'72 வயதில் தாயானதை நினைத்து வருந்தவில்லை'- பாட்டி வயதில் தாயான தல்ஜிந்தர்!
சாதிக்க வயதில்லை என்னும் கூற்றை நாம் கேள்விப்பட்டதுண்டு; ஆனால் சாதிக்க மட்டும் அல்ல தாய்மை அடையவும் வயது ஓர் தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளார் 72 வயதில் தாய்மை அடைந்த பெண் தல்ஜிந்தர் கௌர்.

பட உதவி: Barcroft
பஞ்சாபில் வசிக்கும் 81 வயதான மொஹிந்தர் சிங் மற்றும் அவரது மனைவிக்கு திருமணமாகி 47 வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் 5 வருடங்களுக்கும் முன்பு செயற்கை கருத்தரித்தல் (IVF) மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர் இந்த தம்பதியினர்கள்.
செயற்கைக் கருத்தரித்தல் முயற்சி செய்த இருமுறையும் கரு நிலைக்காமல் கலைந்தது. அதன் பின் கடைசி வாய்ப்பாக மூன்றவது மூறை 2015ல் செய்யப்பட்ட சிகிச்சை வெற்றியடைய தல்ஜிந்தர் கர்பமானார்.
ஹிசரை சேர்ந்த தேசிய கருவுற்றல் மற்றும் டெஸ்ட் டியூப் பேபி மையத்தின் மருத்துவர்கள் கண்காணிப்பில் கருவுற்ற தல்ஜிந்தர், அவர்களின் உதவியோடு ஏப்ரல் 2016 ஆண்டு அழகிய ஆண் மகனை பெற்றுள்ளார். வயது முதிர்ந்த நிலையில் பெற்றோர் ஆனதைக்கண்டு சற்றும் மனம் தளரவில்லை இந்த தம்பதியனர்கள்.
“அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும், அவை அனைத்தும் கடவுள் நினைத்தாலே நிறைவேறும். என்னைப்பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்தை நான் பெரியதாய் எடுத்துக்கொள்ளவில்லை. நான் தாய்மை அடைந்ததே எனக்கு முக்கியம்,” என்கிறார் தல்ஜிந்தர்.

பட உதவி: Barcroft
வயதனா நிலையில் குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள முடியும் என்ற சந்தேகம் வரவில்லையா என்றுக்கேட்டால்,
“அது போன்ற சிந்தனை எதுவும் எனக்கு தோன்றவில்லை. பெற்றோர்கள் ஆனதை நினைத்து நானும் என் கணவரும் மகிழ்சியாக உள்ளோம். அனைத்தும் கடவுள் காட்டும் வழி.” என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை வளர்ப்பு தான் நினைத்தை விட சிரமமாக இருந்தபோதும் தான் ஒரு போதும் இந்த வயதில் தாயனாதை நினைத்து வருந்தவில்லை என்கிறார்.
74 வயதில் வயதுக்கு ஏற்ற பலவீனமான மூட்டுகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதால் சற்று சிரமப்படுகிறார் தல்ஜிந்தர்.
“இப்பொழுது என் மகன் தவழ்வதால் நானும் முட்டிப்போட்டு அவனுடன் செல்வதால் சற்று சிரமமாக இருக்கிறது. இரத்த அழுத்தத்தினால் உடல் எளிதில் சோர்வடைகிறது,” என்கிறார்.
விவசாயம் செய்யும் மொஹிந்தர் சிங் ஆல் தனது இளம் வயதில் குழந்தைக்கான சிகிச்சைக்கு பணம் செலவழிக்க முடியவில்லை. போதிய நிதி நிலைமை இல்லாததாலும் அப்பொழுது மருத்துவ வசதி முன்னேற்றம் இந்த அளவு இல்லாததாலும் செயற்கை கருத்தரிப்பு செய்ய முடியாமல் இவ்வளவு காலம் தள்ளிப்போனதாக தெரிவிக்கின்றனர். தற்பொழுது சொந்த இடத்தை விற்று தான் இந்த சிகிச்சையையும் மேற்கொண்டுள்ளனர்.

பட உதவி: Barcroft
வயதாகி குழந்தைப்பெற்றதால் 3 மாதத்திற்கு மேல் குழந்தைக்கும் தல்ஜிந்தரால் தாய்பால் கொடுக்க முடியவில்லை. தனது வயதுக்கு சற்று உடல் எடை குறைவாக இருந்ததாலும் மகன் அர்மான் ஆரோக்கியமாக இருக்கிறார் என்கின்றனர்.
“நாங்கள் இறந்தப் பிறகு குழந்தையின் நிலை என்ன என பலர் கேட்கின்றனர்; நான் கடவுளை நம்புகின்றேன் அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்,” என முடிக்கிறார் மொஹிந்தர் சிங்.
தகவல் உதவி: இன்டிபென்டென்ட், ANI