கொரானா உதவி: நீங்கள் நன்கொடை வழங்க உதவும் 8 நலத்திட்ட முயற்சிகள்!
உள்ளடங்கு சமயத்தில் தினக்கூலிகள். ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் உதவிட, நன்கொடை வழங்க இந்த நிறுவனங்களின் தளங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக, உலகம் நூற்றாண்டில், இல்லாத பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் உலக நாடுகளை பாதித்து, முடக்கி வைத்துள்ளது.
வறுமை கோட்டுக்குக் கீழே வசிப்பவர்கள் அதிகம் உள்ள இந்தியா, கொரோனாவால் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. மேலும் உலக சுகாதார அமைப்பு (WHO) இந்தியாவின் எதிர்வினை மற்றும் தயாரிப்பு, இந்தத் தொற்று நோய் போக்கை தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளது.
“இந்தியா போன்ற நாடுகள், ஏற்கனவே செய்துள்ளது போல, நாட்டின் தலைவர் முதல் சமூகத்தில் உள்ளவர்கள் வரை இடைவிடாத பொது சுகாதார விழிப்புணர்வுத் திட்டங்கள் மூலம் என்ன செய்ய முடியும் என்பதை செய்து காட்டுவது மிகவும் முக்கியம் என்று உலக சுகாதார அமைப்பின் மருத்துவ அவசரநிலை திட்டங்கள் செயல் இயக்குனர் மைக்கேல் ரயான் கூறியுள்ளார்.
ஆக உலகம் இந்தியா என்ன செய்கிறது என்பதை உற்று கவனித்து வரும் நிலையில், நம் நாட்டு மக்கள், பலவிதமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். கொரோனா தாக்கம் ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பு தீவிரமாக உள்ளது.
இந்நிலையில், மக்கள் நேசக்கரம் நீட்டி கைகொடுப்பது முக்கியம். பல்வேறு இணைய நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் நிதித் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. நீங்களும் இவற்றில் பங்கேற்கலாம்:
பேடிஎம், லைஃப்பாய் (Paytm- Lifebuoy)
புயல், பூகம்பம் போன்ற பேரிடர்களின் போது பேடிஎம் உடனடியாக உதவிக்கு வந்திருக்கிறது. தற்போது கொரோனாவுக்கு எதிரான போரிலும் கைகோர்த்துள்ளது.
இந்நிறுவனம், நுகர்வோர் பிராண்டான லைப்ஃபாய் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் யுவிகேன் அமைப்புடன் இணைந்து, இந்தியா ஃபைட்ஸ் கொரோனா எனும் விழிப்புணர்வு திட்டத்தை துவங்கியுள்ளது.
பேடிஎம் செயலியில், நன்கொடை வழங்குவதற்கு பிரத்யேக ஐகான் உருவாக்கப் பட்டுள்ளது. 50 ரூபாயில் இருந்து அளிக்கலாம். இந்தத் தொகையை, ஏழைகள் பயன்படுத்த சானிடைசர், சோப் உள்ளிட்டவை தயாரிக்க பயன்படுத்த இருப்பதாக பேடிஎம் தெரிவித்துள்ளது.
"ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் மற்றும் வைரஸ் பரவலை தடுப்பதன் மூலம் கோவிட்-19 பரவுவதைத் தடுக்கலாம். நம் அன்றாட வாழ்க்கையில் அங்கம் வகிக்கும் மக்கள் இந்த பொருட்களை பயன்படுத்த வழி செய்யும் வகையில், எல்லோரும் இந்தத் திட்டத்திற்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்று, பேடிஎம் துணைத்தலைவர் சித்தார்த் பாண்டே கூறியிருந்தார்.
ஃபார்ம் ஈஸி- ரேசர்பே (Pharmeasy - Razorpay)
பேமெண்ட் கேட்வே நிறுவனமான ரேசர்பே, மருத்துவ ஸ்டார்ட் அப்' ஆன ஃபார்ம் ஈஸியுடன் இணைந்து, சுகாதாரப் பணியாளர்களுக்கான நலத் திட்டத்தை துவங்கியுள்ளது.
டாக்டர்கள், செவிலியர்களுக்கு நீங்கள் முகக்கவசங்களை நன்கொடையாக அளிக்கலாம்.
ஃபார்ம் ஈஸி மற்றும் ரேசர்பே இணையதளங்களில், நன்கொடையாக அளிக்க விரும்பும் மாஸ்குகள் எண்ணிக்கையை தேர்வு செய்து நன்கொடை அளிக்கலாம். ஒவ்வொரு முகக்கவசத்துக்கும் ஃபார்ம் ஈஸி ஒரு மாஸ்கை நன்கொடையாக அளிக்கும்.
“நன்கொடையாகப் பெறப்படும் மாஸ்க் கணக்கிடப்பட்டு, மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என ரேசர்பே தெரிவித்துள்ளது.
உணவளிக்கும் ஜொமேட்டோ (Zomato)
உணவு டெலிவரி சேவையான ஜொமேட்டோ, ‘ஃபீடிங் இந்தியா’ திட்டத்தை துவக்கியுள்ளது. கோவிட் -19 வைரஸ் முடக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு உணவளிப்பதற்கான திட்டம் இது.
இந்தத் திட்டத்தின் இலக்கான ரூ.25 கோடியில் இதுவரை ரூ.9 கோடி திரட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான நன்கொடை பக்கத்திற்கு சென்று, நீங்கள் ஒரு குடும்பம் (ரூ.500), 3 குடும்பம் (ரூ.1,500), ஐந்து குடும்பங்கள் ( ரூ.2,500) என நிதி உதவி அளிக்கலாம்.
“ஒவ்வொரு உதவி தொகுப்பிலும், கோதுமை மாவு, அரிசி, பருப்புகள் ஆகியவை இருக்கும்.
சமூக விலகலை கடைப்பிடிக்கும் அதே நேரத்தில் இந்த நன்கொடையை பொறுப்பான முறையில் வழங்க, Grofers மற்றும் என்.ஜி.ஓக்களுடன் ஜொமேட்டோ கூட்டு சேர்ந்துள்ளது.
ரேசர்பே நிறுவனம், ஐதராபாத்தைச்சேர்ந்த என்.ஜி.ஓ SAFA Society – உடன் இணைந்து, தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியவர்களுக்கு உதவிப்பொருட்களை வழங்கி வருகிறது.
ஐதராபாத், சென்னை, பெங்களூரு, வடக்கு கர்நாடாகாவில் இவை வழங்கப்பட்டு வருகின்றன. ரேசர் பே இணையதளத்தில் கோவிட்-19 உதவி பக்கம் மூலம் நன்கொடை அளிக்கலாம்.
#IndiaFightsCoronavirus
ஒமிடியார் நெட்வொர்க்கின் ‘கிவ் இந்தியா’ மேடை, ஏழை தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிதி அளிப்பதற்காக, #IndiaFightsCoronavirus திட்டத்தைத் துவக்கியுள்ளது. பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு பாதுகாப்புப் பொருட்களை வாங்குவதற்காக ரூ.10 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. #IndiaFightsCorona page பக்கம் மூலம், ரூ.500ல் இருந்து நன்கொடை அளிக்கலாம்.
“தினக்கூலி தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு உதவுவதற்காக இந்தத் திட்டத்தை துவங்கியுள்ளோம்,” என்கிறார் கிவ் இந்தியா சி.இ.ஓ அதுல் சடிஜா.
கூட்டு நிதி தளங்கள்
Ketto.org இணையதளம், கோவிட்-19 நிதித் திரட்ட பிரத்யேக பக்கம் அமைத்துள்ளது. இதன் மூலம், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிடோருக்காக ரூ.1.8 கோடி திரட்டியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்தத் தளத்திற்கு ஒரு லட்சம் நிதி அளித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய கூட்ட நிதி திரட்டல் இணையதளமான, Milaap.org திருநங்கைகளுக்கான நிதித் திரட்டலை மேற்கொண்டு வருகிறது. பேடிஎம் செயலி அல்லது யுபிஐ செயலி மூலம் நிதி அளிக்கலாம்.
இதே போல, அவர் டெமாக்ரசி இணையதளம், தில்லி இளைஞர்கள் நலவாழ்வு சங்கம் சார்பில் நிதி திரட்டலை மேற்கொண்டிருக்கிறது.
கூகுள் பே (Google Pay)
கூகுள் பே தனிப்பட்ட பக்கம் எதையும் துவக்கவில்லை என்றாலும், என்.ஜி.ஓ அமைப்பான Goonj- நன் RAHAT COVID-19 திட்டம் மூலம் உதவ வழி செய்கிறது. கூகுள் பே மூலம், மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கலாம்.
பிரதமர் நிவாரண நிதி (PM Cares)
இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர். பொதுமக்களும் இதற்கு நிதி வழங்கலாம்.
குடிமக்களும், அமைப்புகளும் pmindia.gov.in இணையதளத்திற்குச் சென்று பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி PM CARES நிதிக்கு நன்கொடை அளிக்க முடியும்.
ஆங்கிலத்தில்: சோஹினி மிட்டர் | தமிழில்: சைபர்சிம்மன்