குப்பைகளை கலைப் படைப்புகள் ஆக்கும் தேவல் உலகப் பிரபலம் ஆகிய கதை!
‘நீங்கள் உங்கள் வாழ்க்கையை வீணாக்க விரும்பவில்லை என்றால், புதிதாக ஏதாவது செய்யுங்கள், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடியிங்கள்,’ என்கிறார் தேவல்.
குப்பைகள் எப்போதும் பயனற்றது அல்ல. உங்களிடம் திறமை இருந்தால், நீங்கள் குப்பைகளை அழகான கலைப்படைப்புகளாக மாற்றுவீர்கள். இந்தோரின் தேவல் வர்மாவின் கதை இது.
அவர் தனது தனித்துவமான மற்றும் அற்புதமான திறமையை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், இன்று அவர் தனது திறமையின் வலிமையால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறைய புகழ் பெற்று வருகிறார்.
குப்பை என்பது பயனற்றது அல்ல, அதை அழகிய கலைப்படைப்புகளாகவும் மாற்றலாம்… தனது குழந்தைப் பருவ நாட்களில் கார்ட்டூன் சேனல் போகோவில் MAD நிகழ்ச்சியில் இருந்து ஊக்கம் பெற்றவர் தேவல் வர்மா, குப்பையிலிருந்து அலமாரியில் வைக்கும் அழகான பொருளை உருவாக்கி தன்னுள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தினார்.
அவரது கலை பற்றி பேசும்போது , தேவல் கூறுயது,
"கவிதை ஒரு கலை, திரைப்படம் தயாரித்தல் ஒரு கலை, கற்பித்தல் ஒரு கலை, கற்றல் ஒரு கலை, ஆனால் எனக்கு உலோகம் (மெட்டல்) ஒரு கலையானது. எனது கதை குப்பைகளை புதையலாக மாற்றுவது பற்றியது."
குழந்தைப் பருவத்தில், கழிவுகளிலிருந்து பல்வேறு வகையான கலைப்பொருட்களை உருவாக்கும் வித்தையாக அவர் கண்ட கனவுகள் இயந்திர பொறியியலில் சேரும்போது மேலும் பறந்தன. தனது கருத்தை மையமாகக் கொண்டு தேவல் கூறியதாவது,
"நீங்கள் கழிவாக பார்ப்பது எனக்கு ஒரு ஆதாரமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை, நாணயங்கள் ஒரு மோட்டார் சைக்கிளின் சக்கரங்கள் போல இருந்தன, ஒரு பேனாவின் மூடி ஒரு பெட்ரோல் டேன்க் போன்றது, இவை அனைத்தையும் சேர்த்து, ஒரு மோட்டார் சைக்கிளின் ஒரு சிறிய கலைப்படைப்பை முதன்முறையாக குப்பையிலிருந்து செய்தேன்."
தேவல் அறிவியல் புனைகதை திரைப்படங்களிலிருந்து நிறைய உத்வேகம் பெறுகிறார். திரைப்படத்தின் போது, கதாபாத்திரங்களின் உடைகள் மற்றும் படத்தின் தொகுப்பு ஆகியவற்றால் அவர் ஊக்கம் பெறுகிறார்.
தேவல் தனது பொறியியலின் கடைசி ஆண்டில் ஸ்கிராப்பில் இருந்து, பைக் உற்பத்தியாளர் ஹார்லி டேவிட்சனின் சின்னத்தை உருவாக்கினார். அது நிறுவனத்தின் ஷோரூமில் வைக்கப்பட்டது.
எல்லா பொறியியல் மாணவர்களையும் போலவே, தேவலும் தனது படிப்புக்குப் பிறகு தனது வேலையைப் பற்றி உறுதியாக நம்பினார், ஆனால் பின்னர் அவர் விரும்பியதை மட்டுமே செய்ய முடிவு செய்தார்.
"பலர் என் வீட்டிற்கு வந்து உங்கள் மகன் என்ன செய்கிறான் என்று என் பெற்றோரிடம் கேட்பார்கள்? ஆனால் அந்த காலகட்டத்தில் என் மகன் ஒரு கலைஞன் என்று கேட்பவர்களிடம் சொல்ல என் பெற்றோருக்கு தைரியம் இல்லை."
தனது கலையை மேலும் செம்மைப்படுத்த, தேவல் தனது பொறியியலுக்குப் பிறகு வடிவமைப்பில் முதுகலைப் பட்டம் பெறத் தேர்வு செய்தார். பூனேவின் எம்ஐடி இன்ஸ்டிடியூட் ஆப் டிசைனில் சேருவதன் மூலம், பலவிதமான கலை மற்றும் முறைகளைப் பற்றி அறிந்து கொண்டார், இது அவரது கலையை மேலும் செம்மைப்படுத்த உதவியது.
தேவல் இவற்றை செய்ய கடினமாக இருந்தது. இந்த வேலையிலிருந்து வருவாய் கிடைக்காததால், அவர் தனது தொழிலுக்காக தனது வீட்டிலிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டார்.
இதையெல்லாம் மீறி, துபாயில் நடந்த ஒரு கண்காட்சியில் தேவல் பங்கேற்றார், அதில் அவர் 2 கிலோ குப்பைகளால் ஆன கிடார் ஒன்றைக் காண்பித்தார். இதற்குப் பிறகு, தேவல் தனது வழிகாட்டியான சமீர் சர்மா மற்றும் ஜனக் பலாட்டா ஆகியோரின் உதவியைப் பெற்று நாடு முழுவதும் பல கண்காட்சிகளுக்குச் சென்று தனது திறமையை நிரூபித்தார்.
"நீங்கள் உங்கள் வாழ்க்கையை வீணாக்க விரும்பவில்லை என்றால், புதிதாக ஏதாவது செய்யுங்கள், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடியிங்கள். இன்று என்னால் பெருமையுடன் சொல்ல முடியும் நான் உலோகத்தை வைத்து கனவு காண்கிறேன் என்று, உலோகத்துடன் இன்று நானும் வளர்கிறேன் என்று.”