டெப்லினா சக்ரபர்த்தி – அறிவும், அழகும் சீற்றமான சுதந்திரமும்
டெப்லினா சக்ரபர்த்தி – அறிவும், அழகும் சீற்றமான சுதந்திரமும்
சிறுவயதில் இருந்தே டெப்லினாவிற்கு வளர்ந்த பின் என்னவாக வேண்டும் என ஏகப்பட்ட கனவுகள் இருந்திருக்கின்றன. ஆறு வயதில் மருத்துவர் ஆக வேண்டும் என்றும், பதினான்கு வயதில் தன் அண்ணியால் கவரப்பட்டு ஹோட்டல் மேலாண்மையாளராக ஆக வேண்டும் என்றும், இருபது வயதில் கல்லூரியில் தன்னைக் கவர்ந்த ஒரு ஆணுக்காகச் சுற்றுச் சூழல் மேலான்மையாளராகவும், புலனாய்வுப் பிரிவில் தடயவியல் நிபுணராக ஆக வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் ரகசியங்களைப் பாதுகாக்கும் திறன் இல்லாததால் தடயவியல் நிபுணராகும் ஆசை நீர்த்துப் போனது. இப்படி கனவுகளும் இலட்சியங்களும் மாறிக்கொண்டே இருந்தாலும் எழுத்தின் மேல் இருந்த ஆசை மட்டும் இவருக்கு மாறவே இல்லை. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் அரசியல் பொருளாதாரத்தில் பட்டம் பெற்று எல்லா வாய்ப்புகளையும் முயற்சி செய்தாலும் எழுத்துவது அவர் தொடர்பிலேயே இருந்தது. கலை, பண்பாடு, இலக்கியம், ஃபேஷன் போன்ற பல தலைப்புகளில் அவர் எழுதியிருக்கிறார். தற்போது அவர் "மேன்'ஸ் வோர்ட்" Man’s world என்னும் பத்தியில் தன் கருத்துக்களை எழுதுகிறார். ஆழமான அதேசமயம் மெலிதான நகைச்சுவையுடன் நவநாகரீக ஆண்களும் பெண்களும் எதிர்கொள்ளும் காதல் குறித்த குழப்பங்களைப் பற்றிய பகுதி அது.
தற்போது டெப்லினா லண்டனிலிருக்கும், எம். ஜி. எம் வொர்ல்ட்வைட் குழுமத்தின் நிகழ்ச்சி உரிம இயக்குநராக இருக்கிறார். “நான் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான தொலைக்காட்சித் தொடர்கள், படங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை அதற்கான உரிமம் உடையவர்களிடமிருந்து அதனை ஒளிபரப்ப விரும்புபவர்களுக்கு உரிமம் பெற்றுத்தரும் வேலையைச் செய்கிறேன். “சுருங்கச் சொன்னால் ட்ரான்ஸ்பார்மர்ஸ் படத்தை ஸ்டார் வேர்ல்ட் தொலைக்காட்சியில் பார்க்க வேண்டுமானால் அந்தத் தொலைக்காட்சி அந்தப் படத்தை தயாரித்த பாரமௌண்ட் நிறுவனத்திடமிருந்து அந்த ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியிருக்க வேண்டும்” அதைத்தான் தான் செய்வதாக விளக்குகிறார்.
இந்தத் தொழிற்பாதையை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்குத் தானாக நடந்தது என்று சொல்லலாமா என்கிறார். எப்படி இங்கு வந்து சேர்ந்தீர்கள் என்ற கேள்வியைவிட ஏன் இதைச் செய்யக் கூடாது என்ற கேள்வி தன்னை இங்குக் கொண்டு வந்ததாகக் கூறுகிறார். “என் பட்டப்படிப்பை முடித்து இதழியல் துறையில் பணியாற்ற வேண்டும் என்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவின் நேர்முகத் தேர்விற்கு வரும்போது (இந்தியன் எஸ்க்பிரஸ் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் வேலைக்கான அழைப்பு அப்போது அவர் கையில் இருந்தது). பென்னட் கோல்மல் நிறுவனத்தின் அந்நாள் தலைவர் என்னை விற்பனை மற்றும் சந்தைப் படுத்துதல் பிரிவில் சேரச் சொன்னார்.” ஆசிரியர் பிரிவில் அதிக வேலைப்பளு, குறைவான சம்பளம் பெற்று, எழுத்துலக சுறாக்களோடு இருக்க வேண்டி வரும் இன்று குறிப்பிட்டார். அந்த வினாடி ஏன் நாம் இதில் வேலை செய்யக் கூடாது என்ற கேள்வி, வெறும் எழுத்திலிருந்து எழுத்தைச் சந்தைப்படுத்துதல் துறைக்கு என் தொழிற்பாதையை மாற்றி விட்ட்து. இரண்டாவது பெரிய மாற்றம் நான் பத்திரிக்கை துறையிலிருந்து தொலைக்காட்சிக்குப் போனது. சேர்ந்து மூன்று மாதங்களுக்குள்ளாக, வருடம் இருமுறை நடக்கும் தொலைக்காட்சிகளுக்கான சந்தைக்கு MIPTV தொலைக்காட்சி நிகழ்ச்சி உரிமங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள அனுப்பப்பட்டிருக்கிறார். நிலுவைத் தொகைகள் உள்ள ஒரு முனையிலிருந்து கோபமான விநியோகஸ்தர்களை எதிர்கொள்ளும் இன்னோரு முனைக்கு வந்தது ஒரு முழு வாழ்க்கைச் சுழற்சிபோல் உள்ளது எனக் கூறுகிறார்.
அவரின் சாதாரண நாளில் வாடிக்கையாளர் மின்னஞ்சல்கள், சில தொலைபேசி அழைப்புகள், உரிமம் மாற்றம் தொடர்பான பல வேலைகள், நிதித் திட்டமிடல், விற்பனைஅறிக்கைகள் தயாரித்தல் மற்றும் பயணத் திட்டமிடல் எல்லாவற்றையும் கடக்கிறார். ஐரோப்பிய, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் சில பகுதிகளுக்கு, விநியோகத்தை அவரின் லண்டன் அலுவலகம் கவனிப்பதால், சராசரியை விடக் கூடுதலான பயணங்கள் செய்ய வேண்டும் நிர்பந்தம் இருக்கிறது. வருடம் இருமுறை நடக்கும் தொலைக்காட்சி சந்தைகளான கேன்ஸ், MIPTV, MIPCOM போன்றவற்றில் பத்து வருடங்களுக்கும் மேலாக அவர் கலந்து கொள்கிறார். இந்தக் கனவுத் தொழிற்சாலையின் வியர்வையையும் உழைப்பையும் அவை அதன் முதுகெலும்பை தாங்கிப்பிடித்திருப்பதை பார்த்திருக்கிறார்(சில கோப்பைகள் மதுவும்), இந்த நேர்காணலின்போது அவர் அப்போதுதான் லாஸ் ஏஞ்சலஸில் இருந்து திரும்பியிருந்தார். வியன்னா, முனிச், ஜோகன்னஸ்பர்க் மற்றும் ஏதென்ஸ் என்று ஒரு சூறாவளிப் பயனத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார். பால் திரோ சொன்னதுபோல் “பயணங்கள் நினைத்துப் பார்க்கையிலே மட்டும்தான் அழகானவை” அவருடைய உலகம் சுற்றும் பயணங்கள் ஆனந்தமாக இருக்கும் அதே நேரத்தில் அதிக சுமையையும் தருகின்றன. இந்த நகர்ந்துகொண்டே இருக்கும் வாழ்க்கை முறையானது பல நாடுகளின் பலதரப்பட்ட உணவு வகைகளை ருசிபார்க்க வழிசெய்கிறது. அவரும் அவருடைய நெருங்கிய நண்பரும் புகைப்படக் கலைஞருமான மரியம் மாமஜியும் சேர்ந்து ‘மேட் இன் உமாமி’ என்ற வெற்றிகரமான ஒரு உணவு வலைப்பூ நடத்தியிருக்கிறார்கள். உங்கள் சுவை மொட்டுகளை அந்த வலைப்பூ தூண்டிவிடும். கண்டம் விட்டுக் கண்டம் பறந்து செல்லுதல் வலைப்பூ நிர்வாகத்தைக் கடினமாக்கினாலும், அவர் உலகத்தைச் சுற்றி வந்து உணவின் மீதான தன் ஈடுபாட்டை இன்ஸ்டாகிராமில் பதிகிறார்.
இந்த வருடம் டெப்லினா தன் வேலையில் குறிப்பிடத் தகுந்த சிலவற்றைச் செய்ய வேண்டுமென நினைக்கிறார்.” ஐரோப்பாவின் சில பகுதிகள் எனக்குக் கீழ் வருகின்றன. அவற்றைக் கூர்ந்து கவனித்து அங்கு வேலைகளைத் தொடங்க வேண்டும். தென்னாப்பிரிக்கா, கிரேக்கம், துபாய், அயர்லாந்து போன்ற பலதரப்பட்ட மக்கள், பண்பாடு, பழக்கவழக்கம், சுவை மற்றும் நிகழ்ச்சி விருப்பங்கள் உடைய நாடுகளுக்குப் பயணிப்பது என் வேலையின் ஒவ்வொரு நாளும் நான் எதையாவது கற்றுக்கொள்ள உதவுகிறது.
இப்போது அவர் இருக்கும் நிலைக்கு ஒருவர் எதையெல்லாம் தாண்டி வர வேண்டும் என்று நினைக்கப் பிரமிப்பாக இருக்கிறது. ஆனால் வெற்றி பெற்றவராக அடையாளம் காட்டப்படுகையில் அவர் அதை மறுக்கிறார்.
“என்னைக் கேட்டால் முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் தொழில் முன்னேற்றம் அதைப் பெரிதுபடுத்துகிறது. விடாப்பிடியான முன்னோக்கி நகர்தல் என்பதை எடுத்துக்கொள்ளலாம். முடிந்தால் நடந்து கொண்டேயிரு என்கிற ஜானி வாக்கரின் தந்திரம் தற்கால தொழில் வளர்ச்சியை மட்டந்தட்டுதல் போலாகும். இங்கு வாழ்க்கையை மாற்றும் நிகழ்வுகள் மீது பெரிய கவனிப்பு இருக்கிறது. சொல்லப்போனால் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டேதானே இருக்கிறது.”
சவால்கள் பற்றிய கேள்விகளுக்கு “சவால்கள் இருந்துகொண்டே தான் இருக்கும் ஏனெனில் நான் என் வேலைப்பாதையின் மையத்தில் இருக்கிறேன், பொறுமையின்மை, உணர்ச்சிவசப்படுதல், நாசூக்கின்மை, எளிதில் காயப்படுதல் இவையெல்லாம் எனக்குள் நான் எதிர்கொள்ளும் சவால்கள். வெளியில் இருக்கும் சவால்களில் முக்கியமானது நிர்வாகக் கட்டமைப்ப்பின் இருக்கும் ஆண்-பெண் பேதம். நம்மை அறியாமலே ஆழ்மனதில் இருக்கும் அந்தப் பேத்த்தின் யதார்த்தம் சுரீரென்று அறைகிறது.
அவருடைய தனி வாழ்வைப் பற்றி அறிய, உங்கள் வாழ்வின் பெரிய மனக்கஷ்டமாக உணர்ந்தது எது எனக் கேட்டபோது “வாழ்க்கை என்றுமே பூக்களின் பாதையாக இருந்ததில்லை ஆனால் அப்படி குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எந்த நிகழ்வுகளும் இல்லை. ஒவ்வொரு ஏமாற்றங்களும் அவைகளின் காரணத்தைப் புரிய வைத்துப் போயிருக்கின்றன. அதனால் நினைத்துப் பார்த்து வருத்தப்பட ஏதுமில்லை” என்கிறார்.
பிறர் தன்னை இலட்சியவாதியாகப் பார்த்தாலும் தான் என்றுமே அப்படி நினைத்ததில்லையென உறுதிப்படுத்துகிறார். உறுதியான நோக்கமும் முனைப்பும் அவருக்கு உண்டு. எனக்கு முயற்சியை விடுதல் அறவே பிடிக்காது. மிகப்பெரிய தோல்வியாக நான் அதைக் கருதுகிறேன். என்னை முனைப்பாய் இருக்கச் செய்யும் இரண்டு விஷயங்களும் இரு வேறு துருவங்கள். ஒன்று பொருளாதார அளவில் சுதந்திரம். எனக்கு வேண்டியவற்றை நான் அனுபவிக்க நினைப்பதை வாங்க வேண்டிய பணத்தைச் சம்பாதித்தல். மற்றொன்று வாழ்வை ஒரு அர்த்தத்துடன் வாழ்வது. நமக்குப் பின் நாம் உருப்படியாக ஏதேனுமொன்றை நம் வாழ்வில் விட்டுச் செல்ல வேண்டும். புத்தகங்கள் என் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இருந்ததால் தானோ என்னவோ எனக்கு எழுத வேண்டும் என்னும் வேட்கை பிறந்தது. என்றோ மறைந்து போனவர்களின் எழுத்துகள் இப்போது என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனில் என் வாழ்விலிருந்து ஒரு சிறு பகுதியை நான் அவ்வாறு விட்டுச் செல்ல விரும்புகிறேன்” என்கிறார்.
எது உங்களை ஊக்கத்துடன் வைத்திருக்கிறது என்னும் கேள்விக்கு “பணம் தான். மகிழ்ச்சியாய் இருக்கும் நாட்களில் நீங்கள் உங்கள் பெருமைக்காக, விருப்பங்களுக்காகச் செயலாற்றுகிறீர்கள். கடினமான நாட்களில் பணத்திற்காகச் செய்கிறீர்கள். இது எளிதாக இருக்கிறது மேலும் கைவிடுவதிலிருந்து அது என்னை தடுக்கிறது.
பணம் மிகச் சிறந்த உந்துசக்தியாக இருக்கலாம். ஆனால் அது மற்றுமே வெற்றிக்கு வழிவகுக்காது என்கிறார். அவரைப் பொறுத்த வரையில் வெற்றி என்பது ”ஒவ்வொரு நாளின் முடிவிலும் எனக்கு அமைதி கிடைத்து, என் சுதந்திரத்துக்குத் தேவையான அதேசமயம் அதன் சூழலுக்குள் என்னை இழுக்காத பணமும் இருக்கும் வாழ்வுதான்” என்கிறார்.
உங்களை எரிச்சலாக்குபவர்கள் என்னும் கேள்விக்கு “திருட்டுத்தனம் உடையவர்கள், புலம்புபவர்கள், மூடர்கள், அடுத்தவர்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்கள் மற்றும் போலி உருவகம் செய்பவர்கள். யாருக்காய் இருந்தாலும் எரிச்சல் வரும்தான்னே?” என்றார்.
உடையணிதல் அவரின் பகட்டான வேலையின் ஒரு நீட்சிக்கும் மேல். உலகை எதிர்கொள்கையில் அது எனக்கு ஒரு கவசம் போல் செயல்படுகிறது. என் சுய முன்னேற்றத்தில் உடையணிதல் ஒரு முக்கியப் பங்காற்றியிருக்கிறது. பள்ளி கல்லூரி காலங்களிலிருந்து பதினாலு வருடமாக இந்த உடையணிதல் பற்றிக் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னை நான் எப்படி வெளிக்காட்டிக் கொள்ள விரும்புகிறேன் என்பதை உடை முடிவு செய்கிறது. இது என் பயணங்கள், என் வெளியுலகத் தொடர்புகள், என் உடலமைப்பைப் பற்றிய என் விழிப்புணர்வு இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இவை அனைத்தையும் விட முக்கியமாக நான் அன்று சொல்ல விரும்பும் கதை என்பதையும் என் உடை முடிவெடுக்கிறது. கோடுபோட்ட மெல்லிய ஜீன்ஸும், பெரிய கண்ணாடிகளுமாக நான் தென்படப்போகிறேனா? அல்லது என்னுடைய நாளைய கூட்டத்திற்கு அடர் நிறங்கொண்ட உடைகளை அணியப் போகிறேனா? என் நண்பர்களுடனான என் நாளுக்குப் பொஹீமிய கால்சட்டைகளும், தோலால் ஆன உடைகளை விரும்புகிறேன். அன்றைய நாளுக்கு நான் சொல்ல விரும்பும் கதைகள் தான் உடைகள் என்று நான் நினைக்கிறேன்.”
அவருடைய நகைகள் பெரும்பாலானவை வித்தியாசமான வடிவம் உடையதாக இருக்கின்றன. அவருக்கு மரகதக்கற்கள் பிடித்தமானவை. “நல்ல தரமான மரகதக்கல் எனக்கு குழந்தைகளின் கதைகளில் வரும் அமைதியான, சுத்தமான, மாயங்கள் நிறைந்த காட்டை ஞாபகப் படுத்தும்”
நவம்பர் 2011ல் தன் கனவு ஆண் மகனை மணக்கும் முன் சில கசப்பான அனுபவங்களைப் பெற்றிருக்கிறார். மென்ஸ் வேர்ல்ட் பத்திரிக்கையில் எழுதும் பகுதிக்கு அவர் அந்த அனுபவங்களை நகைச்சுவையாகப் பகிர்கிறார். வூடி ஆலனின் ஒரு மேற்கோளை அவர் தன் இருபதுகளின் தேடலைப் பற்றிச் சொல்ல எடுத்தாள்கிறார். “காதல்தான் பதில். ஆனால் உடலுறவு சில ஆச்சர்யமான கேள்விகளை எழுப்பிவிடுகிறது”
வாழ்க்கையை தனக்குப் பிடித்தபடி பெரிய அளவில் வாழ்வதென்பது தன் வாழ்வை கணவனோடு இருக்க வேண்டிவரும் என நினைக்கும் வரை ஆனந்தமாக இருந்திருக்கிறது. எங்களுடைய ஆரம்பகால தொலைபேசி உரையாடல்களில் அவரிடம் நகைச்சுவையாக, எப்படி தான் விரும்பிய திருமணம் என்பது இணைக்கப்பட்ட இரு தனி படுக்கையறைகளைக் கொண்டதென்று சொல்லியிருக்கிறார். அவர் அதை எந்தக் கோபமோ முகச்சுளிப்போ இல்லாமல் சாதாரணமாகக் கையாண்டிருக்கிறார். அது அவரை நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும் பெருந்தன்மை உடையவராகவும் எடுத்துக் காட்டியிருக்கிறது. “ஆச்சர்யம் என்னவென்றால் இப்போது ஒரு இரவு கூட எங்களால் தனித்தனியே நினைத்துப் பார்க்க முடியவில்லை”என்கிறார்.
திருமண வாழ்க்கை என்பது மிகப்பெரிய மாற்றம். “அது மிக மிக நெருக்கமான உணர்வுப் பூர்வமான பந்தம். அது பிறரின் திருமணம் நமக்கு மேலோட்டமாகத் தெரிவதை விட நெருக்கமானது. அது ஒருவருக்கொருவர் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தல் போன்றது. அந்தப் பூதக்கண்ணாடிப் பார்வை பிடிக்கவில்லை எனில் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்” என்கிறார்.
ஒரு அருமையான நேர்காணலைத் தத்துவப்பூர்வமாக நிறைவு செய்ய இரண்டு கேள்விகள் கேட்டேன். உங்கள் மகிழ்ச்சிக்கான காரணம் என்ன? என்று. அவருடைய பதில் மிக எளிமையானது “ உண்மையான அன்பும் உள்ளார்ந்த தேடலும். பணமும் உடல்நலமும் ஏற்கனவே உள்ளதுதானே”.
இளையவர்களுக்கு ஏதேனும் அறிவுரைகள் எனக் கேட்கையில் நான் மூன்று அறிவுரைகள் தருகிறேன். 1. நீங்கள் நினைப்பதை விட நீங்கள் வலுவானவர்கள். 2. உங்கள் மீது நீங்களே கடுமை காட்டாதீர்கள். 3. உங்கள் உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். சில வருடங்களுக்குப் பின் உங்கள் உணவு ஒவ்வொன்றிற்கும் நீங்கள் உடல் உழைப்பால் தான் காசு தர வேண்டியிருக்கும்.
(படம் நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா)