கிரிப்டோகரன்சி வர்த்தகம் எளிதா? நம்பகமானதா? முதலீட்டில் உதவும் சென்னை நிறுவனம்!

By YS TEAM TAMIL|14th Jan 2021
2017-ம் ஆண்டு விக்ரம் சுப்புராஜ் மற்றும் அர்ஜுன் விஜய் தொடங்கிய சென்னையைச் சேர்ந்த Giottus Inc ஸ்டார்ட் அப் இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி முறையை ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதி செய்கிறது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

விக்ரம் சுப்புராஜ், அர்ஜுன் விஜய் இருவரும் ஐஐஎம் கொல்கத்தா முன்னாள் மாணவர்கள். இந்தியாவில் விர்ச்சுவல் கரன்சி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்யவும், கிரிப்டோகரன்சி (Crytocurrency) வர்த்தகத்தை எளிதாக்கவும் இவர்கள் இருவரும் இணைந்து 2017ம் ஆண்டு Giottus Inc என்கிற ஸ்டார்ட் அப் தொடங்கினார்கள்.


விக்ரம் அமேசான் நிறுவனத்திலும் அர்ஜுன் வோடஃபோன் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார்கள். வாடிக்கையாளர்கள் சேவையில் சிறப்புக் கவனம் செலுத்துவதில் அனுபவமிக்கவர்களாக இருந்தனர். இதன் முக்கியத்துவத்தையும் அறிந்திருந்தனர்.


கிரிப்டோகரன்சியைப் பலர் ஏற்றுக்கொள்ளவும் நம்பகத்தன்மையை உருவாக்கவும் வாடிக்கையாளர் சேவை முக்கியம் என்பதை இவர்கள் உணர்ந்தார்கள். இந்த இணை நிறுவனர்கள் இருவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் வாடிக்கையாளர் சேவையிலும் சிறப்பு கவனம் செலுத்தினார்கள்.


வாடிக்கையாளர்கள் தங்களது கிரிப்டோகரன்சியை தேவைக்கேற்ப டெபாசிட் செய்ய Giottus Inc உதவுகிறது.

சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம் ஆங்கிலம், இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வாங்குகிறது.
2

இந்நிறுவனம் ஓபன் ஆர்டர் புக் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச், P2P எக்ஸ்சேஞ்ச் (Peer-to-Peer), வாங்கி விற்கும் முறை என மூன்று விதங்களில் செயல்படுகிறது.


இதன்படி முதலீடு செய்பவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து Giottus கணக்கிற்கு தொகையை மாற்றி ஒரே நிமிடத்தில் கிரிப்டோகரன்சி வாங்கிவிடலாம்.


ஸ்பாட் எக்ஸ்சேன்ஞ் மூலம் வர்த்தகர்கள் உடனடியாக கிரிப்டோகரன்சி பரிமாற்றம் செய்ய முடியும். இந்நிறுவனத்தின் பிரத்யேக என்ஜின் வாடிக்கையாளர்களின் ஆர்டர்கள் உடனடியாக மேட்ச் செய்யப்பட உதவுகிறது.


P2P எக்ஸ்சேன்ஞ் முறையில் டிஜிட்டல் கரன்சிக்கான எஸ்க்ரோ (escrow) போன்று Giottus செயல்படுகிறது. இதன்படி வர்த்தகர்கள் நேரடியாக பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அதிக அளவில் வர்த்தகம் செய்பவர்கள் இந்த முறையை அதிகம் விரும்புவதாக இந்தத் தளம் குறிப்பிடுகிறது.

“ரீடெயிலர்கள் வாங்கும் விலையையும் விற்கும் விலையையும் தீர்மானிக்கலாம். மேலும் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட வங்கிச் சேவைகளையும் உடனடியாகப் பெறலாம். இதனால் வர்த்தகர்களால் எளிதாகப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது,” என்கிறார் விக்ரம்.

இந்நிறுவனத்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சில்லறை வர்த்தகர்கள். வாங்குவதற்கு 0.25 சதவீதமும் விற்பனைக்கு 0.15 சதவீதமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இந்தத் தளம் வாலட் சேவைகளையும் வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் விர்ச்சுவல் கரன்சிக்களை டெபாசிட் செய்யலாம்; ஹோல்ட் செய்யலாம்; எடுக்கலாம். இந்த வசதிகள் இதில் உள்ளன.


கிரிப்டோகரன்சிக்களை ஹோல்ட் செய்வதும் டெபாசிட் செய்வதும் இலவசமாகச் செய்ய முடியும். கிரிப்டோகரன்சிக்களை எடுப்பதற்கு நிலையான கட்டணம் வசூலிக்கப்படும். ஒவ்வொரு கரன்சிக்கும் இந்தக் கட்டணம் மாறுபடும்.

100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாக Giottus தெரிவிக்கிறது. 1,00,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். மூன்று மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகக் கோரிக்கைகளையும் 6,00,000-க்கும் அதிகமான பரிவர்த்தனைகளையும் பிராசஸ் செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

55 சதவீதம் லாபம் கிடைப்பதாகவும் வர்த்தகச் செயல்பாடுகள் மேலும் அதிகரிக்கும் சூழலில் லாபமும் அதிகரிக்கும் என்றும் இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

3

வங்கிகள் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை ஏற்கக்கூடாது என்று 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. பெரும்பாலான கிரிப்டோகரன்சி தளங்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டது. Giottus திட்டத்தை இந்த உத்தரவு பாதித்தது.


இதுதவிர வெற்றிகரமாக செயல்பட்டு வந்த பல்வேறு நிறுவனங்களுடன் Giottus போட்டியிட வேண்டியிருந்தது. இதுபோன்ற காரணங்களே P2P எக்ஸ்சேன்ஞ் முறையை அறிமுகப்படுத்தத் தூண்டுதலாக அமைந்தது. இந்தியாவிலேயே KYC சார்ந்த முன்னோடி முயற்சியாக இந்நிறுவனத்தின் P2P எக்ஸ்சேன்ஞ் கருதப்படுகிறது.

1

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு இந்திய கிரிப்டோகரன்சி துறைக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது என்கிறார் விக்ரம்.

“இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் கிரிப்டோகரன்சி துறை வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. Giottus வர்த்தக அளவும் ஒவ்வொரு மாதமும் 40 சதவீதம் வரை அதிகரித்தது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மாதாந்திர பயனர் பதிவுகளும் 15 மடங்கு அதிகரித்தது,” என்று குறிப்பிட்டார்.

வருங்காலத்தில் கிரிப்டோகரன்சி தொடர்பான வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் Giottus செயல்படும் என்று விக்ரம் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.


ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா