MAMAEARTH தாய் நிறுவனம் ஐபிஒ அறிமுகம் - பங்குகள் 4 சதவீத உயர்வுடன் முடிந்தன!
ஹோனசா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு விலை வரம்பு பங்கு ஒன்றுக்கு ரூ. 308-324 ஆக இருந்தது.
'தி டெர்மா கோ',
மற்றும் அக்வாலாஜிகா உள்ளிட்ட பிராண்ட்களின் தாய் நிறுவனமான ஹோனசா கன்ஸ்யூமர் (Honasa Consumer) செவ்வாய் கிழமை அன்று அதன் பங்கு சந்தை அறிமுகத்தில், ரூ.337.15 க்கு வர்த்தகமானது. பட்டியலிடப்பட்ட விலையை விட, 4.05 சதவீதம் மட்டுமே உயர்வு என்பதால் இதன் சந்தை அறிமுகம் மந்தமாக அமைந்தது.மும்பையை தலையமகமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் (NSE) ரூ.330 எனும் விலையில் வர்த்தகமாக துவங்கியது. இதன் பட்டியலிடப்பட்ட விலை ரூ.324 ஆகும். இடைப்பட்ட நாள் வர்த்தகத்தில் அதன் விலை ரூ.340.45 என இருந்தது.
ஹோனசா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் வெளியீட்டிற்கு முந்தைய ஆஃபர் நவம்பர் 2 ஆம் தேதி நிறைவடைந்தது. புக் பில்டிங் இறுதி நாளில் 7.61 மடங்கு சந்தா பெற்றது. நிதி கழக முதலீட்டாளர்கள் ஆதரவு அதிகம் இருந்தது.
புக் பில்டிங் முதல் நாளில் மந்தமாகத் துவங்கியது. மூன்றாம் நாள் அன்று முதலீட்டாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கண்டது. 2.8 கோடி பங்கு வழங்கலுக்கு எதிராக 22 கோடி கோரிக்கைகள் வந்தன. பங்குச்சந்தையில் கிடைக்கும் தரவுகள் இதை தெரிவிக்கின்றன.
முதல் பங்கு வெளியீட்டிற்கான (IPO) விலை பட்டியல் ரூ.308 - 324 என அமைந்திருந்தது. 46 பங்குகள் என லாட் சைஸ் அமைந்தது.
வருண் மற்றும் கஜல் அலக் ஆகியோரை நிறுவனராக கொண்ட இந்த அழகுசாதன் மற்றும் தனிநபர் நலன் நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.1,701 கோடி திரட்ட திட்டமிட்டிருந்தது. இது ரூ.365 கோடி மதிப்பிலான புதிய பங்குகள் வழங்கல் மற்றும் ரூ.4.13 கோடி அளவிலான பங்குகள் ஆஃப்ர் விற்பனையை கொண்டிருந்தது.
ஆங்கிலத்தில்: செளமியா ராமசுப்பிரமணியன் | தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan