இதுக்கு ஒரு முடிவே இல்லையா? மீண்டும் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Byju's
எஜுடெக் நிறுவனமான பைஜூஸ் விரைவில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஜுடெக் நிறுவனமான பைஜூஸ் விரைவில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா லாக்டவுன் காலத்தில் கொடிக்கட்டி பறந்த ஆன்லைன் எஜுடெக் நிறுவனமான பைஜூஸ் கடந்த ஆண்டு முதலே கடும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் செலவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் 2,500 பேரை பணிநீக்கம் செய்தது. அதன் தொடர்ச்சியாக பொறியியல், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் தளவாடக் குழுவின் ஊழியர்கள் பணி நீக்கம் செய்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வரும் பைஜூஸ், தற்போது 1000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. இந்தமுறை பைஜூஸ் தனது விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது.
வருமானம் குறைந்ததோடு, பைஜூஸ் நிறுவனம் கடும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதும் பணி நீக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் பைஜூஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய 1.2 பில்லியன் டாலர் கடனுக்கான காலாண்டு வட்டியை செலுத்த தவறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2021ம் ஆண்டு திரட்டிய $1.2 பில்லியன் டேர்ம் லோனில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதற்கு புதிய நிதி உதவும் எனக்கூறப்பட்டது. மேலும், கடன் நிதி மேலாண்மையை சமாளிப்பதற்காக வட்டி விகிதத்தை உயர்த்திக்கொள்ளவும் பைஜூஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.