இஞ்சினியர் வேலையைவிட்டு கழிவுப் பூக்களில் இருந்து ஊதுவத்தி தயாரிக்கும் இளைஞர்!
பி.டெக் பட்டதாரியான ரோஹித் பிரதாப், கங்கை ஆற்றில் மிதக்கும் காய்ந்து போன பூக்களிலிருந்து ஊதுவத்திக் குச்சிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
ரோஹித் பிரதாப், எலக்ட்ரானிக்ஸ் துறையில் பி.டெக் படித்தார். ஒரு நிறுவனத்தில் வழங்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டு சேவையை நிராகரித்து விட்டு, கங்கை ஆற்றில் மிதக்கும் காய்ந்து போன பூக்களிலிருந்து தூபக் குச்சிகளை தயாரிக்க ஒரு தொழிற்சாலையை நடத்தி வருகிறார். அவர் இப்போது மலை யாத்திரை நகரமான ரிஷிகேஷை (உத்தரகண்ட்) தனது ஆரம்ப வேலைத் துறையாக மாற்றியுள்ளார்.
மாநிலத்தின் சார்தாம் வழித்தடங்களால் இணைக்கப்பட்ட அனைத்து புனித யாத்திரைத் தளங்களுக்கும் தனது பணிகளை விரிவுபடுத்த அவர் விரும்புகிறார். பல பெண்கள் அகர்பத்தி தொழிலில் வேலை செய்கிறார்கள். புனித யாத்திரை நகரத்தின் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க இந்த வேலை உதவுகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். ரிஷிகேஷ் மாநகராட்சியும் அவரது பணிக்கு உதவுகிறது.
ரோஹித் பிரதாப் சிறுவயது முதலே ரிஷிகேஷுக்கு வருகை தருபவர். ஒரு நாள் திரிவேணி காட்டில் கங்கையில் காய்ந்த, பயன்படுத்தப்பட்ட வழிபாட்டு பூக்கள் பெருமளவில் வீசப்படுவதைக் கண்டபோது, அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் எண்ணம் அவரது மனதில் தோன்றியது.
அந்த நேரத்தில் அவர் ஒரு பெரிய நிறுவனத்தில் சிறந்த பொறுப்பில் இருந்தார். அவர் பல நிறுவனங்களிடமிருந்தும் ஒரு பெரிய பொறுப்புள்ள வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் வந்தார், ஆனால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சொந்த காலில் நிற்க அவர் தீர்மானித்தார். முதலாவதாக, பூக்களிலிருந்து தூபக் குச்சிகளை தயாரிப்பதில் பயிற்சி பெற்றார்.
உள்கட்டமைப்புக்காக பட்ஜெட் செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு 2019 ஏப்ரலில், ரிஷிகேஷின் கங்கா நகரில் சுமார் மூன்று லட்சம் செலவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். 'ஒடினி தயாரிப்புகள் தனியார் லிமிடெட்' என்ற மணம் கொண்ட ஊதுவத்திக் குச்சிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கினார்.
ரிஷிகேஷ் முனிசிபல் கார்ப்பரேஷன் நகரின் பழமையான பூக்களை சேகரிக்க அவர்களுக்கு ஒரு வாகனத்தை வழங்கியது. புனித யாத்திரை நகரத்தில் ஒரு டஜன் கோயில்களில் இருந்து தினமும் காய்ந்த பூக்கள் சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்த பின்னர் ஊதுவத்திக் குச்சிகளை உற்பத்தி செய்கின்றனர்.
"ரிஷிகேஷ் கோவில்களில் தினசரி யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் வழங்கும் ஏராளமான பூக்கள் திறந்த வெளியில் வீசப்பட்டன அல்லது கங்கையில் மிதந்தன", என்று ரோஹித் பிரதாப் கூறுகிறார்.
தீர்த்த நகரத்தில் அசுத்தத்துடன் கங்கையில் மாசு அதிகரித்து வந்தது. அவரது இந்த செயலால் இப்போது மாசு மெதுவாக கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு டஜன் கோயில்களைத் தவிர, புனித யாத்திரை நகரத்தின் அனைத்து பூக்கடைகளில் இருந்தும் சுமார் இருநூறு கிலோ பூக்கள் தினமும் தொழிற்சாலையின் மூலப்பொருளாக வைக்கப்படுகின்றன.
பெண் ஊழியர்கள் அவற்றில் பயனுள்ள பூக்களை நெருக்கமாக ஒழுங்கமைக்கிறார்கள்.
அவற்றைக் கழுவி உலர்த்திய பின், அவற்றின் பொடியை ஒரு இயந்திரத்தால் அரைத்து வாசனை திரவியம் தயாரிக்கப்படுகிறது.
அதன்பிறகு, அவர்களின் தயாரிப்பு 'நாப் அகர்பத்தி' மற்றும் 'நாப் தூப்' ஆகியவை வழிபாட்டுத் தலங்களிலும், புனித யாத்திரை நகரத்தில் உள்ள கடைகள், குடியிருப்பு வளாகங்களிலும் விற்கப்படுகின்றன. மீதமுள்ள பூக்களின் கழிவுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
வெர்மி உரம் கரிம வேளாண்மைப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. இவரது தொழிற்சாலையில் தற்போது நான்கு பெண்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் நிரந்தரமாக பணியாற்றுகின்றனர். மேலும், ஹரித்வார், கோட்வார், நைனிடால், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கும் தனது வேலையை அதே வழியில் விரிவுபடுத்த விரும்புகிறார் இந்த இளம் சமூக நல செயலாளர்.
தமிழில்: ஹர்ஷினி