சுற்றுச்சுழல் விழிப்புணர்வு: கோவை நிறுவனம் நடத்தும் 'என்-Environclave', 'பஞ்சபூத அவார்ட்ஸ் 2016'!

சுற்றுச்சுழல் விழிப்புணர்வு: கோவை நிறுவனம் நடத்தும் 'என்-Environclave', 'பஞ்சபூத அவார்ட்ஸ் 2016'!

Wednesday June 15, 2016,

3 min Read

வருடந்தோறும் ஜூன் 5-ஆம் தேதி, உலக சுற்றுச்சுழல் தினமாகக் கொண்டாடப்படுக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கவும், இயற்கை மற்றும் பூமியைப் பாதுகாக்கவும், இயற்கையை காப்பாற்ற இருக்கும் வாய்ப்புகள் பற்றியும், உலகளவில் விழிப்புணர்வை உருவாக்குவது தான், உலக சுற்றுச்சூழல் தினத்தின் நோக்கம்.

மக்களுக்கு இந்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், கோவையைச் சேர்ந்த Eventspace.com நிறுவனம், இரண்டு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. ஒன்று, "என்-Environclave 2016" எனப்படும், விவசாயம் மற்றும் பசுமை தொழில்நுட்பம் குறித்த சமூக தொழில்முனைதல் (Agri-Greentech-Social-Entreneurship) பற்றிய கூட்டம். மற்றொன்று, பஞ்சபூதங்களின் 5 கூறுகளில், அதிக பங்களிப்பு தந்தவர்களைப் பாராட்டி, விருது வழங்கும் "பஞ்சபூத அவார்ட்ஸ் 2016" (Panjabootha Awards 2016) எனப்படும் விழா.

ஜூலை 2 ஆம் தேதி பொள்ளாச்சியில் உள்ள Dr.மஹாலிங்கள் பொறியியல் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதுமட்டுமின்றி, நிகழ்ச்சியைத் தொடர்ந்து சில நற்செயல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர் இந்த குழுவினர்.

*நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் அளிப்பது,

*60-90 நாட்களுக்குள், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 250-300 பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் 1,00,000 மரக்கன்றுகள் நடுவது,

*பொள்ளாச்சியின் நீர் மூல இடங்களில் ஒன்றான, "கிருஷ்ணா ஏரி"-ஐ சுத்தம் செய்து, மேம்படுத்தும் திட்டத்தில் ஈடுப்படுவது,

*அத்துடன், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீல்கீரிஸ் மாவட்டங்களில், சுத்தம் செய்யப்பட வேண்டிய நீர்நிலைகளைக் கண்டறியவும் உள்ளனர்.

'பஞ்சபூத அவார்ட்ஸ்' நிகழ்ச்சியில் அனைவரும் பங்குக்கொள்ளலாம், ஆனால், 'என்-Environclave 2016' கூட்டத்தில், பதிவு செய்த 200 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். தொழில்முனையும் மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணத்தில் 50% தள்ளுபடி உண்டு.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள்

மைண்டு விஸ் டெக்னோ-சொளுஷன்ஸ் (Mindwiz Techno-Solutions) நிறுவனம், கோயம்புத்தூரில் தொடங்கிய ஒரு ஸ்டார்ட்அப் தான், Eventspace.com. இந்த நிறுவனம், இன்டர்நெட் மூலம் வர்த்தக கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகள் போன்ற உலக நிகழ்வுகளை இணைத்து, அதனை தத்ரூபமான 3Dயில் ஒளிபரப்புதல் மற்றும் நிர்வகித்தல் பணிகளையும் செய்யும் இணையதளமாகும்.

'என்-Environclave 2016'

இந்நிகழ்வு விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் சமூக தொழில் முனைதல் என மூன்று துறைகளில் கவனம் செலுத்தி முதன்முதலில் நடத்தப்படும், தொழில்முறை சார்ந்த ஓர் கூட்டமாகும். நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை மறந்து, சுற்றுச்சூழல், கலாச்சாரம் மற்றும் சமூகத்தை நாசமாக்கும் விஷயங்களில் நாம் கவனம் செலுத்திக்கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்து, அதனைப் பற்றிய விழிப்புணர்வை வளர்க்க விதைத்ததுதான் இந்த நிகழ்ச்சியின் திட்டம்.

தொழில்நுட்பத்தைக் கொண்டு பழங்கால விவசாய முறைகளை மீட்டு வருவதும், இதனைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வும், விவசாயம் மற்றும் பசுமை தொழில்நுட்பம் சார்ந்த நிதிகள், சந்தை மற்றும் வியாபார வாய்ப்புகள் பற்றி கல்வி பெற செய்வதும், இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

துறை வல்லுனர்கள், பேச்சாளர்கள், குழுவினர்கள், முதலீட்டாளர்கள், வழிகாட்டுபவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விவசாயத் துறையில் வளர்ச்சி மற்றும் கண்டுப்பிடிப்புகள் குறித்து விவாதம், கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் செய்து அத்துறை வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். 

விவசாயம், விவசாய ஏற்றுமதி, பசுமையின் ஆற்றல், சமூக தொழில்முனைதல் ஆகியவற்றில் உள்ள புதிய தொழில்நுட்பங்களும் செய்முறைகளையும் பற்றி அறிவு புகட்டுவதே, இந்த கூட்டத்தின் குறிக்கோளும் ஆகும்.

50+ பேச்சாளர்கள், 30+ கண்காட்சியாளர்கள், 10 ஸ்டார்ட் அப் அறிமுகம், 8 முக்கிய அமர்வுகள், 6 முதலீட்டாளர்கள் மற்றும் 6 வழிகாட்டுபவர்களின் சொற்பொழிவுகள், 17+ ஆட்களைக் கொண்ட 3 கலந்துரையாடல் குழுவும், ஒரு சிறப்பு விவாதமும், இந்த நிகழ்ச்சியில் இடம் பெறும்.

பஞ்சபூத அவார்ட்ஸ் 2016

நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு என பூமியின் 5 கூறுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் தனிநபர்கள் / நிறுவனங்கள் / மன்றங்களை, அடையாளம் கண்டு கௌரவிக்கும் விழா, 'பஞ்சபூத அவார்ட்ஸ்'.

மேற்கூறிய 5 துறைகளிலும் இரண்டு விருதுகள் வழங்கப்படும். துறையில் சாதித்தவருக்கு ஒரு விருதும், சாதனை செய்ய உள்ள ஒருவரை ஊக்குவிக்க ஒரு விருதும் வழங்கப்படும்.

மேலும், சமூக சூழல் அமைப்பில் தொண்டாற்றிய ஐந்து பேருக்கு, பிரத்யேகமான ஜூரி விருதுகள் அளிக்கப்பட உள்ளது.

தமிழ் யுவர்ஸ்டோரி இந்த நிகழ்ச்சியின் மீடியா பார்ட்டனராக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, என்-Environclave 2016 & பஞ்சபூத அவார்ட்ஸ் 2016

.