Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை தேடி விண்ணப்பிக்க ManyJobs செயலி அறிமுகம்!

இந்தியாவின் மிகப்பெரிய திருமண பொருத்த சேவையான Matrimony.com, தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகளை கண்டறிந்து விண்ணப்பிக்க, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் ManyJobs என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை தேடி விண்ணப்பிக்க ManyJobs செயலி அறிமுகம்!

Saturday November 23, 2024 , 1 min Read

இந்தியாவின் மிகப்பெரிய திருமண பொருத்த சேவையான 'மேட்ரிமனி' (Matrimony.com) தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு வழிகாட்டும் 'மெனிஜாப்ஸ்' (ManyJobs) என்ற புதிய செயலியை துவக்கியுள்ளது.

மேட்ரிமனி நிறுவன சி.இ.ஓ முருகவேல் ஜானகிராமன் முன்னிலையில் மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இந்த செயலியை அறிமுகம் செய்தார்.

job
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளையும் நன்கறிந்தவர்கள் என்பதால், மெனிஜாப்ஸ் செயலியை இரு மொழிகளிலும் உருவாக்கியதற்காக பாராட்டுகிறேன். தமிழ்நாடு இந்தியாவின் அறிவு மற்றும் திறன் தலைநகராக விளங்கும் நிலையில் மற்றும் அனைவருக்கும் வேலை எனும் கொள்கை கொண்டுள்ள நிலையில், மாநில வேலைவாய்ப்புக்கு இந்த செயலி உதவும், என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

பெண்கள் வேலைவாய்ப்பிலும் தமிழகம் முன்னிலை வகிக்கும் நிலையில், மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்பு நாடுபவர்களுக்கு இந்த ஆப் ஏற்ற மேடையாக இருக்கும், என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு சந்தைக்கான செயலியை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறோம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப் இயங்கும்,” என்று மேட்ரிமனி.காம் சி.இ.ஓ முருகவேல் ஜானகிராமன் தெரிவித்தார்.

விற்பனை, வாடிக்கையாளர் சேவை, உற்பத்தி, விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகளில் துவக்க நிலை மற்றும் முன்னிலை வேலைவாய்ப்புகளை பட்டியலிட பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆறு மாத காலத்தில் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புத்தேடலில் இந்த செயலி உதவ திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Many Jobs செயலியின் முக்கிய அம்சங்கள்:

  • பயனாளிகள் தங்கள் நகரம் சார்ந்த வேலைகளை முன்னுரிமை அடிப்படையில் தேடலாம்.
  • வேலைவாய்ப்புகள் அவற்றின் உண்மை தன்மைக்காக பரிசோதிக்கப்பட்டவை என்பதால், தவறாக வழிகாட்டும் வேலைவாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன.
  • வேலைவாய்ப்பு தேடுபவர்கள் மனிதவள மேலாளரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
  • ஆங்கிலம் மற்றும் தமிழில் தகவல்களை அணுகலாம்.

செயலியை தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.manyjobs


Edited by Induja Raghunathan