‘புதின் தான் என்னைவிட அதிக பணக்காரர்’ - ரஷ்ய அதிபரை மீண்டும் வம்பிழுத்த எலான் மாஸ்க்!
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்தே எலான் மஸ்க், அந்நாட்டின் அதிபர் விளாடிமீர் புதினை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் ரஷ்ய அதிபரின் சொத்து மதிப்பு குறித்து எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்தே எலான் மஸ்க், அந்நாட்டின் அதிபர் விளாடிமீர் புதினை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், ரஷ்ய அதிபரின் சொத்து மதிப்பு குறித்து எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க் உலகின் நெம்பர் ஒன் கோடீஸ்வரராக உள்ளார். சமீபத்தில் வெளியான உலகப் பணக்காரர்கள் சொத்து மதிப்பு பற்றிய கணிப்பின் படி, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 205 பில்லியன் டாலர் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சொத்து மதிப்பு குறித்து உலகின் நெம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் எழுப்பியுள்ள சந்தேகம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்சைடர் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆக்சன் ஸ்பிரிங்கர் நிறுவனத்தின் சிஇஓவிற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் எலான் மஸ்கிடம் "சுமார் 260 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகிலேயே முதல் பணக்காரராக இருப்பதை எப்படி உணருகிறீர்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு,
‘புதின் என்னை விட பணக்காரராக இருப்பார் என நான் நினைக்கிறேன்,’ என்று எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சொத்து மதிப்பு எப்போதுமே மிகப்பெரிய மர்மமாக இருந்து வருகிறது. கருங்கடல் பகுதியில் 1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமைந்துள்ள அரண்மனை மற்றும் 4 மில்லியன் டாலர் மொனாக்கோ அபார்ட்மெண்ட் ஆகியவற்றுடன் புடினுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.
2017 ஆம் ஆண்டில் நிதியாளர் பில் பிரவுடரின், ரஷ்ய அதிபர் புதின் 200 பில்லியன் டாலர் அளவு சொத்துக்களை பதுக்கிவைத்திருப்பதாக சாட்சியம் வழங்கியது உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில், எலான் மஸ்கின் இந்த கருந்து புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து எலான் மஸ்க், புதின் உடன் நேரடி மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
உக்ரைனுக்கு ஸ்டார் லிங்க் சாட்டிலைட் மூலமாக இணைய சேவை வழங்கி வருவது, புதினை நேருக்கு நேர் சண்டைக்கு அழைத்தது என அவ்வப்போது எலான் மஸ்க் ரஷ்ய அதிபர் குறித்து பதிவிடும் கருத்துக்கள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
ஷாங்காய் நிறுவனத்தில் உற்பத்தியை நிறுத்தும் டெஸ்லா:
உலகம் முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மீண்டும் சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. எனவே அங்கு மீண்டும் முழு ஊரடங்கு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஷாங்காய் நகரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள தொழிற்சாலையில் 4 நாட்களுக்கு டெஸ்லா தனது உற்பத்தியை நிறுத்த முடிவெடுத்துள்ளது.
ஷாங்காய் தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தும் டெஸ்லா ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான கோவிட் விதிகளை நகரம் அறிவித்த பிறகு டெஸ்லா நான்கு நாட்களுக்கு ஷாங்காய் காரணியை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடலோர சீன நகரம் இந்த வாரம் மக்கள் தொகையை சோதிக்க இரண்டு கட்ட பணிநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்:
டெஸ்லா நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது பணியாளர்களை வரவழைத்து குளோஸ் லூப் முறையில் வேலையை தொடங்கவிருந்த நிலையில், இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. எனவே, உற்பத்தியை நிறுத்திவிட்டு, தொழிற்சாலையை மூட டெஸ்லா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
எரிபொருள் திறன் தரத்தை பூர்த்தி செய்யாத வாகனங்களை உற்பத்தி செய்யும் வாகன உற்பத்தியாளர்களுக்கான அபராதத்தை அமெரிக்க அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. 2019 மற்றும் அதற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் இந்த அபராத முறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தியாளர்களை நாட்டின் எரிபொருளை தரமாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தும் வகையில் வாகனங்களை வடிவமைக்க ஊக்குவிக்கும் விதமாக இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் - தருதர் மல்ஹோத்ரா | தமிழில் - கனிமொழி