சென்னை சாஸ் ஸ்டார்ட்-அப் Trainn 7,00,000 டாலர் விதை நிதி திரட்டியது!
சென்னையைச் சேர்ந்த பி2பி சாஸ் ஸ்டார்ட் அப்பான Trainn விதை நிதியாக 7,00,000 டாலர் நிதி திரட்டியதாக அறிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த பி2பி சாஸ் ஸ்டார்ட் அப்பான Trainn விதை நிதியாக 7,00,000 டாலர் நிதி திரட்டியதாக அறிவித்துள்ளது.
ஸ்பெஷலே இன்வெஸ்ட் தலைமை வகித்த இந்த சுற்றில், சார்ஜ்பீ நிறுவனர்கள், பிரெஷ் வொர்க்ஸ் சி.டி.ஓ ஷான் கிருஷ்ணசாமி, Tracxn இணை நிறுவனர் அபிஷேக் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிதியின் மூலம் நிறுவனம் தனது குழுவை விரிவாக்குவது, சந்தைக்கு செல்லும் திட்டங்களை தீவிரமாக்குவது மற்றும் சேவைகள் உருவாக்கத்தை விரைவாக்குவது ஆகியவற்றில் ஈடுபட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாஸ் வர்த்தகங்கள் தங்கள் லாபத்தை அதிகமாக்கிக் கொள்ளவும், வாடிக்கையாளர் கல்வி மூலம் அவர்களை தக்க வைப்பது ஆகியவை தொடர்பாக Trainn சேவை வழங்குகிறது.
இணை நிறுவனர்கள் விவேகானந்தன் நடராஜன், சுமனா அபிராமி அம்மையப்பன் பயனாளிகளை ஈர்ப்பது, அவர்களுக்கு விழிப்புணர்வு அளிப்பது மற்றும் மென்பொருள் ஏற்பில் மேம்பட்ட தன்மை ஆகியவை தேவை என தங்கள் முந்தைய பணி அனுவபத்தால் உணர்ந்ததன் வாயிலாக Trainn நிறுவனத்தைத் துவக்கினர்.
நிறுவனத்தின் வீடியோ உருவாக்க மேடை, பயனாளிகளைக் கொண்டு வருவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆவணமாக்கல் ஆகிய செயல்முறைகளை எளிதாக்குகிறது. வீடியோ உருவாக்க அனுபவம் இல்லாதவர்களுக்கு வீடியோ செயல்முறையை எளிதாக்குகிறது.
"டிஜிட்டல்மயமாக்கல் வேகமாக நிகழ்ந்து வருவதால் வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் தொடர்பான கற்றலை அளிப்பது அவசியமாகிறது. பல நிறுவனங்கள் மோசமான பயனர் அனுபவம் காரணமாக, தங்கள் பயனாளிகளை இழக்கின்றன. எனினும் பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கும் தற்போதைய முறை மிகவும் பழமையானதாக இருக்கிறது. இந்தப் பிரிவில் நிறைய புதுமையாக்கத்திற்கான வாய்ப்பு உள்ளதை அறிந்து நிறுவனத்தை உருவாக்கினோம்,” என்று Trainn இணை நிறுவனர்கள் விவேகானந்தன் நடராஜன், சுமனா அபிராமி அம்மையப்பன் கூறியுள்ளனர்.
“சாஸ் நிறுவனங்கள் செயல்பாட்டை எளிதாக்கும் வகையில், புதுமையான எண்ணங்களை கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பார்ப்பது உற்சாகம் அளிக்கிறது. பொருள் சேவை பயிற்சி வீடியோ மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்களை ஏற்கச்செய்வதை விரைவாக்கும் வகையில் சேவை வழங்கும் Trainn நிறுவனம் நம்பிக்கை அளிக்கிறது. இந்தப் பிரிவில் நிறுவனம் ஏற்படுத்த உள்ள தாக்கத்தை காண ஆர்வம் கொண்டுள்ளோம்,” என்று Speciale Invest பொது பாட்னர் அருஜுன் ராவ் கூறினார்.
"பொருள்கள் ஏற்பில் அடிப்படையான விதத்தில் வீடியோவின் சாத்தியத்தை நிறுவனம் உணர்த்துகிறது. டிஜிட்டல் ஏற்பில் வீடியோ முக்கியப் பங்காற்ற இருக்கிறது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று ஸ்பெஷல் இன்வெஸ்ட் நிறுவனத்தின் இணை முதலீட்டாளர் தனுஷ் ராம் கூறியுள்ளார்.