'உலகப் பட்டினியை எங்கள் சொத்து தீர்க்கும் என ஐநா நிரூபித்தால் டெஸ்லா பங்குகளை விற்பேன்' - எலன் மஸ்க்
உலகப் பசியை 6 பில்லியன் டாலர் கேட்ட ஐநா!
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) இயக்குநர் டேவிட் பீஸ்லி சமீபத்தில் ஒரு நேர்காணலில், உலகப் பணக்காரர் எலான் மஸ்க்கின் 2 சதவீத செல்வம் உலகப் பசிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று பேசினார். இவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
இதை கவனித்த எலான் மஸ்க்,
“உலகப் பசியை 6 பில்லியன் டாலர் எவ்வாறு சரியாகத் தீர்க்கும் என்பதை WFP விவரித்தால், எனது டெஸ்லா பங்குகளை இப்போதே விற்பேன்..." என்று ட்வீட் செய்தார்.
என்ன நடந்தது?
'கனெக்ட் தி வேர்ல்ட்' என்ற பெயரில் CNN தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சியின் நேர்காணனில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) இயக்குநர் டேவிட் பீஸ்லி,
“டெஸ்லா நிறுவனர் மஸ்க் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உட்பட உலகின் கோடீஸ்வரர்கள் அவர்களின் நிகர மதிப்பின் ஒரு பகுதியை, அதாவது சுமார் $6 பில்லியன் பயன்படுத்தி 42 மில்லியன் மக்களுக்கு உதவ முன் வரவேண்டும். நாம் அவர்களை அடையவில்லை என்றால் உண்மையில் அவர்கள் இறந்துவிடுவார்கள்," என்று பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தான் எலான் மஸ்க்,
“உலகப் பசியை 6 பில்லியன் டாலர் எவ்வாறு சரியாகத் தீர்க்கும் என்பதை WFP விவரித்தால், எனது டெஸ்லா பங்குகளை இப்போதே விற்பேன்..." என்று ட்வீட் செய்தார்.
மஸ்க்கின் கேலிக்கு பதிலளித்த டேவிட் பீஸ்லி,
“$6 பில்லியன் உலகப் பட்டினியை தீர்த்துவிடசது, ஆனால் பட்டினி நெருக்கடியின் போது ஒரு நன்கொடை அளித்தால் உலகில் 42 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்படும். யாரும் பணம் சம்பாதிப்பதை நான் எதிர்க்கவில்லை, ஆனால், இன்று உலகில் 400 டிரில்லியன் டாலர் சொத்து இருக்கும்போது மக்கள் பசியால் இறப்பதைதான் நான் எதிர்க்கிறேன்,” என்றார்.
”நீங்கள் குறிப்பிடும் 8.4 பில்லியன் டாலர், 2020 ஆம் ஆண்டில் 115 மில்லியன் மக்களுக்கான உணவு உதவியை உள்ளடக்கியது. ஆனால் இப்போது எங்களுக்கு 6 பில்லியன் டாலருக்கும் மேல் தேவை," என்றார்.
முன்னதாக, எலான் மஸ்க் தனது டுவீட்டில்,
“இது ஓப்பன் சோர்ஸ் கணக்கியலாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை பொதுமக்கள் துல்லியமாகப் பார்ப்பார்கள்," என்றார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த பீஸ்லி,
“உங்கள் குழு மறுபரிசீலனை செய்து எங்களுடன் இணைந்து பணியாற்றலாம், இது போன்றவற்றை முழுமையாக நம்பலா,ம்" என்றார்.