இந்தியாவில் ஆபாச செக்ஸ் தளங்கள் மீதான தடை பலன் அளித்ததா?
தற்போதைய அரசு 2014 ல் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, ஆபாச செக்ஸ் இணைய தளங்களை அதாவது ’போர்ன் சைட்களை’ முடக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இவற்றுக்கான பலன் குறைவாகவே இருந்தன.
2015ல், 857 செக்ஸ் தளங்கள் தடைசெய்யப்பட்டன. ஆனால் இந்த சட்ட விரோதமான துறையில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எனவே உத்தரவு ரத்தானது. சமீபத்திய நடவடிக்கையில், பிரபலமான பார்ன் ஹப் மற்றும் Xவிவீடியோஸ் உள்ளிட்ட 827 ஆபாச செக்ஸ் தளங்களை முடக்க இணைய சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய தடை
இந்த முடிவு உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தால் செப்டம்பர் 28 பிறப்பிக்கப்பட்டது. டேராடூனில் உள்ள பள்ளி மாணவர்கள் சிலர், செக்ஸ் தள காட்சியை பார்த்த பிறகு சக மாணவியை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதாக வெளியான செய்தியை அடுத்து நீதிமன்றம் இந்த பிரச்சனையை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவியை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் நான்கு மாணவர்கள் அதற்கு முன் இணையத்தில் செக்ஸ் காட்சியை பார்த்ததாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
“எளிதாக தாக்கத்திற்கு உள்ளாகும் சிறார்களின் மனதில் தாக்கம் செலுத்தும் செக்ஸ் தளங்களின் கட்டுப்பாடு இல்லாத அணுகலை முடக்க வேண்டும்,’ என்று நீதி மன்றம் தெரிவித்தது.
2015 தடை உத்தரவை அமல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்ட, நீதிமன்றம், எண்ணிக்கையை 857ல் இருந்து 827 ஆக குறைத்தது. செக்ஸ் காட்சிகள் பாலியல் தாக்குதலை ஊக்குவிப்பதாக பல தரப்பினர் கருதுகின்றனர். நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தி கூட, செக்ஸ் காட்சிகளை தடை செய்வது பற்றி பேசியிருக்கிறார்.
இந்தத் தடையை ரிலையன்ஸ் ஜியோ தான் முதலீல் தீவிரமான அமல்படுத்தியது, ரெட்டிட் தளத்திலும் விவாத்தத்தை ஏற்படுத்தியது. பயனாளிகள் ஆவேசமடைந்து, இந்த தடையை சமாளிப்பதற்கான வழிகளை தேடுகின்றனர். ஆனால் ஜியோவை குறை சொல்ல முடியாது. ஏனெனில், உத்தரவை செயல்படுத்தவில்லை எனில் அதன் உரிமம் ரத்தாகலாம். மற்ற ஐ.எஸ்.பிகள் நிலையும் இது தான். ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த முடக்கம் தொடர்பான புகார்கள் குவிவதாக சொல்கின்றனர்.
பயனாளிகள் ஏற்கனவே விபிஎன் (விர்ச்சுவல் பிரைவட் நெட்வொர்க்) போன்ற வழிகளை நாடி வருகின்றனர். ஒரு சிலர் யூடியூப்பில் இருந்து ஆபாச வீடியோக்கள் நீக்கப்படும் முன் அவற்றை நாடுகின்றனர். ’போர்ன்ஹப்’ இணையதளம், இதற்கான மாற்று வழியாக, போர்ன்ஹப்.காம் முகவரியில் இருந்து போர்ன்ஹப்.நெட் முகவரிக்கு மாறியுள்ளது.
சட்டவிரோத சேவைகள் பல இணைய முகவரிகள் மூலம் தடையில் இருந்து தப்புவது உலகம் முழுவதும் சகஜமானது. இது தொடர்பாக, போர்ன்ஹப் அறிக்கையும் வெளியிட்டுள்ளது:
“இந்தியாவில் போர்னோகிராபிக்கு எதிராக மற்றும் தனியே செக்ஸ் படங்களை பார்ப்பதற்கு எதிராக சட்டம் இல்லாத நிலையிலும், 827 செக்ஸ் பொழுதுபோக்கு தளங்கள் தடை செய்தியை அடுத்து, முன்னணி செக்ஸ் பொழுதுபோக்கு தளமான மற்றும் தடைக்கு உள்ளான தளங்களில் ஒன்றான, போர்ன்ஹப், இந்தியர்கள் அணுகி பழக்கப்பட்ட உள்ளடக்கத்தை அணுகுவதற்கான மிரர் இணையதளமான போர்ன்ஹப்.நெட் தளத்தை அமைத்துள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக இந்திய அரசுடனும் ஆலோசனை நடத்த தயாராக உள்ளோம்.”
போர்ன்ஹப், தனது சொந்த விபிஎன் சேவையான விபிஎன் ஹப்பை துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆபாச தளங்களை பார்வையிடுவதை தடுப்பது எத்தனை கடினமானது என்பதை இது உணர்த்துகிறது.
ஆங்கிலத்தில்: யுவர்ஸ்டோரி குழு | தமிழில்: சைபர்சிம்மன்