4 லட்சம் டாலர் நிதி திரட்டிய சென்னை சாஸ் ஸ்டார்ட் அப் ‘Cloudbankin’
நிதி நுட்பத்துறையில் முன்னேறும் சென்னை நிறுவனம்
சென்னையை தலைமையகமாகக் கொண்ட டிஜிட்டல் கடன் சேவை மென்பொருள் நிறுவனம் ’கிளவுட்பேங்கின்’ (
) முன்னதாக Habile எனும் பெயரில் செயல்பட்ட நிறுவனம், ஏஞ்சல் முதலீட்டாளர்கள், சாஸ் ஆக்சலேட்டர் நிதி நிறுவனம் Upekkha மற்றும் சர்வதேச முதலீட்டு நிறுவனம் Kube VC ஆகியவற்றிடம் இருந்து 4 லட்சம் டாலர் நிதி திரட்டியுள்ளது.இந்த நிதிச் சுற்றில் நிதி நுட்ப ஏஞ்சல் முதலீட்டாளர்கள் ராமநாதன் ஆர்.வி (ஹைபர்பேஸ்), மோகன் கருப்பையா (இப்போபே சி.இ.ஓ), மகேந்திரன் நேகி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த புதிய நிதி மூலம் கிளவுட்பேங்கின் நிறுவனம், பெரிய நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகள் அளிக்கும் வகையில் தனது சேவைகளை விரிவாக்க உள்ளது.
"தற்போதைய சூழலில் கடன்தாரர்களுக்கான சேவைகள் பல வகைப்பட்டதாகவும், பல்வேறு செயல்முறை அல்லது ஏபிஐ ஒருங்கிணைப்புக்கு ஏற்ப தனியே மாற்றியமைக்க வேண்டியதாக இருக்கிறது. இது நிதி நிறுவனங்களுக்கு சிக்கலானதாக அமைகிறது. இந்த நிதி மூலம், பல்வேறு நிதி சேவைகளுக்கு ஏற்ற தனிப்பட்ட தீர்வுகளை உருவாக்கிக் கொள்ளும் வகையில் குறைந்த கோடிங் தேவைப்படும் எங்கள் மேடை ஏஐ நுட்பம் கொண்டு மேம்படுத்த முடியும்,” என்று கிளவுட்பேங்கின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. மணி பார்த்தசாரதி கூறியுள்ளார்.
“வர்த்தகக் கடன், சொத்து மீதான கடன், வீட்டுக்கடன், தங்க நகை கடன், தனிநபர் கடன் போன்ற நிதி சேவைகளில் இதை பயன்படுத்தி 3 வாரங்களில் அவற்றை அறிமுகம் செய்ய இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடன்தாரர்கள் சார்ந்த விரிவான சேவைகளை, ஏஐ. நுட்பம் கொண்ட குறைந்த கோடிங் மேடை மற்றும் டேடா ஆய்வும், எம்.எல், உள்ளிட்ட அனைத்து மூன்றாம் தரப்பு சேவைகளுக்கான ஒருங்கிணைந்த ஏபிஐ வாயிலாக வழங்க திட்டமிட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
"முன்னணி நிதி நுட்ப சாஸ் நிறுவனம் கிளவுட்பேங்கின் உடன் இணைந்து செயல்படுவதில் உற்சாகம் கொண்டுள்ளோம். இந்நிறுவனம் டிஜிட்டல் கடன் பிரிவில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் விதம் சிறப்பாக உள்ளது,” என்று உபேக்கா நிர்வாக பார்ட்னர் பிரசன்னா கூறியுள்ளார்.
$120,000 நிதி திரட்டி வளர்ச்சிப் பாதையில் கோவை நண்பர்கள் தொடங்கிய ‘ticket9'
Edited by Induja Raghunathan