கொரோனா தந்த உந்துதல்: உலக கோடீஸ்வரர் ஆன உகுர் சாஹின்!
உலகின் டாப் 500 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் பயோ அன் டெக் (BioNTech) நிறுவனத்தின் இணை நிறுவனர் உகுர் சாஹின் (Ugur Sahin).
ஃபைசர் மற்றும் பயோ அன் டெக் நிறுவனங்கள் இணைந்து கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்த தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்த்து. இதனால் உலகின் முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது பிரிட்டன்.
அடுத்த வாரம் முதல் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பைசர் மற்றும் பயோ அன் டெக் நிறுவனங்களின் சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்ததன் மூலம், பயோ அன் டெக்கின் பங்குகள் இந்த வாரம் கிட்டத்தட்ட 8% உயர்ந்துள்ளன, மேலும் ஆண்டுக்கு 250% க்கும் அதிகமாக உள்ளன. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி,
சாஹின் இப்போது 5.1 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புள்ள உலகின் 493 வது பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஜெர்மனை தலைமையிடமாகக் கொண்ட பயோ அன் டெக் நிறுவனம் முன்னர் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தியது, பின்னர், உகுர் சஹின் அவரது மனைவி ஓஸ்லெம்துரேசி பயோ அன் டெக் நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி ஆகியோர் கோவிட் 19 பக்கம் தங்கள் கவனத்தை தெரிவித்தனர்.
சீனாவின் வூகான் மாகாணத்துக்குச் சென்று ஆய்வை மேற்கொண்டனர். அப்போது அங்கு அவர்கள் கண்ட கோவிட் 19 தொற்றின் வீரியம் அவர்களை புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதை நோக்கித் தள்ளியது.
கோவிட் -19 தடுப்பூசியை தயாரிப்பதற்கான போட்டியில் பயோ அன் டெக்கின் நெருங்கிய போட்டியாளரான மாடர்னா இன்க் நிறுவனத்தில் முதலீடுகளும் உயர்ந்துள்ளன. மாசசூசெட்ஸை தளமாகக் கொண்ட கேம்பிரிட்ஜ் நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு 700% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் பாப் லாங்கர் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டிம் ஸ்பிரிங்கர் மற்றும் இப்போது 4.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் உள்ளிட்ட சில ஆரம்ப முதலீட்டாளர்களும் பில்லியனர்களாக உருவெடுத்துள்ளனர்.
தகவல் உதவி: ப்ளூம்பர்க்