நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு: தமிழ்நாட்டில் என்ன தளர்வுகள்? கட்டுப்பாடுகள்?
4/5/2020 முதல் 17/5/2020 நள்ளிரவு 12 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 25/03/2020 முதல் அமலில் இருந்து வருகிறது.
இந்த நோய் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் தமிழ்நாட்டில் நோய் தொற்று அதிகம் இல்லாமலும் சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்புவார் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 4/5/2020 முதல் 17/5/2020 நள்ளிரவு 12 மணிவரை கீழ்காணும் வழிமுறைகளை நீட்டிப்பு செய்யப்படுகிறது:
நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின் படி எவ்விதமான தொடர்புகளும் இன்றி ஊரடங்கு முழுமையாகக் கடைபிடிக்கப்படும்.
1. பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர)
- கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமானத் தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில் கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.
- அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.
- சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் (sez, eou, export units) : சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப்பின் சூழ்நிலைக்கேற்ப 25 சதவிகித பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும் நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வரவேண்டும்.
- தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT/ITes) 10 சதவிகித பணியாளர்களைக் கொண்டு குறைந்தது 20 நபர்கள் செயல்பட அனுமதிக்கப்படும் நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வரவேண்டும்.
- அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் (e-commerce) ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.
- உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.
- அனைத்து தனிக் கடைகள் (stand-alone and neighbourhood shops) முடித்திருத்தங்கள்/அழகு நிலையங்கள் தவிர ஹார்ட்வேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மொபைல் போன், கணிப்பொறி வீட்டு உபயோகப் பொருட்கள், மின்மோட்டார், கண் கண்ணாடி, விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- பிளம்பர், எலெக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர், உள்ளிட்ட சுய திறன் பணியாளர்கள் சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், (Homecare providers) வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
2) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர - Except Containment Zones), கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது:
- 50 சதவிகித பணியாளர்களைக் கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், அதாவது ஊரக மற்றம் பேரூராட்சி பகுதிகளில், உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உட்பட) செயல்பட அனுமதிக்கப்படும்.
- 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப ஜவுளித்துறை நிறிவனங்கள் 50% பணியாளர்கள் கொண்டு செயல்பட அனுமதி.
- SEZ, EOU, தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் (ஊரகம், நகரம்): 50 சதவிகித பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். நகரப் பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில், ஐவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.
- நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50% பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- மின்னணு வன்பொருள் (Hardware Manufactures) உற்பத்தி: 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- கிராமப்புரங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் (Spinning Mills) (ஷிஃப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன்) 50% பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 30% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- தகவல் தொழில்நுட்பம் (IT & ITeS): 50 சதவிகித பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 நபர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- நகர்புரங்களில் கட்டுமானப் பணிகள்: பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும்; பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும்.
- அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.
- பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர்.
- மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
- அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனைக் கடைகள்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை.
- மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்போ, கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட
- அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
- கிராமப்புரங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பபடும்.
- உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.
- நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள் (Malls) மற்றும் வணிக வளாகங்கள் (Market Complexes) தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் சூழ்நிலைக்கேற்ப அனுமதிக்கலாம்.