தினமும் 1/4கி பாதாம்; 4கி மாதுளை, 20 முட்டை, ஆயில் மசாஜ் - ரூ.23 கோடி மதிப்பு எருமை மாட்டின் ஒரு நாள் டயட்!
அந்த எருமையாகவே பிறந்திருக்கலாம் என்று மைண்ட் வாய்ஸ் சொல்கிறதா? அந்த எருமையின் வொர்த் ரூ.23 கோடி. விந்தணு விற்பனையில் மாதம் ரூ 4-5 லட்சம் சம்பாதிக்கிறது இந்த ஹரியானா எருமை.
கால் கிலோ பாதாம், 4 கிலோ மாதுளை, 5 லிட்டர் பால், 20 முட்டை, 30 வாழைப்பழம், தினமும் ஸ்பெஷல் பாதாம் ஆயில் மசாஜ்... இது ஒரு எருமை மாட்டின் ஒருநாள் டயட் பிளான் என்றால் எப்படியிருக்கிறது?
அந்த எருமையாகவே பிறந்திருக்கலாம் என்று மைண்ட் வாய்ஸ் சொல்கிறதா? பக்சே, அந்த எருமையின் வொர்த் ரூ.23 கோடி. விந்தணு விற்பனையில் மாதம் ரூ 4-5 லட்சம் சம்பாதிக்கிறது இந்த ஹரியானா எருமை.
ஹரியானாவைச் சேர்ந்த அன்மோல் எனும் பெயரிடப்பட்டுள்ள எருமை மாடும், அதன் டயட் பிளானும் தான் ரீசெண்ட் ஆன்லனை் வைரல். நல்லா எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்க என்பதை மெய்பித்துள்ள அன்மோலின் மொத்த எடை 1,500 கிலோ.
இந்தியா முழுவதும் விவசாய கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் மாடுகள் பங்கேற்கின்றன. அப்படி, மீரட்டில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் கண்காட்சிகளில் கலந்து கொண்ட அன்மோல், அதன் அபரிமிதமான அளவு, மற்றும் குறிப்பிடத்தக்க இனப்பெருக்கத் திறனால், ஓவர் நைட்டில் இந்தியா முழுவதும் பேமஸாகியுள்ளது.
அன்மோலின் லைஃப்ஸ்டைலே படு ஹெல்தியாக்கி உள்ளார் அதன் உரிமையாளர் கில். நாளொன்றுக்கு அன்மோலின் டயட் பிளானிற்காக ரூ.1,500 செலவு செய்கிறார். அதன் டயட் பிளானில் 250 கிராம் பாதாம், 4 கிலோ மாதுளை, 30 வாழைப்பழங்கள், 5 லிட்டர் பால் மற்றும் 20 முட்டைகள் அடங்கும். இது தவிர எண்ணெய் கேக், பசுந்தீவனம், நெய், சோயாபீன்ஸ் மற்றும் சோளம் ஆகியவையும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
டயட் பிளான் ஒரு புறம் அடடே என இருக்க, மறுபுறம் அன்மோலின் சரும பாதுகாப்பிற்காக எடுக்கும் மெனக்கெடானது இன்றைய பெண்களின் ஸ்கின் கேர் ரொட்டினுக்கு இணையாக உள்ளது.
யெஸ், அன்மோல் ஒருநாளுக்கு இருமுறை குளிக்க வைக்கிறார்கள். அன்மோலின் மேற்புறத் தோல் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்காக தினமும் பாதாம் மற்றும் கடுகு எண்ணெய் கலந்து ஸ்பெஷல் ஆயில் மசாஜ் செய்யப்படுகிறது. உணவு மற்றும் பராமரிப்பிற்காக அதிகம் செலவாகும்போதும், கில் ஒரு நாளும் அதை தவிர்ப்பதில்லை.
ஏன், அன்மோலின் மெயின்டென்னஸிற்காக அதன் தாய் மற்றும் தங்கையையும் விற்றுள்ளார். இதில், அன்மோலின் தாய் நாளொன்றுக்கு 25 லிட்டர் பால் உற்பத்தி செய்யும் சிறந்த எருமை.
அன்மோலை பராமரிப்பது எவ்வளவு காஸ்ட்லியோ, அதற்கு ஏற்றாற் போன்று அதன் உரிமையாளருக்கு வருமானத்தையும் ஈட்டித் தருகிறது. வாரத்திற்கு இருமுறை சேகரிக்கப்படும் அதன் விந்தணுவானது, இனப்பெருக்கத்திற்காக கால்நடை வளர்ப்பாளர்களால் போட்டா போட்டிக் கொண்டு வாங்கப்படுகிறது. விந்தணுவானது ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு விந்தணு சேகரிப்பும் நூற்றுக்கணக்கான கால்நடைகளை வளர்ப்பதற்கு பங்களிப்பதுடன், கில்லிற்கு நிலையான மாத வருமானமாக ரூ 4-5 லட்சத்தையும் ஈட்டித்தருகிறது.
இந்த வருமானம் அன்மோலின் பராமரிப்பிற்கான குறிப்பிடத்தக்க செலவுகளை ஈடுசெய்வதில் கில்லுக்கு ஆதரவளிக்கிறது. அன்மோலின் விந்தணு டிமாண்டால், மாட்டை விலைக்கு வாங்க பலரும் முன்வந்துள்ளனர். அன்மோலை ரூ.23 கோடிக்கு வாங்குவதாக தெரிவித்த போதும், கில் அதை மறுத்துவிட்டார். அன்மோல் வருவாய் ஈட்டி கொடுப்பது ஒரு புறமிருக்க கில் அன்மோலை ஒரு குடும்ப உறுப்பினராகக் கருதுகிறார். அதனால், அன்மோல் எருமையைப் பிரியும் எண்ணம் அவருக்கில்லை.
ஆகமொத்தம், கில் அன்மோல் எருமையை 23 கோடி ரூபாய்க்கு வைத்திருப்பது 2 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், 10 மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்கள் அல்லது நொய்டாவில் ஒரு டஜன் சொகுசு வீடுகள் வைத்திருப்பதற்கு சமமானதாகும்.