மின் வாகனங்களுக்கான 'பிரதமர் இ-டிரைவ் திட்டம்' - அமைச்சரவை ஒப்புதல்
இந்தத் திட்டம், 24.79 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 3.16 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள், 14,028 பஸ்களை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.
நாட்டில் மின்வாகன போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கான கனரக தொழில்துறை அமைச்சகத்தின் ‘புதுமையாக்க வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின் போக்குவரத்து புரட்சி' (PM E-DRIVE) திட்டத்திற்கு மத்திய அமைச்சர்வை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆம்புலன்ஸ்கள் மற்றும் மின் லாரிகளை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.
இந்த திட்டத்தின் மின் கார்களுக்கான ஒதுக்கீடு பற்றி குறிப்பிட படவில்லை என்றாலும், இரண்டு சக்கர, மூன்று சக்கர மின் வாகனங்கள் மற்றும் லாரிகள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.3,679 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், 24.79 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 3.16 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள், 14,028 பஸ்களை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.
கனரக தொழில்துறை அமைச்சகம், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மின்வாகன நுகர்வோருக்கான மின் வவுச்சர்களையும் அறிமுகம் செய்ய உள்ளது.
மேலும், மின் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் சுகாதார அமைச்சகம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மற்றும் தொடர்புடைய துறையினர் ஆலோசனைக்கு ஏற்ப அமையும்.
மாநில போக்குவரத்து கழகங்கள் சார்பில் மின் பஸ்கள் வாங்க, ரூ.4,391 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின் லாரிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
போதுமான பொது சார்ஜிங் உள் கட்டமைப்பு இல்லாதது உள்ளிட்ட மின்வாகன சூழல் தொடர்பான பிரச்சனைகளை இந்த திட்டம் கவனத்தில் கொண்டுள்ளது.
நான்கு சக்கர வாகனங்களுக்கு 22,100 வேகமான சார்ஜர்கள், மின் பஸ்களுக்கு 1,800 சார்ஜர்கள், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 48,400 சார்ஜர்கள் அமைக்கப்பட திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan