சிறு நிறுவனங்கள் கல்லா பெட்டியை நிரப்ப உதவிடும் சென்னை ஸ்டார்ட்-அப் ‘Gallabox'
அமெரிக்காவில் பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதைவிட இந்தியாவில் பெரிய வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் 7 கோடி சிறு நிறுவனங்கள் உள்ளன. டிஜிட்டலுக்கு மாறாமல் தொழில் விரிவடையாது என்பதை சிறு நிறுவனங்களும் புரிந்து வைத்துள்ளன. அதனால் இங்கு வாய்ப்பு அதிகம், அதற்கு ஏற்ற கட்டணத்தை நிர்ணயம் செய்திருக்கிறோம
Funding winter என பெரும்பாலான முதலீட்டாளர்கள் பேசி வரும் சூழலில் (அதாவது, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவது கடினமாகி வருவதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது).
சிறப்பாக செயல்பட்டுவரும் நிறுவனங்களுக்கு நிதி கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. சில வாரங்களுக்கு முன்பு ‘
' என்ற சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் 1.2 மில்லியன் டாலர் நிதியை திரட்டி இருக்கிறது.பிரைம் வென்ச்சர் பார்ட்னஸ், 100X எண்டர்பிரனர் ஃபண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் முதலீடு செய்திருக்கின்றன. இதுதவிர சில ஏஞ்சல் முதலீட்டாளர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு (2021 டிசம்பர்) தமிழக அரசின் ஸ்டார்ட்-அப் சீட் ஃபண்ட் தொகையாக ரூ.5 லட்சத்தையும் ’கல்லாபாக்ஸ்’ பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
எப்படி உருவானது Gallabox
கார்த்திக் ஜெகந்தாதன், யோகேஷ் நாராயணன் மற்றும் யதிந்தர் பஞ்சநாதன் ஆகிய மூன்று நண்பர்கள் இணைந்து உருவாக்கிய நிறுவனம் இது. வழக்கமாக ஒரு சில ஆண்டுகள் பணிபுரிந்த உடன் நிறுவனம் தொடங்குவதுதான் வழக்கம். ஆனால், 20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் வாய்ந்த இவர்கள், ‘கல்லாபாக்ஸ்’ என்னும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட பின்னணி இருந்து வந்தாலும், இவர்கள் இணைந்தது சுலேகா நிறுவனத்தில் பணிபுரிந்தபோதுதான். அங்கு பல ஆண்டுகள் ஒன்றாக இணைந்ததால் இவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. சுலேகா என்பது சிறு நிறுவனங்களுக்கான சேவை வழங்கும் நிறுவனம்.
சுலேகாவில் பணிபுரிந்த போது சிறு நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்கள், சவால்கள் என்ன என்பது குறித்த புரிதல் இருந்தது. அதனால் அது தொடர்பாக நிறுவனம் ஒன்றை தொடங்கவேண்டும் என்னும் திட்டம் இவர்களுக்குள் இருந்துள்ளது.
சிறு நிறுவனங்களுக்கு ஒரு லீட் கிடைக்கும். அதனை பிஸினஸாக மாற்றுவதில்தான் வெற்றி இருக்கிறது. அங்குதான் இவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. லீட் கிடைப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. அதனை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தன. அதுதான் வாய்ப்பு என முடிவெடுத்துவிட்டனர் இந்த நண்பர்கள்.
போன் மூலம் தொடர்பு, இ-மெயில் கம்யூனிகேஷன், எஸ்.எம்.எஸ். தொடர்பு போன்றவற்றின் செயல்பாடு படிப்படியாக குறைந்துகொண்டே வந்தது. இந்த சமயத்தில் வாட்ஸ்-அப் பயன்பாடு அதிகரித்தது.
மேலும், ’வாட்ஸ்ஆப் பிஸினஸ்’ ஏபிஐ-யும் அறிமுகம் செய்தது. தவிர சர்வதேச அளவில் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் இருக்கிறது என்பதால் அதன் மூலம் சிறு நிறுவனங்களுக்கு உதவவேண்டும் என நினைத்தோம், என கார்த்திக் கூறினார்.
சிறு நிறுவனங்களில் பல பணியாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாட்ஸ் அப் எண்ணை பயன்படுத்துவார்கள். பணியாளர்கள் வருவார்கள், போவார்கள் என்ன நடக்கிறது என்பது நிர்வாகத்துக்கு தெரியாது. இதனால் பல தவறுகள் நடந்தன. அதனால்,
”ஒரு நிறுவனத்துக்கு ஒரு வாட்ஸ் அப் எண். அதில் எத்தனை ஆயிரம் பரிவர்த்தனைகள் நடந்தாலும் ஒரே இடத்தில் பார்த்துக்கொள்ள முடிகிற மாதிரியான ஒரு சாப்ட்வேர் வடிவமைக்க வேண்டும்,” என முடிவெடுத்தோம், என்றனர்.
இதன் மூலம் எவ்வளவு லீட் வருகிறது. அதன் தற்போதைய நிலை என்ன, யார் வாடிக்கையாளர்களாக மாறி இருக்கிறார்கள், அந்த பரிவர்த்தனையில் என்ன தவறு நடக்கிறது என்பது உள்ளிட்ட பலவற்றையும் ஒரே இடத்தில் பார்த்துக்கொள்ள முடியும்.
என்ன செய்கிறோம் என்பது தெளிவாகி விட்டது. இந்த சமயத்தில் வேலையை விட முடிவெடுத்த சமயத்தில் கோவிட் வந்தது. பலரும் இதுபோன்ற நிச்சயமற்ற சூழலில் வேலையை விட வேண்டாம் என ஆலோசனை சொன்னார்கள். ஆனால், சிலர் இது சரியான வாய்ப்பு. இந்த சமயத்தில்தான் பிரச்சினையின் தீவிரம் புரியும் அதனால் வளர முடியும் என சொன்னார்கள்.
அதனால் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் ‘Gallabox' நிறுவனத்தை ஆரம்பித்தோம். அடுத்தடுத்த சில மாதங்களில் யோகேஷும், யதிந்தரும் வந்தார்கள்.
'கல்லாபாக்ஸ்' பிஸினஸ் மாடல்
ஒரு தீர்வு அல்லது ஆலோசனை நிறுவனமாக அல்லாமல் ப்ராடக்ட் நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் திட்டம் அதற்கு ஏற்ற ப்ராடக்ட்யும் நாங்கள் கண்டறிந்துவிட்டோம்.
இதுதான் திட்டம் என்று முடிவெடுத்தவுடன் பல சிறு நிறுவனங்களுக்குச் சென்று அவர்களிடம் பேசினோம். அவர்களின் பிரச்சினையை மேலும் தீவிரமாக புரிந்துகொண்டோம். அதற்கு ஏற்ற ப்ராடக்டை உருவாக்கினோம்.
”ஆனால் நமக்குத் தெரிந்தவர்களிடம் ப்ராடக்டை கொடுத்து உபயோகப் படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். சந்தையில் மார்கெட் செய்வோம். அவர்களாக வந்து கேட்கட்டும் என்பதுதான் திட்டம். இயல்பாக வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினார்கள்,” என்றார் கார்த்திக்.
வாடிக்கையாளர்கள் வந்த பிறகுதான் ஏஞ்சல் ஃபண்ட் திரட்டினோம். தற்போது வரை 600க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எங்களது ப்ராடக்டை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள், என யதிந்தர் கூறினார்.
வழக்கமாக சாஸ் நிறுவனங்களின் வருமானம் அமெரிக்காவில் இருந்துதான் வரும். இந்தியாவில் ப்ராடக்டை உருவாக்கி அமெரிக்காவில் விற்பார்கள். ஆனால், இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் என்பது சரியானயுத்தியா என்னும் கேள்விக்கு? விரிவாக பதில் அளித்தார் யதிந்தர்.
சர்வதேச அளவில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் இந்தியாதான் மிக அதிகம். நான்கில் ஒரு வாட்ஸ்அப் பயன்பாட்டாளர் இந்தியாவில்தான் இருக்கிறார். 200 கோடி நபர்களில் இந்தியாவில் மட்டும்50 கோடி பேர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், பிரேசில் உள்ளிட்ட தெற்கு அமெரிக்கா நாடுகள் வாட்ஸ் அப் அதிகம் பயன்படுத்துகின்றன. இந்த நாடுகளிலும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆனால் நாங்கள் பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்யவில்லை. இயல்பாகவே எங்களுக்கு வாடிக்கையாளர்கள் வந்தார்கள்.
தற்போது வாங்கி இருக்கும் நிதி மூலம் சந்தை விரிவாக்கத்துக்கு பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அமெரிக்காவில் எங்களுக்கு சில வாடிக்கையாளர்கள் இருந்தாலும் அமெரிக்காவில் ஐபோன் பயன்பாடு அதிகம். அவர்கள் பிரத்யேக மெசேஜிங் செயலியை பயன்படுத்துகிறார்கள். அதற்கு ஏற்ற புதிய ப்ராடக்ட் உருவாக்க வேண்டும். இதுதான் திட்டம்.
”ஒரு மாதம் ஒரு பயனாளருக்கு ரூ.500 மட்டுமே வாங்குகிறோம். அமெரிக்காவில் பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதைவிட இந்தியாவில் பெரிய வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் 7 கோடி சிறு நிறுவனங்கள் உள்ளன. டிஜிட்டலுக்கு மாறாமல் தொழில் விரிவடையாது என்பதை சிறு நிறுவனங்களும் புரிந்து வைத்துள்ளன. அதனால் இங்கு வாய்ப்பு அதிகம், அதற்கு ஏற்ற கட்டணத்தை நிர்ணயம் செய்திருக்கிறோம்,” என யதிந்தர் கூறினார்.
வருமானம் குறித்த கேள்விக்கு, தற்போதைய வருமானம் என்ன என்று சொல்வதை விட ஒரு மில்லியன் டாலர் வருமானம் என்னும் இலக்கை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவின் பல முக்கிய பிராண்ட்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு பாதிக்கு மேல் இந்த இலக்கை அடைவோம்.
27 ஊழியர்களை வைத்துக்கொண்டே இந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்று யோகேஷ் கூறினார்.
அது என்ன ’கல்லாபாக்ஸ்’ என்னும் கேள்விக்கு கார்த்திக் பதில் அளித்தார்,
”பெரு நிறுவனங்கள் பேலன்ஸ் ஷீட் உள்ளிட்ட பெரிய பெரிய வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். சிறிய நிறுவனங்களுக்கு என்றும் ’கல்லா பெட்டி’தான். அதில் இருந்துதான் ’கல்லாபாக்ஸ்’ கொண்டுவந்தோம். இந்த பெயர் கிடைத்தது உடனே எடுத்துக்கொண்டோம்,” எனக் கூறினார்.
அமெரிக்க சந்தை குறிவைத்து செயல்படும் சாஸ் நிறுவனங்களுக்கு மத்தியில் இந்திய சந்தையை குறிவைக்கும் கல்லாபாக்ஸ்-இன் வருங்காலம் சிறப்பாக இருப்பது நமக்குத் தெரிந்தது.
பொருட்கள் அழுகாமல் குளிர் சேமிப்புத் தீர்வுகளை வழங்கும் சென்னை ஸ்டார்ட் அப்!