Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தந்தை கொடுத்த ஊக்கம்: ஒலிம்பிக்கிற்கு தேர்வான சென்னை வீரர்!

படகோட்டுதல் பிரிவில் தேர்வான விஷ்ணு சரவணன்!

தந்தை கொடுத்த ஊக்கம்: ஒலிம்பிக்கிற்கு தேர்வான சென்னை வீரர்!

Thursday April 15, 2021 , 2 min Read

கொரோனா காரணமாக ஒலிம்பிக் தொடர் ஓராண்டு தள்ளி ஜூலை மாதம் 23ம் தேதி டோக்கியோ நடக்க இருக்கிறது. இந்தத் தொடரில் தமிழர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சந்தோசப்படும் வகையில் தமிழகத்தில் இருந்து வீரர்கள் அதிகளவு பங்கேற்க இருக்கின்றனர்.


டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஷரத் கமல், சத்யன் ஞானசேகரன், வாள்சண்டை வீராங்கனை பவானிதேவி, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், படகோட்டுதல் வீராங்கனையான நேத்ரா ஆகியோர் தேர்வாகி இருந்தனர்.


இதற்கிடையே, நேத்ரா தேர்வாகி இருக்கின்ற படகோட்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இன்னொருவர் தேர்வாகி இருக்கிறார். அவர் பெயர் விஷ்ணு சரணவன்.


விஷ்ணுவும் சென்னையைச் சேர்ந்தவர்தான் எனக் கூறப்படுகிறது. இந்திய இராணுவத்தில் நயிப் சுபேதாராக மெட்ராஸ் ராணுவப் பள்ளியில் தற்போது விஷ்ணு பணிபுரிந்து வருகிறார். விஷ்ணு படகோட்டுதல் விளையாட்டை தேர்ந்தெடுத்தத்துக்குக் காரணம் அவரின் தந்தை ராமச்சந்திரன் சரவணன். இவரும் முன்னாள் ராணுவ வீரர்தான்.

விஷ்ணு சரவணன்

முதலில் ராமச்சந்திரன் படகோட்டுதல் விளையாட்டில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று பயிற்சி பெற்றுவந்தார். ஆனால் அவரால் தொழில் ரீதியாக படகோட்டுதலை தொடர முடியவில்லை. தன்னால் இயலாவிட்டாலும், தனது மகன், மகள் என இருவரையும் இந்த விளையாட்டை கற்றுக்கொடுத்தார்.


அப்படிதான், விஷ்ணு சிறுவயது முதலே படகோட்டுதலை கற்றுவந்தவர் மெட்ராஸ் பொறியாளர்கள் குழு (எம்இஜி) பாய்ஸ் விளையாட்டு நிறுவனத்தில் 2014 ஆம் ஆண்டில் சேர்ந்து தொழில்ரீதியாக கற்க தொடங்கினர். அதில் திறமையை மேம்படுத்த்ட்ட ஜூனியர் தேசிய போட்டிகளில் பல பதக்கங்களை வெல்லத் தொடங்கினார்.

2016ல் இளைஞர் தேசிய சாம்பியன், ஹாங்காங் தொடரில் வெள்ளி என அடுத்தடுத்து பதக்கங்களை வென்றவர், அடுத்த ஆண்டே இந்திய ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ராணுவத்தில் பணிக்கு சேரும்போது அவருக்கு வயது 22 தான்.

இந்திய இராணுவம் விஷ்ணுவின் படகோட்டுதல் கனவு வாழ்க்கையை மேலும் ஆதரிக்க, அடுத்த லெவெலுக்கு முன்னேறினார். இதனால், முதல் மூத்த தேசிய சாம்பியன்ஷிப்பை 2018 இல் வென்றார். மேலும், குரோஷியாவில் 2019-ல் நடந்த அண்டர் -21 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற நிகழ்வு விஷ்ணுவுக்கு முக்கியபடியாக அமைந்தது. இந்தப் போட்டி அவரை அபுதாபியில் நடக்க இருந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது.

விஷ்ணு சரவணன்

ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக அபுதாபி ஒலிம்பிக் தகுதிப் போட்டி கைவிடப்பட மனம் தளராமல் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில்தான் சமீபத்தில், ஓமன் முசானா ஓபன் சாம்பியன்ஷிப் தொடர் ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியாக அறிவிக்கப்பட்டது.

இதில், விஷ்ணு சிறப்பாக செயல்பட தற்போது ஒலிம்பிக் தொடருக்கு தேர்வாகியுள்ளார். விஷ்ணு லேசர் எஸ்.டி.டீ பிரிவில் பங்கேற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

வாழ்த்துக்கள் விஷ்ணு!