Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பஸ் டிரைவரின் மகள்: ப்ரீத்தியின் ‘இன்ஸ்பயரிங்' கதை!

இரண்டாவது முயற்சியிலேயே வெற்றி!

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பஸ் டிரைவரின் மகள்: ப்ரீத்தியின் ‘இன்ஸ்பயரிங்' கதை!

Wednesday September 29, 2021 , 1 min Read

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் கஷ்டமான விஷயம். ‘அனைத்துத் தேர்வுகளுக்கும் தாய்’ என அழைக்கப்படும் யுபிஎஸ்சி தேர்வை வெல்ல நிறைய ஆயத்தமும் உறுதியும் தேவை என்பதையும் மறுக்க முடியாது. அப்படியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், அதில் வெற்றிபெற்றுள்ளவர்களின் ஊக்கமளிக்கும் கதைகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது ப்ரீத்தி ஹூடா என்ற பெண்ணின் ஊக்கமளிக்கும் கதையை தான்.


ப்ரீத்தி ஹூடா நிறைய நிதிப் பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும் வலிமை மிகுந்த பெண்ணாக இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக உருவெடுத்து இருக்கிறார். ஹரியானா தான் பூர்வீகம் என்றாலும், டெல்லியில் தான் இவரது குடும்பம் வசித்து வருகிறது. டெல்லி மாநில அரசின் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் ப்ரீத்தி ஹூடாவின் தந்தை.


தனது மகள் ப்ரீத்தி ஹூடாவின் கனவை நனவாக்குவதற்கு நிதி நிலை ஒரு தடையாக இல்லாத வகையில் பார்த்துக்கொண்டார் அவரின் அப்பா. ப்ரீத்தி தனது குழந்தைப் பருவத்திலிருந்தே படிப்பில் படு சுட்டி. 10 ஆம் வகுப்பு தேர்வில் 77% மதிப்பெண்ணும், 12 ஆம் வகுப்பு தேர்வில் 87% மதிப்பெண்ணும் பெற்றார். ஒருகட்டத்தில் குடும்பத்தின் மோசமான நிதிநிலை காரணமாக படிப்பை நிறுத்தி பிரீத்திக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தது அவரின் குடும்பம்.

ப்ரீத்தி ஹூடா

ஆனால் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி படிப்பை தொடர்ந்த பிரீத்தி, டெல்லியில் உள்ள லட்சுமி பாய் கல்லூரியில் இந்தி பாடத்தில் பட்டம்பெற்றார். புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) இந்தியில் பிஎச்.டி பட்டம் பெற்றவர், இந்தியை தனது விருப்பப் பாடமாக கொண்டு யுபிஎஸ்சி தேர்வில் பங்குபெற்றார். கடந்த சில வருடமாக தேர்வுக்கு தயாராகி வரும் ப்ரீத்தி, தனது முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.


இருப்பினும், தனது முயற்சியை ப்ரீத்தி கைவிடவில்லை. இரண்டாவது முறையாக தேர்வில் கலந்துகொண்டார். இந்தமுறை, அவர் அகில இந்திய தரவரிசையில் 288வது இடம் பிடித்து UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றார்.