிர்பார்ப்பதாகவும் ரவீந்திரன் கூறியுள்ளார்.
நிதி திரட்டல் பற்றி குறிப்பிட்டவர், 2 பில்லியனுக்கு மேலான சந்தை மதிப்பில் புதிய நிதி சுற்றை எதிர்பார்ப்பதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
முந்தைய சுற்று நிதி வராதது பற்றி குறிப்பிட்டவர், Sumeru Ventures மற்றும் Oxshott Capital சவால்களை எதிர்கொண்டிருப்பது காரணம் என்றார். எனினும், கோடிகளில் திரட்டப்பட்ட நிதியில் 300 மில்லியன் தான் இது என்றார்.
கடந்த ஆண்டுகளில் மேற்கொண்ட கையகப்படுத்தல்கள் நல்ல வளர்ச்சி அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். தேர்வு தயாரிப்பு பிரிவில் ஆகாஷ் மற்றும் உயர்கல்வி பிரிவில் கிரேட் லேர்னிங் வருவாயை இருமடங்காக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan