கால் ஒன்றை இழந்தபோதும் மனம் தளராத கால்பந்து விளையாட்டு சாதனையாளர்!
கால்பந்து விளையாட்டு ஆர்வலரான வியாசக் கை, கால் முதலிய உறுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டவர்களுக்கான இந்திய கால்பந்து அணியிலும் இந்திய கைப்பந்து அணியிலும் விளையாடியுள்ளார்.
பதின்மவயதினர் பெரும்பாலானோர் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில் கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த வியாசக் எஸ்ஆர் ஒரு விபத்தில் தனது காலை இழந்த போதும் தனது ஆர்வத்தை கைவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
24 வயது வியாசக் தனது கால் ஒன்றை இழந்திருந்திருந்தாலும் கை, கால் முதலிய உறுப்புகள் வெட்டியெடுக்கப்பட்டவர்களுக்கான (amputee) கேரள கைப்பந்து அணியில் பங்கெடுத்தார். தொழில்முறை கால்பந்து வீரர் போன்றே தனது திறமையை வெளிப்படுத்துகிறார்.
சமீபத்தில் வியாசக், தனது அணிக்காக கோல் எடுக்கும் வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டது. அந்த வீடியோவை 2 ஆயிரம் பேர் பார்த்தனர். அத்துடன் இந்த வீடியோ நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி பயிற்சியாளர் எல்கோ ஸ்கட்டோரியின் கவனத்தையும் ஈர்த்தது.
எல்கோ ஸ்கட்டோரி வியாசக்கின் துணிச்சலையும் திறனையும் கண்டு வியந்ததால் அவரை குவாஹத்திக்கு வரவழைத்து நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியின் பயிற்சி வகுப்புகளில் வியாசக்கை பங்கேற்கச்செய்தார் என மனோரமா ஆன்லைன் தெரிவிக்கிறது.
இதற்கு முன்பு பஹரினின் மனாமாவில் உள்ள Busaiteen விளையாட்டு அரங்கில் யுவ கேரளா க்ளப்பில் பங்கேற்க வியாசக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
வியாசக்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை
வியாசக்கிற்கு பதிமூன்று வயதிருக்கையில் மாவட்ட அளவிலான இளையோர் கால்பந்து போட்டிக்காக கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற தேர்வு முகாமிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு விபத்து ஏற்பட்டது. Edexlive உடனான உரையாடலில் வியாசக் குறிப்பிடுகையில்,
“நாங்கள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளானது. வாகனத்தை ஓட்டிய என் உறவினர் கீழே விழுந்தபோது அவர் மீது பேருந்து மோதியது,” என்றார்.
அந்த விபத்தில் வியாசக் தன் காலை இழந்தார். மற்றொரு காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. தாங்கமுடியாத வலி ஏற்பட்டதாக நினைவுகூர்ந்தார் வியாசக்.
மீண்டும் களமிறங்கினார்
வியாசக் இயல்பு நிலைக்குத் திரும்ப இரண்டு மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு சிகிச்சைமுறைகள் முடிந்த பிறகு அவர் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். ஒற்றை காலுடன் கார் ஓட்டவும் பழகிக்கொண்டார்.
ஊன்றுகோல் உதவியுடன் வேகமாக நடக்கத் துவங்கினார். அதே வேகத்துடன் தன்னால் பந்தையும் உதைக்கமுடியும் என்பதை உணர்ந்தார். படிப்படியாக அவரால் எளிதாக கால்பந்து விளையாட முடிந்தது.
கால்பந்து வீரராக இருந்து கைப்பந்து வீரராக மாறிய பயணம் குறித்து வியாசக் கூறுகையில்,
கேரளாவின் தேவகிரி கல்லூரியில் உள்ள ஹாஸ்டல் நண்பர்களுடன் வியாசக் விளையாடியபோது கால்பந்து அணியின் பயிற்சியாளர், வியாசக் போன்ற விளையாட்டு வீரர்கள் வேறு யாராவது இருந்தால் போட்டி ஏற்பாடு செய்வதாக தெரிவித்திருந்தார். துரதிர்ஷ்ட்டவசமாக கை, கால் முதலிய உடல் உறுப்புகள் வெட்டியெடுக்கப்பட்ட கால்பந்து வீரர்கள் வேறு யாரும் இல்லை. ஆனால் கேரளாவில் இத்தகைய நபர்களுக்கென பிரத்யேகமான கைப்பந்து அணி இருப்பதைத் தெரிந்துகொண்டார்.
எனவே வியாசக் கை, கால் முதலிய உடல் உறுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டவர்களுக்கான கேரள கைப்பந்து அணியில் இணைந்துகொள்ளத் தீர்மானித்தார். பின்னர் கை, கால் முதலிய உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டவர்களுக்கான இந்திய கைப்பந்து அணியில் சர்வதேச அளவில் பங்கேற்றார்.
வெற்றித்தருணம்
வியாசக் கைப்பந்து ஆட்டக்காரராக வெற்றியடைந்த பிறகும் கால்பந்து மீதான ஆர்வம் தொடர்ந்தது. எனவே கை, கால் முதலிய உடல் உறுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டவர்களுக்கான ஆசிய கால்பந்து போட்டிக்கான தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார்.
பின்னர் கை, கால் முதலிய உடல் உறுப்புகள் இல்லா இந்திய கால்பந்து அணியில் பங்கேற்றதாக தி நியூஸ் மினிட் தெரிவிக்கிறது. விசாக்கின் சாதனை குறித்து அவரிடம் கேட்கையில்,
"எனக்கு எப்போதும் கால்பந்து உற்சாகமளித்து வந்தது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை எந்த வகையிலும் நிரப்ப முடியவில்லை. எனவே அதில் ஈடுபட தீவிர முயற்சி எடுத்தேன்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA