பட்டாபிராமில் ரூ.330 கோடி மதிப்பில் டைடல் பார்க் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
தமிழ்நாட்டின் வட பகுதிகளில் உள்ள நகரங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் வகையில் திருவள்ளுவர் மாவட்டம் பட்டாபிராமில், ரூ.330 கோடி செலவில் மாபெரும் டைடல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் வட பகுதிகளில் உள்ள நகரங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் வகையில் திருவள்ளுவர் மாவட்டம் பட்டாபிராமில், ரூ.330 கோடி செலவில் அமைந்துள்ள மாபெரும் டைடல் பூங்காவை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டை 1 லட்சம் கோடி பொருளதாரமாக உயர்த்தும் நோக்கத்துடன் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்காக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் தேவையை புரிந்து கொண்டு கடந்த திமுக ஆட்சி காலத்தில், புத்தாயிரமாண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் சென்னை தரமணியில் டைடல் பார்க் அமைக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் மற்ற நகரங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டின் வட பகுதிகளில் உள்ள நகரங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் வகையில் திருவள்ளுவர் மாவட்டம் பட்டாபிராமில், ரூ.330 கோடி செலவி அமைந்துள்ள மாபெரும் டைடல் பூங்காவை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
11.41 ஏக்கர் பரப்பளவில், ரூ. 330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இது அமைந்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான நவீன தொலைத்தொடர்பு வசதிகள், அதி நவீன மின் வசதி, பார்க்கிங் வசதி, உணவகம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை இங்கு அமைந்துள்ளன. 6,000 தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாற்றும் வகையில் பசுமை கட்டமைப்பில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் வட பகுதி மாவட்டங்களில் வளர்ச்சிக்கு இந்த பூங்கா வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறு,குறும் மற்றும் நடுத்தர தொழில்கள் துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், நிறுவனங்களுக்கு பூங்காவில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முதல்வர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், சிறு, குறும் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர் எஸ்.எம்.நாசர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முழுவதும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் முதற்கட்டமாக 18.18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதல்வர்ம் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது தொடர்பான தகவலை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Edited by Induja Raghunathan