ஜெப் பெசோஸையும் முந்தி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!

By YS TEAM TAMIL|9th Jan 2021
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடம்!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ்-ஐ முந்தி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார் டெஸ்லா மற்றும் SpaceX நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சியால் ஜெப் பெஸோஸ் அக்டோபர் 2017 முதல் இதுவரை உலகப்பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். ஆனால் சமீபகாலமாக டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் அதிக அளவில் விற்பனையானது.


இதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டன. இதன்காரணமாக தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். உலகின் 500 செல்வந்தர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ள ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நியூயார்க் மணிநேரப்படி காலை 10:15 மணிக்கு எலான் மஸ்கின் நிகர மதிப்பு 188.5 பில்லியன் டாலராக இருந்தது. இது ஜெப் பெசோஸை விட 1.5 பில்லியன் டாலர் அதிகம். டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் விலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிவேக வளர்ச்சியில் உள்ளது.

கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட டெஸ்லா, கடந்த ஆண்டு மட்டும் பங்குகள் 743% உயர்ந்தது.


தங்களது போட்டியாளர்களான டொயோட்டா, ஜெனரல் மோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களைவிடக் குறைவான வாகனங்களைத் தயாரித்தாலும், உலகின் மதிப்புமிக்க கார் நிறுவனமாக டெஸ்லா இருக்கிறது. இதன் சந்தை மதிப்பு இப்போது 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.


பல ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்துவந்த டெஸ்லா நிறுவனம், கடந்த ஐந்து காலாண்டுகளாக தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்று லாபத்தை ஈட்டி வருகிறது.


கொரோனா பெருந்தொற்று காலத்திலும், டெஸ்லாவின் கார் விற்பனை அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ்தான் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2017ஆம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்தார். அமேசான் நிறுவனர் ஜெஃப் அவரை அவ்வாண்டு பின்னுக்கு தள்ளினார். இப்போது அவரை பின்னுக்கு தள்ளி மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.


இதற்கிடையே, கடந்த ஆண்டு உலகின் 500 பணக்காரர்களின் மொத்த நிகர சொத்து மதிப்பு 1.8 டிரில்லியன் டாலராக இருந்தது. இதில் ஐந்து தனிநபர்களின் நிகர சொத்து மதிப்பு மட்டும் 100 பில்லியன் டாலர். அதேபோல் 20 பேர் குறைந்தபட்சம் 50 பில்லியன் டாலர் மதிப்புடையவர்கள் என்கிறது ஒரு தரவு.


தொகுப்பு: மலையரசு