Floik நிறுவனத்தை கையகப்படுத்தியது கோவை சாஸ் நிறுவனம் Kovai.co
கோவையைச் சேர்ந்த சாஸ் சேவை நிறுவனம் Kovai.co, தனது ஏஐ சார்ந்த டாக்குமெண்ட் 360 மேடையை மேம்படுத்துவதற்காக, பெங்களூருவைச் சேர்ந்த Floik சாஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த சாஸ் சேவை நிறுவனம் கோவை.கோ (Kovai.co), தனது ஏஐ சார்ந்த டாக்குமெண்ட் 360 மேடையை மேம்படுத்துவதற்காக, பெங்களூருவைச் சேர்ந்த ஃபிளோய்க் (Floik) சாஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த கையகப்படுத்தலின் நிதி விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
"Floik திறனை டாக்குமெண்ட் 360 சேவையில் ஒருங்கிணைப்பது வழக்கமான ஆவணப்படுத்தலை கடந்து அமையும் துடிப்பான அறிவு நிர்வாக சேவையை வழங்கும் எங்கள் நோக்கத்துடன் பொருந்துகிறது,” என Kovai.co நிறுவன சி.இ.ஓ சரவண குமார் கூறியுள்ளார்.
"Floik’-ன் தொடர்பு தன்மை கொண்ட சாதனங்கள் மேலும் ஈடுபாடு தரக்கூடிய, தாக்கம் மிகுந்த அனுபவத்தை பயனாளிகளுக்கு அளிக்க உதவும். பயனாளிகள் மென்பொருளின் தன்மை உணர்த்து அவற்றை பயன்படுத்தும் புரிதலை அளிக்கும். எங்கள் அறிவு நிர்வாக மேடை மூலம் ஆண்டு அடிப்படையில் 35 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
2022ல் வர்திகா பன்சால் மற்றும் வித்யாசங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரால் தொடங்கப்பட்ட, எலிவேஷன் கேபிடல் ஆதரவு பெற்ற Floik,-இன் பிராடகட் டெமோ மற்றும் வழிகாட்டிகள் மூலம் மென்பொருள் ஏற்பை மேம்படுத்துவதற்கான சாதனங்களை உலக அளவில் 8,000 பயனாளிகளுக்கு மேல் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த கையகப்படுத்தலை தொடர்ந்து, இந்த அம்சங்கள் இனி டாக்குமெண்ட் 360 சேவையில் கிடைக்கும். நிறுவனத்தின் 2,500 சர்வதேச வாடிக்கையாளர்கள் இதனால் பயன் அடைவார்கள்.
“கோவை.கோ நிறுவனத்துடன் இணைந்து, அறிவு நிர்வாக மென்பொருளை மேலும் ஜனநாயகமயாமாக்குவதில் பெருமை கொள்கிறோம்,” என நிறுவனர் மற்றும் சி.இ.ஓ வர்திகா பன்சால் கூறியுள்ளார்.
சிடிஓ வித்யாசங்கர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆறு பேர் கொண்ட Floik மையக் குழு, Kovai.co நிறுவனத்தில் இணைந்து, சேவை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தும்.
ஆங்கிலத்தில்: புவனா காமத், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan