மருத்துவமனை தூரம்! ஆனால் மருத்துவர் நம் பக்கம்!
அடுடாக், பெற்றோர் மற்றும் குழந்தைநல மருத்துவர்கள் இடையிலான தகவல் பரிமாற்றத்தில் ஒரு புரட்சி ஏற்படுத்தியுள்ளது. நமக்கு மருத்துவரின் அறிவுரை தேவை எனும் நேரத்தில், அவரை தொடர்பு கொள்வது மிகவும் கடினமான காரியங்களில் ஒன்றாகும். முதலில் அவரிடம் நேர நியமனம் பெற்று, பின் அவரை நேரில் சென்று சந்திக்க வேண்டும். அது சிறிய சந்தேகம் மற்றும் பிரச்சனையாகவே இருந்தாலும், சில நேரத்தில் மட்டுமே மருத்துவர் அவரது தொலைபேசி எண்ணை நோயாளிகளோடு பகிர்ந்து கொள்வார். ஆனால் அனைவரிடமும் அப்படி பகிர மருத்துவரால் இயலாது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நல மருத்துவரிடம் ஒரு அறிவுரை பெற வேண்டும் என்றால் மிகுத்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். உதாரணத்திற்கு குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். தற்போது குழந்தைக்கு காய்ச்சல் வந்துள்ளது. இந்நிலையில் அக்குழந்தையின் பெற்றோர் தங்கள் மருத்துவரின் அறிவுரையை எதிர்பார்த்து தொலைபேசியில் அழைப்பர். ஆனால் அவர் அழைப்பை ஏற்க இயலாத நிலையில் இருக்கலாம்.
இதுபோன்ற தருணங்களில், "அடுடாக்" (AddoDoc) உதவிக்கு வருகின்றது. அது மருத்துவர்களை, பெற்றோருடன், தொலைபேசி மற்றும் குறுந்தகவல்கள் மூலம் கலந்தாலோசிக்க உதவுகின்றனர். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்புடைய ஆவணங்களை, ஒரே இடத்தில் வைக்க இயலும். மேலும் மருத்துவரை எந்நேரத்திலும் அணுக இயலும். தற்போது அடுடாக், ஐம்பதிற்கும் மேற்பட்ட மருத்துவர்களை, 80,000திற்கும் அதிகமான நோயாளிகளோடு இணைகின்றது.
அடுடாக்கை நிறுவியது, சித்தார்த், சத்யதீப்,மற்றும் சௌரப் ஆகியோர். அவர்கள் இதற்கு முன்னர் எம்டாக், ஆரக்கில், மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர்.
அவர்கள் ஒன்றிணைந்து, இந்நிறுவனத்தை உருவாக்கியதற்கு பின்னணியில் சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. சத்யதீப் பெங்களுருவில் தொழில் முனைவு தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்கு செல்கையில் அவரது வண்டிச் சக்கரம் பழுதடைந்துள்ளது. எனவே அவர் அவரது நண்பர் சௌரப்பை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் இருவரும் அந்த நிகழ்சிக்கு சென்றபோது, மேடையில் சித்தார்த் தனது யோசனையை அனைவர் முன்னிலையிலும் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். இவர்களுக்கு அவரது யோசனை மிகவும் பிடித்துப்போனது. எனவே அவரிடம் பேசி, விரைவில் இணைநிறுவனர்களாக தொழில்முனைவில் இணைந்தனர்.
முன்னர், சத்யதீப் மற்றும் சௌரப் ஐஐடியில், இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, "டிராப்பாக்ஸ் ப்ளக்கின்" ஒன்று ஏற்படுத்தி இருந்தனர். அது ஃபோல்டர்களை ஒருகிணைக்கும் வசதி கொண்டது. அதற்கு முன்னர், ஃபோல்டர்களை டிராப்பாக்ஸ் ஃபோல்டருக்கு, மாற்றி விட்டு பின்பே ஒரிங்கிணைக்க இயலும். இந்த சவாலை இவர்கள் உருவாக்கிய ப்ளக்கின் தீர்த்து வைத்தது. எனவே அந்த ப்ளக்கின் மாபெரும் வெற்றி அடைந்து 500,000 முறை தரவிறக்கம் செய்யப்பட்டது. அதன் காரணமாக, தி ஹிந்து, லைப் ஹேக்கர், பிசி வேர்ல்ட், மற்றும் பாஸ்ட் கம்பெனி ஆகியவற்றில் அவர்கள் நேர்காணல் இடம்பெற்றது. அந்நேரத்தில் தான், அவர்களுக்கு தொழில் முனையும் எண்ணம் உருவானது. எனவே, அடுடாக் வாய்ப்பு வந்தபோது உடனடியாக அதில் இணைய தயாராக இருந்தனர்.
அடுடாக்கின் தாக்கம் மருத்துவ துறை மீது எவ்வாறு உள்ளது என சித்தார்த்தா விடம் கேட்டபோது, "இந்தியாவில் வெறும் 80,000 குழந்தைகள் நல மருத்துவர்களே உள்ளனர். இதன் மூலம் அனைவர்க்கும் மருத்துவ உதவிகளை வழங்குவது என்பது இயலாத காரியமாகிறது. இதனால் ஒரு குழந்தையின் வளர்ச்சியை கண்காணிப்பது கடினமாகிறது. இதன் மூலம், குழந்தைகளிடம், தைராய்டு, ஹார்மோன், ஊட்டச்சத்தின்மை ஆகியவை தொடர்பான பிரச்சனைகள் பரவுகின்றன. இந்தியாவில், 5வயதுக்கு கீழ் உள்ள 44 சதவித குழந்தைகள், நிலையான எடையை காட்டிலும் குறைவான எடையோடு உள்ளனர். இவை அனைத்தும், பெற்றோர்களுக்கு, சரியான தகவல்கள் மற்றும் மருத்துவரின் அறிவுரை ஆகியவை சரியான நேரத்தில் கிடைத்தால் சமாளித்து சரி செய்து விட முடியும். அந்த இடைவெளியை அடுடாக் நிவர்த்தி செய்கின்றது".
அடுடாக், ஒரு குழந்தைகள் நல மருத்துவர் மையத்தில் நிறுவபட்டிருப்பதால், அவர்களால் நோயாளிகளின் பிரச்சனைகளை சமாளித்து, அவர்களுக்கு முறையான உதவி அளிக்க இயலுகிறது. மேலும் பெற்றோர் இருவரும் பணியில் இருந்தால், அவர்கள் தொலைபேசி மூலமே, மருத்துவரை கலந்தாலோசிக்க இயலும். இதற்கு அடுடாக் உதவுகின்றது.
மருத்துவர்களுக்கு செல்கின்ற தொலைபேசி அழைப்புகள் அனைத்தும், ஒரே எண்ணில் இருந்து அவர்களுக்கு செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவர்கள் தங்கள் எண்ணை நோயாளிகளிடம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அடுடாக், மருத்துவர்களுக்கு வரும் அற்பமான அழைப்புகளை தடுத்து, அவர்களுக்கு உதவுகின்றது. மேலும், நோயாளிகளும், அவர்களுக்கு தேவையான போது, மருத்துவரின் யோசனைகளை பெற இயலும்.
அடுடாக் முற்றிலும் தொலைபேசியை மையமாக கொண்டது. மேலும் அதை உபயோகிப்போர், மருத்துவமனையில் உள்ள அலுவலக உதவியாளர்கள் அல்லது வரவேற்பாளர் என்பதை மனதில் வைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர், கணிணியில் அனுபவம் இல்லாதவராக இருப்பர். ஆனால் தொலைபேசியில் வாட்ஸ்ஆப் வசதியை பயன்படுத்தி இருப்பர். எனவே, தொலைபேசி வழி தீர்வு என்பது சுலபமான ஒன்றாக அமையும் என்கிறார், சித்தார்த்தா.
தற்போது அடுடாக், பிடபில்யூ ஆக்சிலரேடர் ப்ரோக்ராமின் ஒரு அங்கமாக உள்ளது. தற்போது அடுடாக் 6 பேர் கொண்ட குழுவாக உள்ளது. 3 பேர் டெக் பகுதியில் பணிபுரிய, 3 பேர் பகுதியை பார்த்து வருகின்றனர்.
இறுதியாக, தன்னை போன்ற தொழில் முனைவோருக்கு சித்தார்தாவின் வார்த்தைகள் :
- மிக வலிமையான ஒரு அணியை கட்டமைப்பதில் கவனமாக இருக்கவும். அவர்கள் உங்கள் நோக்கத்தை நம்புபவராக இருத்தல் நலம்.
- முதன் முதலில் உங்களிடம் வரும் வாடிக்கையாளர் உங்கள் உறவு மூலமாகவே வருவர். அவர்கள் வணிகம் மூலமாக வருவதில்லை. அவர்களே உங்கள் பொருளை பற்றிய நற்செய்தியாளராக இருப்பர்.
- இணையதள முகவரி: AddoDoc