பொருட்கள் அழுகாமல் குளிர் சேமிப்புத் தீர்வுகளை வழங்கும் சென்னை ஸ்டார்ட் அப்!
ஐஐடி மெட்ராஸ் பட்டதாரிகளான சௌமால்யா முகர்ஜி, ரஜனி காந்த் ராய், ஷிவ் ஷர்மா மூவரும் இணைந்து Tan90 தொடங்கி குளிர் சேமிப்பு வசதியை வழங்கி ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களுக்கும் சேவையளித்து வருகின்றனர்.
உணவுப்பொருட்கள், மருந்துகள், தடுப்பூசிகள் போன்ற ஏராளமான பொருட்கள் சரியான வெப்பநிலையில் இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் அந்தப் பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப்படும். இதற்கு பல நிறுவனங்கள் குளிர் சேமிப்பு வசதியை வழங்கி வருகின்றன.
பெரியளவில் செயல்படும் சில்லறை வர்த்தகங்கள் மையப்படுத்தப்பட்ட குளிர் சேமிப்பு வசதிகளையும் அதற்குரிய போக்குவரத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்கின்றன. ஆனால் சிறியளவில் செயல்படும் சில்லறை வர்த்தகங்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு தீர்வளிக்கிறது சென்னையைச் சேர்ந்த
நிறுவனம். அழுகும்தன்மை கொண்ட பொருட்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல இந்த ஸ்டார்ட் அப் உதவுகிறது. ஐஐடி மெட்ராஸ் பிஎச்டி பட்டதாரிகளான சௌமால்யா முகர்ஜி, ரஜனி காந்த் ராய், ஷிவ் ஷர்மா ஆகிய மூவரும் இணைந்து Tan90 தொடங்கியுள்ளனர்.இந்நிறுவனம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகியுள்ளன.
, , போன்ற பிரபல உணவு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஃப்ரோசன் உணவுகள், ஐஸ்கிரீம் போன்றவற்றைக் கொண்டு செல்ல Tan90 சேவைகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன.Tan90 திறம்பட சேமிக்க உதவுவதாகவும் ஃப்ரீசிங் நேரத்தை வெகுவாகக் குறைப்பதாகவும் நிறுவனர்கள் தெரிவிக்கிறார்கள்.
“Phase Chage Materials (PCM) காப்புரிமை பெற்றிருக்கிறோம். இதன் மூலம் வணிகங்கள் அழுகும்தன்மை கொண்ட பொருட்களைத் திறம்படப் பாதுகாக்கலாம். +30 டிகிரி முதல் -24 டிகிரி செண்டிகிரேட் வரை கவர் செய்யும்,” என்கிறார் Tan90 இணை நிறுவனர் சௌமால்யா.
மைக்ரோ குளிர் சேமிப்பு பாக்ஸ் மற்றும் பேக் என ஆறு பிராடக்டுகளுடன் இந்த ஸ்டார்ட் அப் விரிவாக சேவையளிக்க விரும்புகிறது.
வெப்பநிலையைப் பொருத்து விலை மாறுபடுகிறது. -1 டிகிர் நான்கு பேனல்கள் கொண்ட 50 லிட்டர் பாக்ஸ் விலை ஏறத்தாழ 3,600 ரூபாய் ஆகும். 20 லிட்டர் முதல் 50 லிட்டர் வரையிலான திறன் கொண்ட பேக் 1,200 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை ஆகும் என்கின்றனர் இந்நிறுவனர்கள்.
மேம்பட்ட விநியோக சங்கிலி
நாங்கள் வழங்கும் தீர்வுகளைக் கொண்டு எங்கள் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு இன்சுலேடட் ட்ரக்கையும் ரீஃபர் கண்டெயினராக மாற்றிக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல பகுதியாக ட்ரக்கில் லோட் செய்துகொள்ளவும் முடியும்,” என்கிறார் சௌமால்யா.
இண்டஸ்ட்ரியல் கூலிங், HVAC போன்ற இதர பிரிவுகளுக்கும் இந்த ஸ்டார்ட் அப் தீர்வளிக்கிறது.
PCM வடிவமைக்கும்போது Tan90 மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தியுள்ளது.
- கூலிங் மெட்டீரியல்களுக்கு குறைவான சார்ஜிங் நேரம் இருக்கவேண்டும் (Faster Freezing).
- அதிக திறன் கொண்ட ஆற்றல் சேமிப்பு இருக்கவேண்டும் (Higher latent heat)
- சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாகவும் முறையாக அப்புறப்படுத்தும் வகையிலும் இருக்கவேண்டும்.
குழு விவரங்கள்
வெவ்வேறு பிரிவுகளில் கவனம் செலுத்தும் 15 பேர் இந்நிறுவனத்தின் குழுவில் செயல்படுகின்றனர்.
சௌமால்யா பயோடெக்னாலஜி மற்றும் கெமிஸ்டரி பிரிவில் பிஎச்டி முடித்திருக்கிறார். வணிக மேம்பாடு, நிர்வாக செயல்முறைகள் போன்றவற்றை கவனித்துக்கொள்கிறார்.
ஷிவ் மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவில் பிஎச்டி முடித்துள்ளார். வணிக செயல்பாடுகள் மற்றும் தயாரிப்புப் பணிகளை கவனித்துக்கொள்கிறார்.
ரஜனி காந்த் ராய் கெமிஸ்டரி மற்றும் பயோடெக்னாலஜி பிரிவில் பிஎச்டி முடித்திருக்கிறார். இவர் ஆர்&டி மற்றும் தயாரிப்புப் பணிகளுக்கு பொறுப்பேற்றிருக்கிறார்.
நிதி மற்றும் வருவாய்
Tan90 நிறுவனம் சமீபத்தில் ப்ளூ அஷ்வா கேப்பிடல், 3i பார்ட்னர்ஸ் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து 5 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இதற்கு முன்பு சீட் நிதிச்சுற்றில் Tan90 Socia Alpha, CIIE Initiatives ஆகியவற்றின் மூலம் 90 லட்ச ரூபாய் திரட்டியுள்ளது.
தற்போது திரட்டப்பட்டுள்ள நிதியைக் கொண்டு குழுவை விரிவுபடுத்தவும் ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, புனே, டெல்லி ஆகிய ஐந்து முக்கிய நகரங்களில் விரிவடையவும் திட்டமிட்டுள்ளது. ஆர்&டி மற்றும் வணிக வளர்ச்சியில் கவனம் செலுத்த உள்ளது.
Krishnamangal, CISCO CSR திட்டத்தின் ஒரு பகுதியாக Tan90 போர்டபிள் கோல்ட் ஸ்டோரேஜ் யூனிட்களை ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் நிறுவியுள்ளது.
BIRAC கவுன்சிலிடமிருந்து BIG கிராண்ட் வடிவில் 50 லட்ச ரூபாய் பெற்றுள்ளது. United Nations Industrial Development Organization (UNIDO) நிறுவனத்திடமிருந்து 35 லட்ச ரூபாய் பெற்றுள்ளது.
கிட்டத்தட்ட 20 சதவீத லாபத்துடன் Tan90 செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
“கடந்த ஆறு மாதங்களில் Tan90 ஐந்து மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. வரும் காலாண்டில் இந்த வளர்ச்சியை இருமடங்காக அதிகரிக்கச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெப்ப அலை அதிகரித்து வரும் நிலையில் Tan90 இந்த நிதியாண்டில் இறுதியில் 20 கோடி ரூபாய் வருவாயை எட்ட திட்டமிட்டிருக்கிறது,” என்கிறார் சௌமால்யா.
அதேபோல் இந்த நிதியாண்டில் இறுதியில் சீரிஸ் ஏ நிதிச்சுற்று திரட்டவும் Tan90 திட்டமிட்டுள்ளது.
வருங்காலத் திட்டங்கள்
“இந்தியாவில் ரயில்களில் பொருட்களைக் கொண்டு செல்ல குளிர் சேமிப்பு வசதியை வழங்கும் ஒரே நிறுவனம் Tan90 மட்டுமே. தற்போதுள்ள கட்டமைப்பு வசதிகளின் மூலம் எங்கள் பார்ட்னர்களுடன் இணைந்து ஏழு வழித்தடங்களில் Cooling as a service மாதிரியில் தீர்வளித்து வருகிறோம். அடுத்த காலாண்டில் 20 வழித்தடங்களில் சேவையளிக்கும் வகையில் விரிவடைய திட்டமிட்டிருக்கிறோம்,” என்கிறார் சௌமால்யா.
அவர் மேலும் கூறும்போது,
“இரண்டு கிளையண்ட்களுடன் சேர்ந்து வழித்தடங்களைத் திட்டமிட்டு வருகிறோம். இதன் மூலம் கர்நாடகா, உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளிலும் சேவையளிக்க இருக்கிறோம்,” என்கிறார்.
பிராடக்டுகளை விரிவுபடுத்தவும் டெம்பரேச்சர் கண்ட்ரோல் ரேஞ்ச் +130 முதல் -60 வரை வழங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் கவனம் செலுத்துவதுடன் பிலிப்பைன்ஸ், தென்கிழக்கு ஆசியா ஆகிய சந்தைகளிலும் சேவையளிக்க விரும்புவதாக சௌமால்யா தெரிவிக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: சுஜாதா சங்வன் | தமிழில்: ஸ்ரீவித்யா