Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கொரோனா அறிகுறிகள், சளி, ஜுரம் இருந்தால் பதிவு செய்ய உதவும் ஆப்!

சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள இந்த ‘கொரோனா வைரஸ் கண்காணிப்பு' ஆப் அறிகுறிகள் உள்ளோர், சந்தேகங்களை பதிவு செய்தால் உடனடியாக உதவிகள் அனுப்பி வைக்கும்.

கொரோனா அறிகுறிகள், சளி, ஜுரம் இருந்தால் பதிவு செய்ய உதவும் ஆப்!

Friday April 10, 2020 , 2 min Read

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.


இந்த தொற்று எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவி வருவதால் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டோர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், நோய் அறிகுறி இருப்பவர்கள் என பலரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.


கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி GCC - Corona Monitoring ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியானது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க உதவும். கோவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி இந்த ஆண்டிராய்ட் செயலியை அதிகாரப்பூர்வமாக உருவாக்கியுள்ளது.

Corona monitoring app

இந்தச் செயலியை மாநகராட்சியின் வலைதளத்தில் எளிதாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதில் ‘குவாரண்டைன்’, (Qurantine) ‘சாதாரண காய்ச்சல்’ என்கிற இரண்டு தேர்வுகள் இருக்கும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களது புகைப்படம் அல்லது இருப்பிடத்தின் ஏதோ ஒரு பகுதியை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்.


அதேபோல் ஒருவருக்கு காய்ச்சலோ வறட்டு இருமலோ சுவாசிப்பதில் சிரமமோ இருக்குமானால் அவர் ஒரு செல்ஃபி எடுத்து செயலி வாயிலாக அனுப்பலாம். உடனடியாக அந்தப் பயனரின் இருப்பிடம் பெருநகர சென்னை மாநகராட்சிக்குத் தெரியவரும்.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி. பிரகாஷ் கூறும்போது,

“பயனர் இருப்பிடம் தெரிந்த உடன் அந்த அறிகுறிகள் சாதாரணமாக ஏற்படும் பிரச்சனைகளா அல்லது தீவிர மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படும் நிலையா என்பதை எங்களது மருத்துவக் குழு ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்தச் செயலியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தில் ரிசர்ச் ஃபெலோ அழகு பாண்டிய ராஜா. அவர் கூறும்போது,

“கொரோனா வைரஸ் அறிகுறியாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்று. இந்தச் செயலி மிகவும் எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டு வசிக்கும் தனிமைப்படுத்தப்பட்டோர் அல்லது கொரோனா பாதிப்பு சந்தேகம் உடையோர் இந்த ஆப்’பை டவுன்லோட் செய்து பயன்பெறலாம். இதுவரை சுமார் 10ஆயிரம் பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.


ஆப் டவுண்ட்லோட் செய்ய: GCC Corona Monitoring App