இந்தியாவைச் சேர்ந்த நீண்ட கால ட்விட்டர் நண்பரை சந்தித்த எலான் மஸ்க்!
டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சாஃப்ட்வேர் டெவலப்பவரை நேரில் சந்தித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சாஃப்ட்வேர் டெவலப்பவரை நேரில் சந்தித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
உலகிலேயே நம்பர் ஒன் பணக்காரராக வலம் வரும் எலான் மஸ்க், சோசியல் மீடியா பிரபலமாகவும் வலம் வருகிறார். குறிப்பாக ட்விட்டர் மூலம் உலகம் முழுவது மில்லியன் கணக்கான மக்களுக்கு அறிமுகமான எலான் மஸ்க், அந்த நிறுவனத்தையே வாங்க முயற்சித்து மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொண்டுள்ளார்.
அமெரிக்க நீதிமன்றத்தில் டிவிட்டர் தொடுத்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலைக்கு மேல் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், கூலாக எலான் மஸ்க் செய்துள்ள காரியம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்திய நண்பரைச் சந்தித்த எலான் மஸ்க்:
எலான் மஸ்க் தனது தீவிர ரசிகரும், நீண்ட கால டிவிட்டர் நண்பருமான புனேவைச் சேர்ந்த 23 வயது இளைஞரான பிரனய் பத்தோல் என்பவரை நேரில் சந்தித்துள்ளார்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் டெவலப்பர் பிரனய் பத்தோலை, சமீபத்தில் டெக்சாஸில் உள்ள ஜிகாஃபாக்டரியில் எலான் மஸ்க் சந்தித்துள்ளார்.
அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாத்தோல் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் எலான் மஸ்க் மிகவும் தன்னடக்கத்துடன் நடத்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். கோடீஸ்வர தொழிலதிபரான எலான் மஸ்க் உடனான சந்திப்பு குறித்து பாத்தோல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“கிகாஃபாக்டரி டெக்சாஸில் எலான் மஸ்க்கை சந்தித்தது மிகவும் சிறப்பாக இருந்தது. இப்படிப்பட்ட அடக்கமான மற்றும் தன்னை மிகையாக எண்ணாத ஒரு நபரை பார்த்ததில்லை. இதனால் தான் எலான் மஸ்க் லட்சக்கணக்கான மக்களுக்கு முன்னோடியாக இருக்கிறார்,” என பதிவிட்டுள்ளார்.
இந்தியருடன் நட்பு மலர்ந்தது எப்படி?
பிரனய் பத்தோல் டிவிட்டரில் மிகவும் பிரபலமான நபர், இவர் ட்விட்டர் அக்கவுண்ட்டை சுமார் 1,80,000 பேர் பின்பற்றுகின்றனர். 2018ல் டெஸ்லா ஆட்டோமேட்டிங் windscreen wipers குறித்துப் போட்ட ஒரு டிவீட்டுக்கு சற்றும் எதிர்பார்க்காத வகையில் எலான் மஸ்க் ரிப்ளே செய்தார். அதன் மூலம் 2018ம் ஆண்டு முதல் இருவரும் நண்பர்களாக நீடித்து வருவதோடு, அவ்வப்போது ட்விட்டர் வாயிலாக உரையாடி வருகின்றனர். இப்படித்தான் 23 வயதான பிரனய் பத்தோலுக்கும், 51 வயதான எலான் மஸ்கிற்கும் இடையே நட்பு மலர்ந்துள்ளது.
தகவல் உதவி - லைவ் மின்ட் | தமிழில் - கனிமொழி