கிரிக்கெட் வீரர் டு தொழில்முனைவர் அவதாரம் எடுத்த நம்ம தீபக் சாஹர்!
இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேக பந்துவீச்சாளருமான தீபக் சஹர் தனது சொந்த ஸ்போர்ட்ஸ் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேக பந்துவீச்சாளருமான தீபக் சாஹர் தனது சொந்த ஸ்போர்ட்ஸ் பிராண்ட்னான
-ஐ அறிமுகப்படுத்தியுள்ளார்.கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், DNine என்ற ஸ்போர்ட்ஸ் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிறுவனம் ’LCDC அத்லெட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் கீழ் கிரிக்கெட் காலணிகள், ஸ்போர்ட் ஆக்சஸரீஸ், ஆடைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், தீபக் சாஹர், தனது மனைவி ஜெயா சாஹருடன் இணைந்து டிரேட் பேண்டஸி கேமை நடத்தும் தொழில்நுட்ப முயற்சியான ஜேசிடிசி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனத்தின் இணை நிறுவனராக கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் தந்தை லோகேந்திர சிங் சஹர் செயல்பட்டு வருகிறார்.
Dnine ஸ்போர்ட்ஸ்:
DNine விளையாட்டு உலகில் புரட்சியை ஏற்படுத்த புதுமைகளை உருவாக்க உள்ளதாக கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளையாட்டு வீரர் தீபக் சஹர் கூறுகையில்,
“இரண்டு ஆண்டுகளில் இந்நிறுவனம் தடகள காலணிகள் வணிகத்தில் குறிப்பிட்ட தடம் பதிக்கும். இது மூன்றாம் தரப்பினரான Weoliv-இல் தயாரிக்கப்பட்ட சுகாதாரப் பொருட்களையும் ரீடெயில் முறையில் விற்பனை செய்ய உள்ளது. ரிஷிகேஷ் மற்றும் டேராடூனில் உள்ள ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம் அதன் காலணிகள் மற்றும் பிற பொருட்கள் தயாரிக்கப்படும். இளம் மற்றும் வரவிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு மலிவு விலையில் தயாரிப்புகளை உருவாக்குவதே எனது யோசனை. பல இளம் கிரிக்கெட் வீரர்கள் நல்ல தரமான தயாரிப்புகளுக்கு செலவழிக்க முடியாது, இது அவர்களின் விளையாட்டை பாதிக்கலாம் மற்றும் காயத்தை கூட ஏற்படுத்தும்,” என்கிறார்.
பிராண்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. கிரிக்கெட் ஷூக்களில் தொடங்கி, அரை மற்றும் முழு ஸ்பைக் கொண்ட கிரிக்கெட் ஷூக்கள், ஹெல்த் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட் ஆடைகள், தொப்பிகள் மற்றும் பைகள் உள்ளடங்கிய விளையாட்டுத்துறைக்குத் தேவையான அனைத்து தயாரிப்புகளையும் வழங்கவுள்ளது.
18 மாத கால முதலீடு:
தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் உட்பட விளையாட்டு வீரர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு அதிநவீன தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதை இந்த பிராண்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலமாக DNine நிறுவனரும், பிரபல கிரிக்கெட் வீரருமான தீபக் சாஹர், தனது சொந்த கிரிக்கெட் ஷூவை உருவாக்கி முதல் தடகள வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். அதாவது, தீபக் சாஹர் இந்த பிராண்ட்டை தொடங்குவதற்கு முன்னதாக தரமான கிரிக்கெட் ஷூவை உருவாக்குவதற்காக மட்டும் 18 மாதங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு முதலீடு செய்துள்ளார்.
இந்த கிரிக்கெட் ஸ்பைக்குகள் மற்றும் ரப்பர் ஸ்டுட்கள் விளையாட்டின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மறுவரையறை செய்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. Dnine Sports ஷூக்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டிருப்பதோடு மட்டுமின்றி, சர்வதேச பிசியோதெரபிஸ்டுகள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தயாரிப்பின் சிறப்புகள் என்னென்ன?
Dnine Sports நிறுவனம் விளையாட்டு சாதனங்கள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்களுக்கான ஊட்டச்சத்து துறைகளிலும் கவனம் செலுத்த உள்ளது. இதற்காக WEOLIVE உடன் கரம் கோர்த்துள்ள நிறுவனம், DNINE WEOLIVE Whey Protein என்ற புரோட்டீன் பவுடரை விற்பனை செய்கிறது. இதன் ஒரு சர்விங்கில் 24 கிராம் புரோட்டீன், 4.5 கிராம் BCAA, 8.6 கிராம் EAA, ப்ரீபயாடிக்ஸ் மற்றும் செரிமான நொதிகள் ஆகியவற்றுடன் நிரம்பியுள்ளது.
DNINE ஹெல்த் சப்ளிமெண்ட்ஸ் FSSAI, ISO மற்றும் GMP ஆகியவற்றால் கடுமையான சோதனைக்கு உட்பட்டுள்ளன. அவை, தயாரிப்பின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்கின்றன.
"Dnine Sports இல், அனைத்து வயதினருக்கும் கிரிக்கெட் வீரர்களைப் போலவே தரமான பொருட்களை வழங்கி, அவர்களது செயல்திறனை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். எங்கள் தயாரிப்புகள் நீண்ட கால செயல்பாட்டினை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, காயங்களின் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் விளையாட்டு வீரர்கள் நீடித்து செயல்பட அனுமதிக்கின்றன. நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட கிரிக்கெட் ஷூக்கள் முதல் எங்களின் புதுமையான சப்ளிமெண்ட்ஸ் வரை, எங்கள் தயாரிப்புகள் ஒவ்வொன்றும், கடுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், களத்தில் வீரர்கள் எதிர்கொள்ளும் ஆற்றல்மிக்க சவால்களைச் சந்திக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடியிலும் தரம் மற்றும் பாதுகாப்பை வழங்குவதன் மூலம், விளையாட்டு உலகில் நீடித்த மரபாக விளையாட்டு வீரர்கள் சிறந்த முறையில் விளையாடவும் பாதுகாப்பை பெறவும் உதவுவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்கிறார் தீபக்.
மார்க்கெட்டிங் திட்டமிடல்:
பிரபல கிரிக்கெட் வீரரான தீபக் சாஹர் போட்டிகளின் போது உயிருக்கே ஆபத்தான காயங்களை எதிர்கொண்டுள்ளார். எனவே, தனது பிராண்ட் தயாரிப்புகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் வரை அனைத்தையுமே இளம் விளையாட்டு வீரர்கள் வாங்கக்கூடிய மலிவு விலையில் இருப்பதோடு, காயங்களைத் தடுப்பதில் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார். இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டுகளை அணுக வைப்பதே பரந்த நோக்கமாகும்.
இந்த பிராண்ட் ஏற்கனவே முந்தைய சீசனில் வரவிருக்கும் பல முதல்தர கிரிக்கெட் வீரர்கள் மற்றும் IPL வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்துள்ளது மற்றும் வரவிருக்கும் சீசனில் ஸ்பான்சரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், DNINE Sports நிறுவனம் தற்போது வாய்வழி மார்க்கெட்டிங் மூலமாக தனது விற்பனையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல், பிராண்டின் நோக்கத்தை பிரதிபலிக்கக்கூடிய கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு விளம்பரப்படுத்தவும், சோசியல் மீடியா மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலமாக மார்க்கெட்டிங் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 19 முதல், தயாரிப்புகள் அவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://dninesports.com/ மற்றும் Amazon தளங்களிலும் உங்களுக்கு அருகிலுள்ள ஸ்போர்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கும். தரம், மலிவு விலை மற்றும் விளையாட்டு வீரர்களின் நலனுக்கான தனது அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பிராண்ட் விளையாட்டுத்துறையில் தனித்து நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷூக்களை வண்ணமயமாக்கி விற்பனை செய்து மாதம் 10 லட்சம் ஈட்டும் நிறுவனர்கள்!