'பணத்திற்கு எந்த பவரும் இல்லை’ - உலகப் பணக்காரர் எலான் மஸ்க் சொல்வதை கேளுங்க...
பணத்திற்கு எந்த ஆற்றலும் இல்லை என உலகின் செல்வந்தர் எலான் மஸ்க் சொல்லும் வீடியோ இணையத்தில் வைரவலாக கவனத்தை ஈர்த்திருக்கிறது.
’பணத்திற்கு எந்த சக்தியும் இல்லை...’ என உலகின் செல்வந்தர் எலான் மஸ்க் சொல்லும் பழைய வீடியோ இணையத்தில் வைரவலாக கவனத்தை ஈர்த்திருக்கிறது.
டெஸ்லா நிறுவனரும் உலகில் செல்வந்தருமான எலான் மஸ்க் அண்மையில், டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சிக்காகவும், பின் அதிலிருந்து பின் வாங்கியதற்காகவும் பரபரப்பாக பேசப்பட்டார். ஸ்பேம் கணக்குகள் தொடர்பான முழு விவரங்களை அளிக்கவில்லை எனக்கூறி அவர் 44 பில்லியன் டாலர் டிவிட்டர் ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்டார்.
இந்நிலையில், எலான் மஸ்கின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது. ஏப்ரல் மாதம் அளிக்கப்பட்ட பழைய பேட்டி ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், எலான் மஸ்க், பணத்திற்கு எந்த சக்தியும் இல்லை எனக்கூறியிருக்கிறார்.
பணத்திற்கு உள்ளார்ந்து எந்த சக்தியும் இல்லை, பொருட்கள் மற்றும் சேவைகள் வாயிலாகவே அதற்கு ஆற்றல் வருகிறது என மஸ்க் கூறியுள்ளார்.
”மக்கள் சில நேரங்களில் குழப்பம் அடைந்து பணம் தான் பொருளாதாரம் என நினைக்கின்றனர். பணம் என்பது சேவை, பொருட்கள் பரிவர்த்தனைக்கான தரவுப்பட்டியல் மட்டுமே. பணத்திற்கு உண்மையில் எந்தவித சக்தியும் இல்லை. சேவைகள் மற்றும் பொருட்கள் தான் உண்மையான பொருளாதாரம்,” என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இது தொடர்பான விவாதமும் சூடு பிடித்திருக்கிறது. பலரும் மஸ்க் சொல்வதற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், ஒரு சிலர் எதிர்கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ தொடர்பான விவாதத்தில், எலான் மஸ்க் ஆம் என கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் தனது பழைய கருத்தை ஆமோதித்துள்ளார்.