'நான் இறந்தால் ட்விட்டரை நீங்கள் எடுத்துக்கலாம்’ - பிரபல யூடியூபருக்கு எலான் மஸ்க் கொடுத்த பதில்!
எலான் மஸ்க் மர்மமான முறையில் இறந்தால் டுவிட்டருக்கு எனக்கு கிடைக்குமா என்ற பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் கேள்விக்கு., மஸ்க் சரி என பதிலளித்துள்ளார்.
சமீப காலமாக தொடர்ந்து தலைப்புச் செய்தியாக வலம் வருபவர் எலான் மஸ்க். அதன்படி, தற்போது மஸ்க் பதிவிட்ட சமீபத்திய ட்வீட் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எலான் மஸ்க்,
"நான் மர்மமான சூழ்நிலையில் இறந்தால், உங்களை தெரிந்து வைத்ததில் மகிழ்ச்சி..." என ட்வீட் செய்துள்ளார் மஸ்க். இந்த ட்வீட்டுக்கு பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதன்படி, பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்,
“அப்படி இறந்தால் ட்விட்டரை நான் வைத்துக் கொள்ளலாமா? என ட்வீட்டின் மூலம் கேள்வி எழுப்பினார். அதற்கு மஸ்க், "ஓகே" என பதில் செய்திருக்கிறார். இதையடுத்து, மிஸ்டர் பீஸ்ட், ’நகைச்சுவையெல்லாம் இருக்கட்டும், பாதுகாப்பாக இருங்கள்’ என மஸ்க்கிற்கு பதிலளித்திருக்கிறார்.
மஸ்க் திடீரென ஏன் இப்படி ட்வீட் செய்தார் என்ற குழப்பம் வரலாம், இதற்குக் காரணம் ரஷ்யா தரப்பில் இருந்து வரும் மிரட்டல் தான். ரஷ்யா மாதக் கணக்கில் உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. கடுமையான பாதிப்புக்குள்ளான உக்ரைனுக்கு மஸ்க் தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் பிராட்பேண்ட் சேவையை வழங்கத் தொடங்கினார். இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
தொடர்ந்து மஸ்க் ஒரு புகைப்படத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை பகிர்ந்தார், அந்த புகைப்படம் ரஷ்ய முன்னாள் பிரதமர் டிமிடரி ரோகோசின் தனக்கு அனுப்பியதாக குறிப்பிட்டார். அதில்,
மஸ்க் மீது ஆயுதம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மர்மமான முறையில் இறப்பீர்கள் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்துதான், மஸ்க், தான் இறக்க வாய்ப்புள்ளதாக ட்வீட் செய்திருக்கிறார்.
மஸ்க்-ன் இந்த ட்வீட்டுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மஸ்க் தாயார் மே மஸ்க், இரண்டு கோவமான இமோஜிகள் உடன், ‘இது விளையாட்டல்ல...’ என ட்வீட் செய்திருக்கிறார். தொடர்ந்து மஸ்க் குடித்துவிட்டு பேசுகிறார் என சிலரும், மஸ்க்கிற்கு உண்மையாக அச்சுறுத்தல் இருக்கிறது என சிலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மிஸ்டர் பீஸ்ட் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருபவர் ஜிம்மி டொனால்ட்சன், இவர் பல்வேறு நூதனமான ஸ்டண்ட்களை செய்து பிரபலமடைந்தவர். இவரது சேனலுக்கு சுமார் 10 கோடி வரை பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ்டர் பீஸ்ட் கேள்விக்கு மஸ்க் சொன்ன ஓகே என்ற ஒரு வார்த்தை பலராலும் லைக் செய்யப்பட்டு வருகிறது.