இந்திய தொழில் வர்த்தக சபையின் தமிழ் நாடு தலைவராக டாக்டர்.ஜி.எஸ்.கே.வேலு மீண்டும் நியமனம்!
இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் ( பிக்கி) தமிழ் நாடு பிரிவின் தலைவராக, டிரைவிட்ரான் குழும நிறுவனங்களின் தலைவரும், நுபெர்க் டயக்னஸ்டிக்ஸ் தலைவருமான டாக்டர்.ஜி.எஸ்.கே.வேலு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (FICCI) தமிழ் நாடு பிரிவின் தலைவராக, டிரிவிட்ரான் குழும நிறுவனங்களின் தலைவரும், நுபெர்க் டயக்னஸ்டிக்ஸ் தலைவருமான டாக்டர்.ஜி.எஸ்.கே.வேலு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திரா பிராஜெக்ட்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் பூபேஷ் நாகராஜன் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
டிரிவிட்ரான் குழும நிறுவனங்களின் தலைவரான டாக்டர்.ஜி.எஸ்.கே.வேலு, காவேரி மருத்துவமனை குழுமத்தின் இயக்குனராகவும், பங்குதாரராகவும் இருப்பதோடு, இந்தியாவில் எஸ்டோனியாவுக்கான கவுரவத் தூதராகவும் இருக்கிறார்.
டாக்டர்.வேலு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் எனும் நோக்கம் கொண்டவர். மருத்துவத் துறையின் முன்னோடி தொழில்முனைவோராக விளங்குகிறார்.

டாக்டர்.ஜி.எஸ்.கே.வேலு (இடது), பூபேஷ் நாகராஜன் (வலது)
டாக்டர்.வேலு பல்வேறு இடர்களை எதிர்கொண்டு மருத்துவத் துறையில் தனது நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார். தனது தீவிர ஈடுபாடு மற்றும் கடின உழைப்பிற்காக அவர் ஏற்கனவே பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் அவர், இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் ( பிக்கி) தமிழ் நாடு பிரிவின் தலைவராக, மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பூபேஷ் நாகராஜன், மலேசியாவின் விஐஆர் இன்பிரா இயக்குனராக இருப்பதோடு, இந்திரா அக்ரோடெக் நிறுவனராகவும் இருக்கிறார். சிவில் பொறியாளரான நாகராஜன் கட்டுமானத்துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்றிருக்கிறார்.
அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் தனது பணி வாழ்க்கயைத்துவக்கியவர், பன்னாட்டு நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்று, இந்தியா மற்றும் தாய்லாந்தில் திட்டங்களை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார். 2008ல் சிங்கப்பூரில் பணியாற்றியவர், 2012ல் இந்திரா பிராஜெட்க்ஸ் மூலம் அங்கு விரிவாக்கம் செய்தார். மலேசியா, மாலத்தீவுகளிலும் விரிவாக்கம் செய்துள்ளார்.