உயரப் பறக்கத் துடிக்கும் பெண்களுக்கான விழா 'Magic பெண்கள் 2.0' - முன்பதிவு விவரங்கள்!
உயரத் துடிக்கும் பெண்களை உயர்த்தும் மேடையாக மேஜிக் பெண்கள் 2.0 என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது Magic 2.0 நிறுவனம். தமிழ் பெண்களின் வலிமை, சாதனைகள் மற்றும் மறுமலர்ச்சியை கொண்டாடும் விதமாக வரும் 29 ஆம் தேதி சென்னையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்முனைவோராகத் துடிக்கும் பெண்கள் தொடங்கி வீட்டைப் பராமரிக்கும் குடும்பத் தலைவிகள் வரை அனைத்துப் பெண்களுக்கும் தேவையான மனநலன், பொருளாதார திட்டமிடல் உட்பட பல்வேறு உபயோகமான அம்சங்களைக் கொண்ட நிகழ்ச்சியாக 'மேஜிக் பெண்கள் 2.0' (Magic Pengal 2.0) என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது மேஜிக் 2.0 நிறுவனம்.
மீடியா பார்ட்னராக யுவர்ஸ்டோரி தமிழ் இருக்கும் இந்த நிகழ்ச்சி, வரும் 29ஆம் தேதி (மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை) மாலை 5. 30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.எம்.ஏ அரங்கில் நடைபெறவுள்ளது.

பிரபலங்களின் வழிகாட்டுதல் உரைகள்
பெண்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக பல்வேறு விஷயங்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், நடிகை நீலிமா ராணி, மக்களவை உறுப்பினர் மற்றும் மருத்துவர் சுதா, தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் சுதா ராமன் மற்றும் டிக்கெட் 9 சி.இ.ஓ யாழினி சண்முகம் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்வில் தொழில்முனைவோராக சாதிக்க நினைக்கும் பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் உரைகள், உரையாடல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் குழு விவாதங்கள் என பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
பெண்களின் மன ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, ‘பெண்கள் மனநலம் மற்றும் அவர்களின் நல்வாழ்வு’ என்ற தலைப்பில், தொழில் முனைவோர் மற்றும் மனநல பயிற்சியாளரான மாலிகா ரவிக்குமார் உரையாற்றுகிறார். பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தைப் பற்றி, ‘பெண்கள் தங்களுக்கான நிதியை எவ்வாறு கையாள வேண்டும்’ என்ற தலைப்பில் பிரைம் இன்வெஸ்டர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் வித்யா பாலா உரையாற்றுகிறார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் விவாத நிகழ்ச்சியில் SPIKRA நிறுவனத்தின் சி.இ.ஓ ராதா ரங்காச்சாரி நடுவராக இருக்க அதில் ஸ்ரீராம் கேபிடல் பிரைவேட். லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுபாஸ்ரீ ஸ்ரீராம் விவாதம் நடத்த உள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற நினைக்கும் பெண்கள் https://www.theticket9.com/event/magic-pengal-2-0 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கட்டணமாக ஒருவருக்கு ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உயரத் துடிக்கும் பெண்களை உயர்த்தும் மேடையாக நடைபெற உள்ள இந்த மேஜிக் பெண்கள் 2.0 நிகழ்ச்சியின் டிக்கெட் முன் பதிவுக்கு இந்த லின்க்கை க்ளிக் செய்யலாம்! https://www.theticket9.com/event/magic-pengal-2-0
மேலும் விவரங்களுக்கு 7845569820 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது WWW.magic.co.in என்ற இணையதளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.