Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

சொகுசு கேம்பிங் சேவை அளிக்கும் சென்னை நிறுவனம் Exoticamp 5லட்சம் டாலர் நிதி திரட்டியது!

நிறுவனம் புதிதாக திரட்டியுள்ள நிதியை, செயல்பாடு விரிவாக்கம், கேம்பிங் மைய மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்த உள்ளது.

சொகுசு கேம்பிங் சேவை அளிக்கும் சென்னை நிறுவனம் Exoticamp 5லட்சம் டாலர் நிதி திரட்டியது!

Wednesday October 11, 2023 , 1 min Read

சென்னையைச் சேர்ந்த கேம்பிங் மற்றும் சொகுசு கேம்பிங் கண்டறிதல் நிறுவனமான Exoticamp வெற்றிகரமாக தனது முதல் நிதியை (5 லட்சம் டாலர்) திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் ஃபார்முலேஷன் நிறுவனங்களில் ஒன்றான சாய் பேரண்டல்ஸ் புரோமோட்டர் அனில்குமார் கோஷ்லா, மீடியாமிண்ட் நிறுவனர் ஆதித்யா வுச்சி, பெடரல் வங்கி செயல் இயக்குனர் ஹர்ஷ் துகார், முன்னணி முதலீட்டு வங்கியான ஸ்பார்க் கேபிடல் மூத்த ஊழியர்கள், ஐதராபாத், சென்னையைச் சேர்ந்த அதிக நிகர மதிப்பு தனிநபர்கள், என்.ஆர்.ஐகள் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்றனர்.

நிதி

கடந்த மூன்று ஆண்டுகளாக சுயநிதியில் இயங்கி வரும் இந்நிறுவனம், சீரான லாபத்தை பெற்றுள்ளது. தற்போது புதிய நிதி வரவால், நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவாக்கி இந்தியாவில் சாகச சுற்றுலாப் பிரிவில் முத்திரை பதிக்க விரும்புகிறது.

நிறுவன அணுகுமுறையில் முதலீட்டாளர்களுக்கு உள்ள நம்பிக்கையை இந்த நிதி உணர்த்துகிறது. கேம்ப் இடங்களில் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துவது, பிரத்யேக கேம்பிங் நிகழ்வுகளை உருவாக்குவது, தொழில்நுட்ப வசதியை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

"வெளிப்புற செயல்பாடுகளை ஊக்குவிக்கும் எண்ணம் கொண்ட முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டுவது நம்பிக்கை அளிக்கிறது. இந்த நிதி, செயல்பாடுகளை விரிவாக்க, மேலும் சுற்றுலா இடங்களை அதிகரிக்க, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த உதவும்,” என்று எக்சோடிகேம்ப் இணை நிறுவனர்கள் விஜய் பிரேம்நாத், ஸ்வாமிநாதன் கூறினர்.

எங்கள் வாடிக்கையாளர்களில் 95 சதவீதம் பேர் முதல் முறை கேம்பிங்கில் ஈடுபடுபவர்கள். நாங்கள் கேம்பிங் அனுபவத்தை ஜனநாயகமயமாக்க விரும்புகிறோம். கேம்பிங் சாதனங்கள், உணவு, உள்ளூர் செயல்பாடுகள், பறவை பார்த்தல் உள்ளிட்டவற்றை வழங்குகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

நிறுவனம் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேம்பிங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இவற்றில் பெரும்பாலான கேம்பிங் கடந்த ஆண்டு நிகழ்ந்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல ரேட்டிங்கையும் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் 70க்கும் மேற்பட்ட கேம்பிங் மையங்களைக் கொண்டுள்ளது.


Edited by Induja Raghunathan