Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

5 நிமிடங்களில் அமைதியை அடைய வேண்டுமா? இதோ இந்த ஆப் ட்ரை பண்ணுங்க...

பரபரப்பான உங்கள் வாழ்க்கையை சற்றே நிதானப்படுத்திக் கொள்ள விருப்பமா? இதோ உங்களுக்கான செயலி!

5 நிமிடங்களில் அமைதியை அடைய வேண்டுமா? இதோ இந்த ஆப் ட்ரை பண்ணுங்க...

Friday December 13, 2019 , 4 min Read

நம் வாழ்க்கை முறை தொடர்ந்து பரபரப்பாகவே இருந்து வரும் நிலையில் சற்றே நிதானிப்பது சிறந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அன்றாடம் தியானம் செய்வதன் மூலம் இது சாத்தியப்படும்.

தற்போதைய தருணத்தில் இருந்து முன்முடிவுகள் ஏதுமின்றி அந்த குறிப்பிட்ட நேரத்திலான எண்ணங்கள், உணர்வுகள், உணர்ச்சிகள் ஆகியவற்றை அனுபவிக்கவேண்டும். இதன் மூலம் அழுத்தத்திலிருந்து மீளமுடியும். மற்றவர்கள் மீது இரக்கம் காட்ட முடியும். நம்முடைய கவனம் செலுத்தும் திறனை அதிகரித்துக்கொள்ள முடியும். இவற்றை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நம்மில் பெரும்பாலானோர் தியானத்தின் பலனை நன்கறிவோம். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது எளிதல்ல.

இதனால் மைண்ட்ஃபுல்னெஸ், தியானம், ரிலாக்சேஷன் செயலி போன்றவை அதிகரித்துள்ளது. இவை ஒவ்வொன்றும் உங்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உறுதியளிக்கிறது. 2017ம் ஆண்டில் செயலி கலாச்சாரத்தில் மிகவும் பிரபலமாகி வெற்றியடைந்த நான்கு முக்கியப் பிரிவுகளில் ஒன்றாக இந்தப் பிரிவினை ஆப்பிள் எடிட்டர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும் இந்தப் பிரிவில் காணப்படும் எண்ணற்ற செயலிகளில் உங்களது ஆளுமைக்குப் பொருத்தமான செயலியைக் கண்டறிவது எளிதான செயல் அல்ல.

Peace

நாங்கள் தியானம் மற்றும் மைண்ட்ஃபுல்னெஸ் தொடர்புடைய பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்தோம். முழுமையான தீர்வளிக்கும் செயலி ஏதும் இல்லாததைத் தெரிந்துகொண்டோம். ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னெஸ் பிரிவின்கீழ் Editor’s Choice (ப்ளேஸ்டோர்) செயலியைக் கண்டோம். Stop, Breathe & Think (SBT) தனித்தேவைக்கேற்ப பயிற்சியளிக்கும் தளமாக செயல்படுகிறது. குழந்தைகள், பதின்மவயதினர், பெரியவர்கள் என அனைவருக்கும் பயிற்சியளிக்கிறது.


இந்த செயலி iOS மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில் கிடைக்கிறது. ஆப் ஸ்டோரில் 4.8 நட்சத்திரக் குறியீடும் கூகுள் ப்ளேஸ்டோரில் 4.4 நட்சத்திரக் குறியீடும் பெற்றுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

1

குழந்தைகள், பதின்ம வயதினர், இளம் வயதினர் போன்றோர் தங்களது வாழ்க்கையில் காணப்படும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்கத் தேவையான உணர்வு ரீதியான வலிமையை உருவாக்கிக்கொள்ள உதவுவதே Stop, Breathe & Think நோக்கம் என இந்நிறுவனத்தின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அழுத்தம் நிறைந்த சூழல்களிலும் அச்சுறுத்தல் நடக்கும் சமயங்களிலும் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கும் சமயங்களிலும் அல்லது படுக்கைக்கு செல்லும் நேரத்தில் ரிலாக்சேஷன் தேவைப்பட்டாலும் இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பெரும்பாலான மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.


உங்களது வாழ்க்கைமுறைக்கு ஏற்றவாறு இந்த செயலி அமைந்துள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள இந்த செயலியை ஆராய்ந்தோம். நீங்கள் புதிதாக தியானம் செய்பவராக இருந்தால் இந்தச் செயலியின் முகப்புப்பக்கத்தின் கீழே உள்ள ‘More’ என்கிற பகுதியின் மூலம் ’Learn to Meditate’ பகுதிக்குச் செல்லவும். இந்தப் பகுதியில் தியானம் எவ்வாறு செயல்படும், தியானம் செய்வதற்கான பரிந்துரைகள், புதிதாக தியானம் செய்யத் தொடங்குபவர்களுக்கான விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

Check in

இந்தத் தகவல்களைப் படித்த பிறகு முகப்புப்பக்கத்திற்கு சென்று அதே திரையில் உள்ள ‘Check in’ பகுதிக்கு செல்லலாம். செயலியில் “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்கிற கேள்வி எழுப்பப்படும். உங்களது மனமும் உடலும் எப்படி உணர்கிறது என்பது குறித்து நீங்கள் சிந்திக்க 10 விநாடிகள் ஆழ்ந்து மூச்சுவிடவும் பரிந்துரைக்கும். இந்த நேரம் முடியும் தருவாயில் மணி சத்தம் கேட்கும். இதை நீங்கள் தவிர்த்துவிடலாம். நீங்கள் துவங்குவதற்கு முன்பு மனதளவிலும் உடலளவிலும் உணர்வு ரீதியாகவும் எப்படி உணர்கிறீர்கள் என்று செயலி கேட்கும். இந்த மூன்று பகுதிகளின்கீழ் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க ஐந்து உணர்வுகளை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.


அதன் பிறகு உங்களது அப்போதைய மன நிலைக்கு ஏற்றவாறு கால அவகாசத்துடன் 5 முதல் 10 பயிற்சிகள் செயலியில் காணப்படும். உங்களுக்கு பிடித்தமானவற்றில் நீங்கள் ஈடுபடலாம். பெரும்பாலானவை 10 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்கும். சில தியான முறைகளை செயலியிலேயே கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அதேசமயம் இலவசமான பயிற்சிகளையும் செயலி வழங்குகிறது.

2

”Check-in” பகுதி மிகச்சிறந்த அம்சமாகும். மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த உதவுகிறது. அன்றாடம் தியானம், மூச்சுப்பயிற்சி, யோகா, நடைபயிற்சி, நண்பர்களுடன் உரையாடுதல், அன்பு செலுத்துதல் என பல்வேறு சிறு பயிற்சிகளை தனித்தேவைக்கேற்றவாறு வடிவமைக்க இந்த அம்சம் உதவுகிறது.


தியானத்தில் ஈடுபடுவதற்காக பரிந்துரைக்கப்பட்டவற்றில் இருந்து பயனர் தேர்வு செய்துகொள்ளலாம். அல்லது Explore பகுதியில் ஆராயலாம். தியான முறைகளை ஆஃப்லைனில் பார்வையிட பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. செயலியின் இலவச வெர்ஷனிலும் பயனர்களுக்கு பல அம்சங்கள் வழங்கப்படுகிறது.

அடிப்படையான தியான முறைகள் மற்றும் ரிலாக்சேஷன் முறைகளை ஆராய நீங்கள் சைன்-அப் அல்லது லாக்-இன் செய்யவேண்டிய அவசியமில்லை. இலவச வெர்ஷனிலும் விளம்பரங்கள் ஏதும் இடம்பெறுவதில்லை. இவையே இந்த செயலியின் சிறப்பம்சமாகும்.

முகப்புப்பக்கத்தில் உள்ள ‘Progress’ என்கிற பிரிவிற்கு கணக்கு அவசியம். சைன்-அப் செய்வதற்கு உங்களது பெயர், வயது, பாலினம், இமெயில் முகவரி ஆகியவை செயலியில் கேட்கப்படும்.

நீங்கள் லாக்-இன் செய்த பிறகு தியான முறையின் எண்ணிக்கை, வகை, நிறைவு செய்யப்பட்ட தியான முறைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஸ்டிக்கர் வழங்கப்படும். நீங்கள் இவற்றைத் தொடரவும் கருத்து தெரிவிக்கவும் உங்களது முன்னேற்றத்தைக் காணவும் வாய்ப்பளிக்கப்படும். முன்னேற்றம் குறித்த பக்கத்தில் நீங்கள் பெற்ற ஸ்டிக்கர்கள், நீங்கள் எத்தனை முறை தியானம் செய்தீர்கள், உங்களது முக்கியமான ஐந்து உணர்ச்சிகள் போன்றவை கண்காணிக்கப்படும். இதுவரை 13 மில்லியன் இமோஷனல் செக்-இன் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

சமூக நோக்கத்துடன்கூடிய செயலி

SBT ஃப்ரீமியம் மாதிரியில் செயல்படுகிறது. கட்டணத்துடன்கூடிய இந்த மாதிரியில் அக்குபிரஷர், யோகா என 100-க்கும் அதிகமான பயிற்சிகள் உள்ளன. அதிக பேச்சாளர்கள், வழிகாட்டலுடன்கூடிய தியானமுறைகள் மற்றும் வழிகாட்டல் இல்லாத தியானமுறைகள் போன்றவையும் இதில் அடங்கும். பயனர்கள் இந்த செயலியை முழுமையாக ஆராய சந்தா திட்டத்தைத் தேர்வு செய்யலாம் (மாதாந்திர சந்தா தொகை 416 ரூபாய். வாழ்நாள் முழுவதுக்குமான ஆண்டு சந்தா 20,500 ரூபாய்).


அமெரிக்காவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் அதன் 10 சதவீத நிகர வருவாயை கலிபோர்னியாவைச் சேர்ந்த Tools For Peace உடன் பகிர்ந்துகொள்கிறது. இது தியானம் மற்றும் மைண்ட்ஃபுல்னெஸ் முறைகளின் பலனை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கான பிரத்யேக முயற்சியாகும்.


சந்தாவை எந்த நேரத்திலும் ரத்து செய்யலாம். அக்கவுண்ட் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று தானாகவே புதுப்பித்துக்கொள்ளும் வசதியை ரத்து செய்துவிடலாம்.

பயனர் இடைமுகம்

இந்தச் செயலி அமைதியான எளிமையான, எளிதாகப் பயன்படுத்தக்கூடிய பயனர் இடைமுகம் கொண்டுள்ளது. இதன் நுண்ணிய நிறங்கள், பின்னணி கிராஃபிக்ஸ் ஆகியவை தியான முறைகளுக்கு ஏற்றவாறான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கிறது. டைப் செய்யவேண்டிய அவசியமின்றி இதை எளிதாகப் பயன்படுத்தமுடியும். இந்த ஸ்மார்ட் முகப்புத் திரையில் அனைத்து அம்சங்களும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயலியின் கீழ்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் ஒவ்வொரு பகுதிக்கும் எளிதாக செல்லமுடியும். கூகுள் ஃபிட் உடனும் இந்த செயலியை இணைத்துக்கொள்ளமுடியும்.

கருத்து

தியானம் தொடர்பான பல்வேறு செயலிகள் இருப்பினும் தனித்தேவைக்கேற்றவாறு அமைக்கப்படும் டூல்கள் SBT செயலியின் தனித்துவமான அம்சமாகும். இதில் பயனர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அப்போதைய மனநிலை ஆராயப்படுகிறது.


பதில்களின் அடிப்படையில் தியான முறைகளுக்கான வழிகாட்டல்கள் வழங்கப்படும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற இந்த செயலி நேரத்தை சேமிக்க உதவும். வெறும் ஒரு நிமிடத்திலேயே ஒருவர் அமைதியடைய இதன் தனித்தேவைக்கேற்ற அம்சங்கள் உதவும்.


நீங்கள் மிகவும் பரபரப்பாகவும் அழுத்தத்துடனும் இருப்பதால் தியானத்தைத் தொடங்க திட்டமிட்டிருப்பீர்களானால் இந்த செயலியை உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம். நீங்கள் இதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உங்களுக்கு நிச்சயம் உடனடி தீர்வு வழங்கப்படும்.


ஆங்கில கட்டுரையாளர்: ராஷி வர்ஷினி | தமிழில்: ஸ்ரீவித்யா