கோவிட்-19 மருந்து ‘Covifor’ முதல் பேட்ச் விரைவில் தமிழகம் வருகை!
கோவிட்-19 சிகிச்சைக்காக 10 ஆயிரம் மருந்து குப்பிகள் தமிழ்நாடு, உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு, அனுப்ப உள்ளதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
கோவிட்-19’க்கு எதிரான ஆன்டி-வைரல்; Covifor (remdesivir) மருந்துகளை நாடு முழுதும் டெலிவரி செய்யத் தயாராக இருப்பதாக Hetero Healthcare தெரிவித்துள்ளது. சுமார் 20000 மருந்து குப்பிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கோவிட்-19 வைரசுக்கு எதிரான இம்மருந்து ஒரு குப்பியின் விலை ரூ.5,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, டெல்லி, ஹைதராபாத், குஜராத், மும்பை மற்றும் மகராஷ்டிராவின் பிற பகுதிகளுக்கு, 10 ஆயிரம் மருந்து குப்பிகள் அனுப்பப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
10 ஆயிரம் மருந்து குப்பிகளைக் கொண்ட மற்றொரு பேட்ச், கொல்கத்தா, இண்டோர், போபால், பாட்னா, புவனேஷ்வர், ராஞ்சி, விஜயவாடா, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோவா ஆகிய ஊர்களுக்கு ஒரு வாரத்தில் அனுப்பப்படும்.
“அதிகப்பட்ச விற்பனை விலையாக ஒரு குப்பிக்கு ரூ.5,400 என்று நிர்ணயம் செய்துள்ளோம்.
இதனிடையே பிரபல மருந்து நிறுவனம் சிப்லா; remdesivir எனும் இந்த பொது மருந்திற்கான விலையை ஒரு குப்பி ரூ.5000 என அறிவித்துள்ளது. இந்த மருந்தும் அடுத்த 8-10 நாட்களில் தயார் நிலையில் இருக்கும்.
“இந்தியாவின் Covifor மருந்தின் அறிமுகம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். Covifor மூலம், கொரோனா நோயாளி சிகிச்சை நேரத்தை குறைப்பதோடு, மருத்துவமனையில் அவர்கள் இருக்கவேண்டிய நேரத்தையும் அது குறைக்கும். இது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வேலை பலுவை சற்று குறைக்கும்,” என்றார் Hetero Healthcare நிர்வாக இயக்குனர் எம்.ஸ்ரீனிவாச ரெட்டி தெரிவிட்தார்.
'Covifor' மருந்தை அரசு மற்றும் தனியார் சுகாதார அமைப்புகளில் கிடைக்கும் வழியில் இந்நிறுவனம் அரசுடன் இணைந்து செயல்படுகிறது. Covifor, கோவிட்-19’க்கான முதல் பொது மருந்தாகும். இது கொரோனா நோயாளிகள் (பெரியர்வர்கள், குழந்தைகள்) சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள remdesivir வகையைச் சேர்ந்த மருந்தாகும். இம்மருந்து கொரோனாவால் தீவிர அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நிறுவன அறிவிக்கை தெரிவிக்கிறது.
ஊசியில் செலுத்தும் வகையிலான இந்த மருந்து ஒரு குப்பியில் 100 மில்லிகிராம் அளவில் இருக்கும். ஐவி மூலம், தகுந்த மருத்துவர்கள் கண்காணிப்பில் இம்மருந்தை மருத்துவமனையில் மட்டுமே செலுத்தப்படவேண்டும். மேலும் remdesivir மருந்தை சந்தைப்படுத்துவதற்கான அனுமதியை இந்திய மருந்தக மையத்திடமிருந்து (DCGI) பெற்று விட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மே மாதம், உள்நாட்டு மருந்து நிறுவனங்களான சிப்லா, ஹெடெரோ மற்றும் ஜூப்லியண்ட் லைஃப் சயின்ஸ் ஆகியோர் remdesivir மருந்தை உற்பத்தி மற்றும் விநியோகிக்கும் உரிம ஒப்பந்தத்தில் Gilead Sciences Inc நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: பிடிஐ