Enlighten Capital என மறுபெயரிடப்பட்டு 100 கோடி ரூபாய் மைக்ரோ விசி நிதியை திரட்டியது Enlighten Angel Fund!
இந்தியாவின் ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யும் பிரிவில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான என்லைட்டன் ஏஞ்சல் பண்ட், மாற்று முதலீடு நிதியாக (AIF ) செயல்படத் தேவையான ’செபி’யின் அனுமதியை பெற்றுள்ளது.
இந்தியாவின் ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்'களில் முதலீடு செய்யும் பிரிவில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான 'என்லைட்டன் ஏஞ்சல் பண்ட்' (Enlighten Angel fund), மாற்று முதலீடு நிதியாக (AIF) செயல்படத் தேவையான ’செபி’யின் அனுமதியை பெற்றுள்ளது.
மேலும், தனது நிதிக்காக, லிமிடெட் பார்ட்னர்களிடம் இருந்து ரூ.100 கோடி முதலீட்டிற்கான உறுதியையும் நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. முழுவீச்சிலான மைகோ விசி நிதி என்பதை உணர்த்தும் வகையில், 'என்லைட்டன் கேபிட்டல்' என பெயர் மாற்றம் செய்து கொண்டிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்லைட்டன் கேபிட்டல் தனது 100 கோடி கிரீன்ஷூ வாய்ப்புக்கான நிதி திரட்டலையும் துவக்கியுள்ளது. இந்தியாவின் வளரும் தொழில்முனைவோரை ஆதரிக்க இது மேலும் உதவும்.
நாட்டின் நீடித்த வளர்ச்சி மற்றும் புதுமையாக்க கொள்கைக்கு ஏற்ப மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வளரும் நுட்பங்களில் முதலீடு செய்வதில் இந்த நிதி கவனம் செலுத்தும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், என்லைட்டன் ஏஞ்சல் ஃபண்ட், 10க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்'களில் வெற்றிகரமான முதலீட்டை சாத்தியமாக்கி, வளரும் நிறுவனங்களை கண்டறியும் திறன் கொண்டதாக அறியப்படுகிறது.
தற்போதைய மாற்றத்திற்கு பின், என்லைட்டன் கேபிட்டல் தொழில்முனைவோருக்கான நிறுவன ஆதரவு அளிப்பதன் மூலம் மேலும் முக்கிய பங்காற்ற உள்ளது.
கெளசிக் சேகர் மற்றும் அரவிந்த சுப்பிரமணியம் ஆகிய பார்ட்னர்களால் வழிநடத்தப்படும் இந்நிறுவனம், கவுதம் சேகர், சினேஹாலி மனிசிங் காம்கர், ரோகித் மோகன் ஆகிய பார்ட்னர்களையும் கொண்டுள்ளது. தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட கவுசிக் சேகர், பின்னர் ஆலோசனை மற்றும் நிதி பக்கம் வந்தார். கோவையைச் சேர்ந்த தொழில்முனைவோரான அரவிந்த் சுப்பிரமணியம் பின்னர் விசி துறைக்கு வந்தார்.
இதற்கு முன், தமிழ்நாட்டின் ஸ்டார்ட் அப் ஊக்க அமைப்பான ஸ்டார்ட் அப் டிஎன் திட்டத்தில் இருந்தவர், என்லைட்டன் நிதியை விசி நிதியாக மாற்றும் செயல்பாட்டை வேகமாக்க கவுசிக்குடன் நிறுவனத்தில் இணைந்தார்.
"இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஸ்டார்ட் அப்'களின் ஆற்றல் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். என்லைட்டன் கேபிட்டல் மூலம், ஸ்டார்ட் அப் சூழலில் நல்லவிதமாக தாக்கம் செலுத்த உள்ளோம்," என கவுசிக் சேகர் கூறியுள்ளார்.
வளரும் நுட்பங்கள், ஸ்மார்ட் நுட்பங்கள், போக்குவரத்து மற்றும் நிதி நுட்பம் ஆகிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வளரும் துறைகளில் கவனம் செலுத்துவோம், என அரவிந்த் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan