பிராண்ட் கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து ரூ.7 கோடி முதலீடு பெற்ற சென்னை ஸ்டார்ட்-அப் Exoticamp
இந்த கூட்டாண்மை Exoticamp-ன் பிராண்ட் வெளிச்சத்தை பரவலாக்கும் மேலும் இந்தியா முழுவதும் அதன் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும்.
சென்னை ஸ்டார்ட்-அப் நிறுவனமான Exoticamp நிறுவனம் ரூ.7 கோடியை முதலீடாக பிராண்ட் கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது. இது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதலீட்டு நிறுவனமாகும்.
இந்த கூட்டாண்மை Exoticamp-ன் பிராண்ட் வெளிச்சத்தை பரவலாக்கும் மேலும் இந்தியா முழுவதும் அதன் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும். இது பரந்த பார்வையாளர்களுக்கு தனித்துவமான வெளிப்புற சாகச அனுபவங்களை வழங்கும் என்று எக்சாட்டிகேம்ப் நிறுவனம் கூறியுள்ளது. ஜூலை 2024-ல் அதன் முதல் சுற்று நிதி திரட்டலில் இருந்து, Exoticamp வேகமாக விரிவடைந்துள்ளது, இப்போது 13 மாநிலங்களில் 300 கேம்ப்சைட்களை இயக்குகிறது.
இந்த புதிய வர்த்தகம் சார் முதலீட்டு திரட்டல் மூலம் பிராண்ட் கேப்பிடல் வழங்கும் விரிவான ஊடகச் செல்வாக்கைப் பயன்படுத்தி சாகச மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாத் துறையில் அதன் இருப்பை வலுப்படுத்துவதையும் செயல்பாடுகளை மேலும் விரிவாக்கம் செய்வதையும் Exoticamp நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக எக்சாட்டிகேம்ப் சி.இ.ஓ.வும் இணை நிறுவனருமான சுவாமிநாதன் சுப்ரமணியன் கூறும்போது,
“பிராண்ட் கேப்பிடல் முதலீடு எங்களுக்கு உற்சாகமூட்டுகிறது. இந்த கூட்டாண்மை, முகாம்களை அணுகக்கூடியதாக மாற்றுவது, இந்தியா முழுவதும் நிலையான சுற்றுலாவை மேம்படுத்துவது என்ற எங்கள் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. இந்த ஒப்பந்தம் எங்கள் வணிக மாதிரியின் மீதான நம்பிக்கையின் எதிரொலி மட்டுமல்ல, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான வழியில் இயற்கையை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான எங்கள் பணியில் ஒரு முக்கிய படியென்று கருதுகிறேன்.“
இந்த கூட்டாண்மையானது எங்களின் திட்டங்களை அதிக பார்வையாளர்களிடம் கொனடு செல்லவும், இந்தியாவில் க்யூரேட்டட் கேம்பிங் அனுபவங்களுக்கான ஈர்க்கும் ஒரே பிராண்டாகவும் Exoticamp-ஐ உருவாக்கவஉதவும், என்றார்.
பிராண்ட் கேப்பிடல் நிறுவனத்தின் உயரதிகாரி ஸ்ரீநி உதயகிரி கூறும்போது,
“கேம்பிங் இப்போது Gen-z மத்தியில் பிரபலமாகி வருகிறது, மேலும் சாகச விரும்பிகளுக்குப் பாதுகாப்பான, தனித்துவமான அனுபவம் தேவை. எக்சோடிகாம்பில் எங்களது முதலீடு இளம் இந்தியர்களுக்கு, பயணிகள் தேடும் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரே பிராண்டாக விளங்க உதவும்,” என்றார்.