இந்த வாரம் 6 SME IPO - பணத்தை முதலீடு செய்ய வாய்ப்பு; எந்தெந்த நிறுவனங்கள் பட்டியலிடப்பட உள்ளன?
இந்த வாரம் SME பிரிவில் புதிதாக 6 ஐபிஓ-க்கள் வெளியிடப்படவுள்ளன.
இந்த வாரம் சிறு மற்றும் மத்திய நிறுவன (SME) பிரிவில் புதிதாக 6 ஐபிஓ-க்கள் வெளியிடப்படவுள்ளன.
கடந்த வாரம் டாடா டெக், ஃபிளேர் ரைட்டிங் மற்றும் கந்தர் ஆயில் போன்ற மெயின்போர்டு ஐபிஓக்களால் பரபரப்புடன் இருந்தன. இந்நிலையில், 5 SME ஐபிஓக்கள் பொதுச் சந்தாக்களுக்காக திறக்கப்படுகின்றன.
ஏற்கனவே, நவம்பர் 24 ஆம் தேதி திறக்கப்பட்ட ஸ்வஷ்திக் பிளாஸ்கானின் பொது வெளியீடு நவம்பர் 29 ஆம் தேதி முடிவடைகிறது.
6 SME ஐபிஓக்கள் பற்றிய தகவல்கள் இதோ...
1.அமிக் ஃபோர்ஜிங் (AMIC Forging):
அமிக் ஃபோர்ஜிங் சுமார் ரூ.31.73 கோடி மதிப்புள்ள ஐபிஓவை நவம்பர் 29ம் தேதி தொடங்கி, டிசம்பர் 1 ஆம் தேதி வரை வெளியிடவுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 1,000 பங்குகளுக்கு ஏலம் எடுக்கலாம். அமிக் ஃபோர்ஜிங் ஐபிஓவின் பிரைஸ் பேண்ட் ரூ.121 முதல் ரூ.126 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஐபிஓ பிஎஸ்இ எஸ்எம்இ-யில் பட்டியலிடப்படும்.
2. தீபக் கெம்டெக்ஸ் (Deepak Chemtex):
தீபக் கெம்டெக்ஸின் ரூ.20.76 கோடி மதிப்புள்ள ஐபிஓ வெளியீடு, நவம்பர் 29ம் தேதி தொடங்கி, டிசம்பர் 01ம் தேதி அன்று நிறைவடைகிறது. இதன் ஒரு பங்கின் விலை ரூ.76 முதல் ரூ.80 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 1,600 பங்குகளை வாங்கலாம். இதன் ஐபிஓ பிஎஸ்இ எஸ்எம்இ-யில் பட்டியலிடப்படவுள்ளது.
3. கிராஃபிசாட்ஸ் (Graphisads):
கிராஃபிசேட்ஸ் N ரூ.50.72 கோடி மதிப்பிலான IPO-வை நவம்பர் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 5ம் தேதி வரை வெளியிடவுள்ளது. ஐபிஓவின் விலை ரூ.111 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. NSE SME-யில் பட்டியலிடப்படவுள்ள ஐபிஓவில், முதலீட்டாளர்கள் ஒரு லாட்டில் 1,200 பங்குகளை வாங்கலாம்.
4. நெட் அவென்யூ டெக்னாலஜிஸ் (Net Avenue Technologies)
நெட் அவென்யூ டெக்னாலஜிஸின் ஐபிஓ மதிப்பு ரூ.8.65 கோடி ஆகும். இந்நிறுவனம் தனது பொது பங்குகளுக்கான ஏலத்தை நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை திறக்கவுள்ளது. ஒரு லாட்டில் 8,000 பங்குகளுக்கு ஏலம் எடுக்கலாம். நெட் அவென்யூ டெக்னாலஜிஸ் ஐபிஓவின் விலை ரூ.16 முதல் ரூ.18 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5.மரைன் டிரான்ஸ் இந்தியா (Marinetrans India)
மரைன் டிரான்ஸ் இந்தியா நிறுவனம் ரூ.10.92 கோடி மதிப்பிலான ஐபிஓ-வை நவம்பர் 30 முதல் டிசம்பர் 5ம் தேதி வரை வெளியிடவுள்ளது. இதன் ஒரு ஐபிஓ-வின் விலை ரூ.26 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு லாட்டில் 4,000 பங்குகளுக்கு ஏலம் எடுக்க வேண்டும்.
6.ஸ்வஸ்திக் பிளாஸ்கான் (Swashthik Plascon):
ஸ்வஸ்திக் பிளாஸ்கான் ஐபிஓ நவம்பர் 24ம் தேதி திறக்கப்பட்டு, நவம்பர் 29ம் தேதியோடு நிறைவடையவுள்ளது. ஐபிஓவின் விலை ரூ.80 முதல் ரூ.86 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் ஒரு லாட்டில் குறைந்தபட்சம் 1,600 பங்குகளுக்கு ஏலம் எடுக்க வேண்டும். ஐபிஓவின் மதிப்பு ரூ.40.76 கோடி ஆகும்.
MAMAEARTH தாய் நிறுவனம் ஐபிஒ அறிமுகம் - பங்குகள் 4 சதவீத உயர்வுடன் முடிந்தன!