‘சீன ஆப்’கள் தடை இந்திய டிஜிட்டல் புரட்சிக்கு வழிசெய்யும்’ - இந்திய டெக் நிறுவனங்கள்!
இந்திய அரசின் சீன ஆப்’கள் மீதான தடை அறிவிப்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் வரவேற்பதோடு, இது பல இந்திய நிறுவனங்கள் வளர வழி செய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
நேற்று இந்திய அரசு அறிவித்த 59 சீன ஆப்’களுக்கான தடை, இந்திய டிஜிட்டல் சூழலையும், உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊக்கமாக அமையும் என்றும் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்’கள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். பிரதமர் மோடியின் ‘ஆத்மநிர்பர்’ அதாவது சுயசார்பு இந்தியா கனவுக்கு இது வழி செய்வதாக இருக்கும் என்று கருதுகின்றனர்.
டிக்டாக், ஹலோ, வீசேட் உள்ளிட்ட 59 சீன ஆப்கள் தடைச்செய்யப்பட்டுள்ள பட்டியலில் உள்ளது. அண்மையில் நடைப்பெற்ற இந்திய-சீன எல்லைப் பிரச்சனையின் விளைவாக இது பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தரவுகளை இந்தச் செயலிகள் மூலம் சீனா பெறுவதாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்தே இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாகவும் ஊறுவிளைவிப்பதாகவும் இருக்கும் என்பதால் இந்தச் செயலிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை, சீன நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான டாலர்கள் நஷ்டம் ஏற்படுத்தும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நஷ்டம் இந்தியாவுக்கான லாபம், என டெக் ஸ்டார்ட்-அப்கள் கருதுகின்றன. சீன ஆப்களுக்கான மாற்று இந்திய ஆப்’களுக்கான சந்தை உருவாகும் என்றும் இது பார்க்கப்படுகிறது.
“இது ட்ஜிட்டல் சுயசார்பு இந்தியாவுக்கான நேரம். இதைத்தான் தற்போது பெரும்பாலான இந்தியர்கள் ஆதரித்து வருகின்றனர்,” என்றார் InMobi நிறுவனர் மற்றும் சிஇஒ நவீன் திவாரி.
InMobi கடந்த ஆண்டு Roposo என்ற வீடியோ தயாரிக்கும் தளத்தால் கையகப்படுத்தப்பட்டது. சுமார் 42 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள இத்தளம், பல இந்திய மொழிகளில் உள்ளது.
“கூகிள் ப்ளேஸ்டோரில் முதல் இடத்தில் உள்ள Roposo தற்போது மேலும் வளர்ச்சி அடையும். 55 மில்லியன் இந்திய பயனர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவுடன் முன்னேறிச் செல்லும்,” என்றார் நவீன்.
Chingari என்ற மற்றொரு இந்திய வீடியோ பகிரும் தளம், இந்தியச் சந்தையில் முன்னிலையில் செல்ல இந்த முடிவு உதவிடும் என்று கருதுகின்றனர்.
“இந்திய அரசாங்கம் மற்றும் ஐடி துறை எடுத்துள்ள இந்த தடை முடிவு வரவேற்கத்தக்கது. டிக்டாக் இந்திய பயனர்களைக் கண்காணித்து, தரவுகளை சீனாவுக்கு அளித்துவருகிறது. தற்போது இதற்கான முடிவு வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் Chingari இணை நிறுவனர் சுமித் கோஷ் தெரிவித்தார்.
இந்திய நிறுவனங்களுக்கு இது ஒரு ஊக்கமான விஷயம். டிக்டாக் பயனர்கள் Chingari ஆப் பயன்படுத்த சுமித் கேட்டுக்கொண்டார்.
இது 100 சதவீதம் இந்தியாவில் தயாராகும் ஆப், இந்தியர்களுக்காக இந்தியர்களால் வடிவமைக்கப்பட்டது. இதுவரை 30 லட்சம் டவுன்லோட்கள் உள்ள இந்த ஆப் 1 மணி நேரத்துக்கு 1 லட்சம் பதிவிறக்கம், ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் 10 லட்சம் பார்வைகளை வீடியோக்கள் பெற்றுவருகிறது,” என Chingari, நிறுவனக்குழு உறுப்பினர் ஆதித்யா தெரிவித்தார்.
“இது இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. இந்தியாவின் டெக் நிறுவனங்கள் உள்நாட்டில் வளர்ச்சி அடைய, புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த சரியான தருணம்,” என்றார் ஆதித்யா.
டிக்டாக் தடை செய்யப்பட்டு சில மணிநேரங்களில் சுமார் 10 லட்சம் டவுன்லோட்களை
Chingari பெற்றதாகவும் தெரிவித்தார்.
Trell இணை நிறுவனர் புல்கிட் அகர்வால் அரசின் இம்முடிவரை வரவேற்றார்.
“சீன மொபைல் செயலிகளின் தடை என்பது தைரியமான முடிவாகும். இது நம்மை ஆத்மநிர்பரை நோக்கி இட்டுச்செல்லும், இந்திய ஆப்’கள் மேலோங்கும்,” என்றார்.
இந்த புதிய முடிவால் எங்களைப்போன்ற ஸ்டார்ட்-அப்’கள் டிஜிட்டல் இந்தியாவில் புரட்சி புரிய தயாராக இருக்கின்றோம். இதன் மூலம் நிலையான வருவாய் ஈட்டவும் காத்திருக்கின்றோம்.
பிரபல முதலீட்டாளர் மற்றும் ஆக்செல் பார்ட்னர் ப்ரயன்க் ஸ்வரூப், சீனா நிறுவன ஆப்’களுக்கு மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப் நிறுவனங்களை அழைத்துள்ளார்.
“நீங்கள் சீன ஆப்’களுக்கு மாற்றாக இந்தியாவில் ஆப் உருவாக்கினால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். [email protected] மெயில் அனுப்புங்கள்,” என ட்விட்டரில் பதிவிட்டார்.
தகவல் பாதுகாப்பு மற்றும் காப்புரிமை சட்டங்களை வலுவாக்குதல்
நேற்றைய தடை அறிவிப்பு வந்தவுடன், பல இந்திய நிறுவனங்கள் தகவல் பாதுகாப்பு சட்டத்தை வலுவாக்கக் கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். நாஸ்காம் தலைவர் தேப்ஜானி கோஷ்,
“இதைவிட இந்திய ஸ்டார்ட்-அப்’களுக்கு ஒரு நல்ல நேரம் இருக்காது. இதுவே உள்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு தங்களின் புத்தாக்கத்தை காட்டவேண்டிய நேரம். பாதுகாப்புடன் நம்பகத்தன்மை கொண்ட தொழில்நுட்ப ஆக்கங்களை செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு,” என்றார் விவேக் சாண்டி, ஜே சாகர் அசோசியேட்ஸ் நிர்வாக பங்குதாரர்.
இதனிடையே டிக்டாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் சீன அரசுக்கு எவ்வித தகவலும், பயனர்களின் தரவுகளையும் அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா