Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

$120,000 நிதி திரட்டி வளர்ச்சிப் பாதையில் கோவை நண்பர்கள் தொடங்கிய ‘ticket9'

கோவையைச் சேர்ந்த டிக்கெட் புக்கிங் ஸ்டார்ட்-அப் ticket9 அண்மையில் நிதி திரட்டி வளர்ச்சி அடைந்து வருகிறது. இவர்களின் கதை என்ன என்று பார்ப்போம்!

$120,000 நிதி திரட்டி வளர்ச்சிப் பாதையில் கோவை நண்பர்கள் தொடங்கிய ‘ticket9'

Friday June 09, 2023 , 3 min Read

டிக்கெட்டிங் டெக்னாலஜி பிரிவில் செயல்பட்டுவரும் நிறுவனம் 'ticket9’. கோவையில் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு 120,000 டாலர் நிதியை முதலீடாக பெற்றது. யாழினி சண்முகம் மற்றும் சந்தோஷ் பிரேம்ராஜ் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனம் இது.

சமீபத்தில் திரட்டிய நிதியில் எம்2பி நிறுவனர் பிரபு, இப்போபேவின் மோகன் மற்றும் ஜெய்குமார், பிட்ஸ்கிரன்ச் நிறுவனத்தின் விஜய் பிரவீன், அசோக் வரதராஜன் உள்ளிட்டோர் முதலீடு செய்திருக்கிறார்கள். இதுதவிர, கிருஷ்ணமணி கண்ணன், செல்வமுத்துகுமார், சுந்தராமன் ராமசாமி மற்றும் சுடலை ராஜ்குமார் உள்ளிட்டோர் முதலீடு செய்திருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு நிறுவனர்கள் இருவரிடமும் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தங்களின் ஆரம்பகாலம், நிதி, வாய்ப்புகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினோம்.

ticket9

நிறுவனர்களின் தொடக்கம்

டிக்கெட்9-இன் நிறுவனர்களின் ஒருவரான சந்தோஷ், தனக்கு இவென்ட் துறையில் ஒரளவுக்கு அனுபவம் இருப்பதாக பகிர்ந்தார். நான்கு ஆண்டுகளுக்கு மேல் இவென்ட் மேனேஜ்மெண்ட் பிரிவில் வேலை செய்துள்ள அவருக்கு இவென்ட்களில் என்ன சிக்கல் உள்ளது என்பது குறித்து தெளிவாகப் புரிந்ததாக் கூறினார்.

Get connected to Ticket 9ys-connect
“இந்த நிலையில் தான் நானும் யாழினியும் ஒரு பொது நிகழ்ச்சியில் சந்தித்தோம். அப்போது இருவரும் உரையாடத் தொடங்கினோம். எங்களோடு மற்றொரு நண்பரும் இணைய, நாங்கள் இணைந்து டெக்னாலஜி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினோம்.”

அந்த டெக்னாலஜி நிறுவனம்தான் எங்களுக்கு பெரிய வாய்ப்புகளைக் கொடுத்தது. அங்கு கிடைத்த வருமானத்தை வைத்துதான் ’டிக்கெட் 9’க்கான முதலீட்டை பெற்றோம். அதே சமயம் டெக்னாலஜி நிறுவனத்திலும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே வந்தது. சரியாக 2020ம் ஆண்டு பிப்ரவரியில் ticket9 என்ற இவெண்ட் டிக்கெட் புக்கிங் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கினோம்.

அந்த சமயத்தில்தான் கோவிட் வந்தது. அது எங்களுக்கு பெரிய இழப்பு. ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு ஆன்லைன் மூலம் இவென்ட்கள் நடக்கத் தொடங்கியது. அதனால் எங்களுக்கு பெரிய வாய்ப்புகள் உருவானது.

“பிஸிகல் இவென்ட் என்றால் கூட தமிழ்நாட்டுக்குள்தான் நாங்கள் தெரிந்திருப்போம். ஆனால், ஆன்லைன் ஈவென்ட் என்பதால் சர்வதேச அளவில் இருந்து பலரும் கலந்துகொண்டார்கள். அப்போதுதான் இதற்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு புராடக்ட்களில் பெரிய அளவில் கவனம் செலுத்தினோம்,” என சந்தோஷ் கூறினார்.
Get connected to Ticket 9ys-connect

ஈவென்ட் டிக்கெட்களில் பெரிய வாய்ப்பு இருக்கிறதா? என்னும் கேள்விக்கு யாழினி பதில் அளித்தார்.

”பெரும்பாலும் நமக்குத் தெரிந்ததுதெல்லாம் சினிமா மற்றும் விளையாட்டுக்கு டிக்கெட் புக்கிங் செய்வதுதான். ஆனால், இது இல்லாமல் 21 வகையான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவற்றுக்கு டிக்கெட் தேவை. இதுபோன்ற சேவைகளுக்கு டிக்கெட் வழங்கக் கூடிய டெக்னாலஜி நிறுவனங்கள் குறைவு என்பதால் எங்களுக்கான தேவை இருக்கிறது,” என்றார்.
ticket9 founders

நிதி தகவல்கள்

டிக்கெட்9 சில நாட்களுக்கு முன்பு $120,000 நிதியை முதலீடாக பெற்றது. தற்போதைக்கு கிடைத்திருக்கிருக்கும் இந்த தொகையை விரிவாக்கப்பணிகளுக்கு பயன்படுத்த இருக்கிறார்கள்.

“60 சதவீத தொகை டெக்னாலஜிக்கும் மீதமுள்ள 40 சதவீதம் மனிதவளத்தை மேம்படுத்தவும் பயன்படுத்த இருக்கிறோம். அதற்காக அதிக ஊழியர்களை எடுக்கும் திட்டமும் இல்லை. இன்னும் சில முக்கியமான பணியாளர்கள் இருந்தால் போதுமானது.”

நிதி நிலைமை குறித்த கேள்விக்கும் யாழினி பதில் அளித்தார். தற்போது திரட்டப்பட்டிருக்கும் நிதி அடுத்த 18 மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும். அதற்குள் புராடக்டை மேம்படுத்தி இருப்போம். தவிர தற்போது டிக்கெட் விற்பனை மூலம் வருமானமும் கிடைத்துக் கொண்டிருக்கிறது, என்கிறார்.

5 சதவீதம், 7%, 9% மற்றும் 13 சதவீதம் என ஈவெண்ட் மேனேஜர்கள் எங்களிடம் எடுக்கும் திட்டத்துக்கு ஏற்ப பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கிறார்கள் இவர்கள்.

”எங்களைப் பொறுத்தவரை எவ்வளவு டிக்கெட்கள் விற்பனை செய்கிறோம் என்பது முக்கியமில்லை. சில பெரிய ஈவெண்ட்களில் 5,000 டிக்கெட்கள் கூட விற்பனை செய்வோம். அதில் பெரிய அளவுக்கு எங்களுக்கு வருமானம் கிடைக்காது. ஆனால், சில கார்ப்பரேட் நிகழ்ச்சிகளுக்கு 10,000 ரூபாய் கூட டிக்கெட் இருக்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிகபட்ச இலக்கே 100 நபர்கள்தான். அதனால், இதுபோன்ற ஈவென்ட்களில் வருமானம் அதிகமாக இருக்கும். எனவே, நாங்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தயராகவே இருக்கிறோம்,” என்றார்.

ஈவென்ட்களுக்கு எதிர்காலம் இருக்கிறதா என்னும் கேள்விக்கு சந்தோஷ் பதில் அளித்தார். ஒவ்வொரு ஈவென்ட்களுக்கு சீசன் என்று இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். சில நகரங்களில் மழை இருக்கும், சில சமயங்களில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே நடக்கும். ஆனாலும் ஈவென்ட்களுக்கு தேவை இருக்கிறது.

மக்கள் நிகழ்ச்சிகளுக்கு செல்ல விரும்புகிறார்கள். பொழுதுபோக்குக்கு (இசை, எக்ஸ்போ உள்ளிட்ட பல) மட்டுமல்லாமல் பயிற்சிக்காகவும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்பதால் டிக்கெட்களுக்கான தேவை இருக்கிறது.”

தற்போது ஈவெண்ட்களுக்கான டிக்கெட் விற்பனை செய்யும் தளமாக இருக்கிறோம். விரைவில் நிகழ்ச்சிகளுக்கு செல்ல விரும்புகிறவர்கள் எங்கள் தளத்துக்கு வந்தால் அவர்களின் தேவை மற்றும் விருப்பத்துக்கு ஏற்ப எங்கு, எந்த நிகழ்ச்சி என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

ticket9 partnership

அதேபோல், டெக்னாலஜியையும் மாற்றி வருகிறோம். ஒரு நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் எங்கள் தளத்தில் டிக்கெட்டுக்கு பதிவு செய்துவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம். அவர்கள் மார்க்கெட்டிங்க்கு எவ்வளவு செலவு செய்தால் போதும், எப்போது மார்க்கெட்டிங்கை நிறுத்தலாம் என்பது உள்ளிட்ட பல அனல்டிக்ஸ்களையும் தர திட்டமிட்டிருக்கிறோம்.

தற்போது மும்பை, ஹைதராபாத், புனே,பெங்களூரு மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு எங்கள் தளத்தில் இருந்து டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம், என சந்தோஷ் கூறினார்.

டிக்கெடிங் என்றாலே சினிமா டிக்கெட் என்பதுதான் பலருக்கும் நினைவுக்கு வரும். அதில் கவனம் செலுத்துகிறீர்களா என்னும் கேள்விக்கு இப்போதைக்கு இல்லை. அதில் பல போட்டியாளர்கள் இருக்கிறார்கள், இங்கு போட்டியாளர்களும் குறைவு அதேசமயத்தில் வாய்ப்புகளும் அதிகம் என்பதால் இதர டிக்கெட் பிரிவுகளில் கவனம் செலுத்துகிறோம் என சந்தோஷ் தெரிவித்தார்.

மெட்ரோ நகரங்களில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே நிதி திரட்டும் என்னும் நிலையில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் நிதி திரட்டி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது..

Get connected to Ticket 9ys-connect