Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: ஆறுதல் தரும் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.120 குறைவு!

மூன்று நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது ஓரளவு குறைந்திருப்பது, தங்கம் வாங்க விழைவோருக்கு ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது.

Gold Rate Chennai: ஆறுதல் தரும் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.120 குறைவு!

Saturday December 28, 2024 , 2 min Read

மூன்று நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது ஓரளவு குறைந்திருப்பது, தங்கம் வாங்க விழைவோருக்கு ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.7,150 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.200 உயர்ந்து ரூ.57,200 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.27 உயர்ந்து ரூ.7,800 ஆகவும், சவரன் விலை ரூ.216 உயர்ந்து ரூ.62,400 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (28.12.2024):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.7,135 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.57,080 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து ரூ.7,784 ஆகவும், சவரன் விலை ரூ.128 குறைந்து ரூ.62,272 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (28.12.2024) 1 கிராம் வெள்ளி விலை 10 பைசா குறைந்து ரூ.99.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.100 குறைந்து ரூ.99,900 ஆகவும் உள்ளது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சற்றே வீழ்ச்சி கண்டு வருகிறது. தங்கத்தின் தேவை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கினாலும், ஆபரத் தங்கத்தின் விலை சற்றே குறைந்து காணப்படுகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,135 (ரூ.15 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57,080 (ரூ.120 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,784 (ரூ.16 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,272 (ரூ.128 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan