Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்கும் ஆப்: தமிழக அரசு அறிமுகம்!

இந்த ஆப் மூலம் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒருமுறை அவர்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு செல்கிறார்களா என்று கண்காணிக்கப்படும்.

வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்கும் ஆப்: தமிழக அரசு அறிமுகம்!

Tuesday March 31, 2020 , 3 min Read

கொரோனா வைரஸ் பரவலை பரிசோதிக்கும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கவும் அதுகுறித்த தகவல்களை அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கவும் மொபைல் செயலிகளை கர்நாடகா அரசாங்கமும் தமிழ்நாடு அரசாங்கமும் உருவாக்கியுள்ளது.


மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் இந்த தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருகிறது.

"நாங்கள் செயலியை உருவாக்கியுள்ளோம். இன்னும் இரண்டு நாட்களில் இது கூகுள் ப்ளேஸ்டோரில் கிடைக்கும். வீட்டில் தனைமைப் படுத்தப்பட்டவர்கள் இந்தச் செயலியை கட்டாயமாக பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். எப்போதும் பயன்பாட்டில் இருக்கவேண்டும். இதை கட்டாயமாகப் பின்பற்றாதவர்கள் மொத்தமாக தனிமைப்படுத்தப்படுவார்கள்,” என்று கர்நாடகா கோவிட்-9 வார் ரூம் செயலாளர் முனீஷ் மோட்கில் பிடிஐ உடனான உரையாடலில் தெரிவித்தார்.
1

கூகுள் ப்ளேஸ்டோரில் ‘கொரோனா வாட்ச்’ செயலி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விவரங்களின்படி கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இடம் குறித்தும் கடந்த 14 நாட்களில் அவர்கள் சென்ற இடங்கள் பற்றிய விவரங்களும் இதில் காட்டப்படும். இதைப் பொதுமக்கள் பயன்படுத்தி விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.


தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் விதிகளை மீறுவதை செயலியில் உள்ள மற்றவர்கள் கவனித்தால் மாநில அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டுள்ள எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இதுதொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


மாநில அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதால் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அந்த நபர் செயலியில் உள்ள தகவல்களை அழிக்கவோ மாற்றவோ முடியாது என்று மோட்கில் தெரிவித்தார்.

"தனிமைப்படுத்தப்பட்ட நபர் தினமும் தனது புகைப்படத்தை எடுத்து சமர்ப்பிக்கவேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரது தகவல்களும் எங்களிடம் உள்ளது. பதிவிறக்கம் செய்துகொள்ளத் தயாரானதும் அனைவருக்கும் தகவல் அனுப்பப்படும். புகைப்படங்களை சரிபார்க்கவும் பிரத்யேகக் குழு தயார்நிலையில் உள்ளது,” என்றார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நபருடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ள கர்நாடகா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.


இதேபோன்று தமிழக அரசாங்கமும் கோவிட்-19 பாதிப்புத் தொடர்பாக தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்கும் செயலியை உருவாக்கியுள்ளது.

இந்த செயலி உருவாக்குவதில் மூளையாக செயல்பட்டவர் பொறியாளராக இருந்து ஐபிஎஸ் அதிகாரி ஆன ரோஹித் நந்தன். Pixxon Ai Solutions Pvt Ltd என்கிற நிறுவனம் இதை 48 மணி நேரத்தில் உருவாக்கியுள்ளது. ஆண்ட்ராய்ட் ப்ளேஸ்டோரில் உள்ள இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தி தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் அரசாங்கத்தின் தரப்பில் எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களை அதிகாரிகள் கண்காணிக்க இந்தச் செயலி உதவும் என்று தெரிவித்தார் சிவகங்கை மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித் நந்தன்.

“பெரும்பாலானோர் சட்டத்தை மதிக்கின்றனர். விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்கின்றனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறுவதை நான் கவனித்தபோது அவர்களைக் கண்காணிக்க செயலியை வடிவமைக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். அவர்கள் செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டதும் அவர்களது அசைவுகள் கண்காணிக்கப்படும்,” என்றார்.

இந்தச் செயலியைப் பயன்படுத்துபவர்கள் தங்களது இடத்தில் இருந்து 500 மீட்டர் அல்லது ஒரு கி.மீ தொலைவு வரை சென்றால் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கைக் கிடைக்கும். உடனடியாக அவர்கள் தொடர்பு கொள்வார்கள்.

“அவர்களுக்கு தென்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்றும் மருத்துவ உதவி தேவைப்படுமா என்றும் கேட்கப்படும். வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படும்,” என்றார்.

Covid-19 Quarantine Monitor Tamil Nadu app என்ற அந்த செயலி வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் அசைவுகளை ஜிபிஎஸ் பயன்படுத்திக் கண்காணிக்கும் என்றார் Pixxon Ai Solutions Pvt Ltd நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான முத்துகுமார் கூறினார்.


இந்தச் செயலி கூகுள் ப்ளேஸ்டோரில் இருக்கும் என்றாலும் அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பயன்பாட்டிற்கானது மட்டுமே. எங்களது பட்டியலில் ஏற்கெனவே சேமிகப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி அவர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

“ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒருமுறை அவர்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்து செல்கிறார்களா என்பது கண்காணிக்கப்படும்,” என்றார் முத்துக்குமார்.

ஜனவரி மாதம் 18-ம் தேதி முதல் மார்ச் மாதம் 23-ம் தேதி வரையில் உள்ள காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 15 லட்சம் பயணிகளை கண்காணிக்குமாறு அனைத்து மாநிலங்களிடமும் மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ் கௌபா கேட்டுக்கொண்டுள்ளார்.


வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய மொத்த பயணிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கோவிட்-19 தொற்றுக்காக கண்காணிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள் என்பதால் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்களை முறையாக கண்காணிக்காமல் போனால் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் பலனளிக்காமல் போய்விடும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கௌபா குறிப்பிட்டுள்ளார்.


தகவல்: பிடிஐ