Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

கருவுற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தயாரிப்புகள் வழங்கும் தளம் தொடங்கிய தாய்மார்கள்!

வைஷ்ணவி, டி எஸ் விஸ்வநாதன், அபர்னா வாசுதேவன் ஆகியோர் இணைந்து மகப்பேறு காலத்தில் இருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான தரமான, பாதுகாப்பான தயாரிப்புகளைக் கண்டறிய உதவும் சந்தைப்பகுதியாக The Nestery என்கிற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கருவுற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தயாரிப்புகள் வழங்கும் தளம் தொடங்கிய தாய்மார்கள்!

Saturday January 15, 2022 , 3 min Read

2015-ம் ஆண்டு வைஷ்ணவிக்குக் குழந்தை பிறந்தது. வழக்கமாகவே புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பல சந்தேகங்களும் தயக்கமும் இருப்பதுண்டு. வைஷ்ணவிக்கு இணையம் மூலம் பரிச்சயமில்லாத பலர் உதவியுள்ளார்கள்.

”பலருடன் பேசினேன். இது நான் மட்டுமே பயணிக்கும் பயணம் அல்ல என்பது புரிந்தது. குறிப்பாக குழந்தை வளர்ப்பு பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். துணி டயாப்பர், புதிய தயாரிப்புகள், பிராண்டுகள் என பலவற்றிற்கு அறிமுகமானேன்,” என்று வைஷ்ணவி நினைவுகூர்ந்தார்.

குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான தயாரிப்புகள் பிரிவில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்திருப்பதை அவர் கவனித்துள்ளார்.

1

அபர்ணா வாசுதேவன் மற்றும் வைஷ்ணவி ஆர்

“குழந்தைகளுக்கான பராமரிப்புப் பொருட்கள், பொம்மைகள் போன்ற பிரிவில் பல நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. சூப்பர்பாட்டம்ஸ் அதன் முதல் தயாரிப்பை சந்தையில் அறிமுகப்படுத்தியதை கவனித்தேன். அதேபோல் Mamaearth ஒரே நாளில் பிரபலமடைந்ததையும் நான் கவனிக்கத் தவறவில்லை,” என்கிறார்.

இதுபோன்ற சந்தை நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வந்த வைஷ்ணவி மகப்பேறு காலத்தில் இருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான தரமான, பாதுகாப்பான தயாரிப்புகளைக் கண்டறிய உதவும் சந்தைப்பகுதியாக The Nestery என்கிற தளத்தை அறிமுகப்படுத்தினார்.

இது வைஷ்ணவியின் முதல் தொழில் முயற்சி. இருப்பினும் நுகர்வோரின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொண்டார். சிறப்பாகக் குழுவைக் கட்டமைத்தார்.

வாடிக்கையாளர் மற்றும் சந்தை ஆய்வு

வைஷ்ணவி தனது வேலையை விட்டு விலகி நம்பிக்கையுடன் The Nestery தொடங்க இரண்டாண்டுகள் எடுத்துக்கொண்டார்.

”தொழில் யோசனை தோன்றியதில் இருந்து சந்தையில் அறிமுகப்படுத்தியது வரையிலான காலகட்டத்தை வாடிக்கையாளர் மற்றும் சந்தை ஆய்விற்குப் பயன்படுத்தினேன்,” என்கிறார் வைஷ்ணவி.

இந்த சமயத்தில் அதிகளவிலான பெற்றோர்களிடம் கலந்து பேசியுள்ளார். குழந்தைகளுக்கான புத்தகங்களை கிலோகணக்கில் மொத்தமாக இறக்குமதி செய்தார். இவற்றை சில்லறை அளவில் விற்பனை செய்தார்.

“குழந்தைகளுக்கானப் புத்தகங்களை, குறிப்பாக புனைவுகளைத் தேர்வு செய்தேன். இதற்குக் காரணம் கிடைப்பதற்கு அரிதான புத்தகங்களையே பெற்றோர் விரும்புகின்றனர் என்பதைத் தெரிந்துகொண்டேன். பெற்றோர்கள் என்ன வாங்க விரும்புகிறார்கள் என்பதையும் எது கிடைப்பதில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிந்ததால் இது சாத்தியமானது,” என்கிறார்.

ஆய்வுகளுக்கும் புரிதல்களுக்கும் செயல்வடிவம் கொடுக்கும் சமயம் வந்தது. 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 பிராண்டுகளுடனும் 25 தயாரிப்புகளுடனும் The Nestery தொடங்கினார்.

2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வைஷ்ணவி தனித்துவமான தளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

தொகுப்பு: தனித்துவமான தேர்வுகளுடன் கட்டுப்படுத்தப்பட்ட, பாதுகாப்பான, தரமான சந்தைப்பகுதியாக இருக்கவேண்டும் என்று விரும்பினர்.

கேட்டலாகிங் டூல்: பெற்றோர்களின் பார்வையில் ஒரு தயாரிப்பு ஏன், எங்கு, எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை உற்றுநோக்கும் வகையில் கேட்டலாகிங் டூல் அமைக்கவேண்டும் என்று விரும்பினார்.

சமூக பரிந்துரைகள்: செல்வாக்குள்ளவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஒன்றிணைந்து மினி ஸ்டோர்கள் உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிடையில் DTC பிராண்டுகளின் போர்ட்ஃபோலியோ உருவாக்குவதிலும் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதிலும் இக்குழுவினர் கவனம் செலுத்தினர். ஆரம்பத்தில் நொய்டாவிலிருந்து செயல்பட்ட நிலையில் பின்னர் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் பெங்களூருவிற்கு மாற்றப்பட்டன.

பிராண்டுகளுடன் வாடிக்கையாளர்கள் இணைப்பு

The Nestery சந்தைப்பகுத்தி பிராண்டுகளையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது.

இந்தத் தளத்தில் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் பிரிவில் 450-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் தற்போது உள்ளன.

மகப்பேறு காலத்தின் மூன்றாம் ட்ரைமெஸ்டரில் இருக்கும் பெண்கள் முதல் 12 வயது குழந்தைகள் வரை சேவையளிக்கிறது. பொம்மைகள், புத்தகங்கள், ஆடைகள், டின்னர்வேர், அலங்காரப் பொருட்கள், பராமரிப்பு பொருட்கள், டயாப்பர், தூங்குவதற்குத் தேவையானப் பொருட்கள், உணவுப் பொருட்கள், தனித்தேவைக்கேற்ற பிரத்யேக பொருட்கள் என விரிவான பிரிவுகள் இதில் உள்ளன.

தளத்தின் மூலம் விற்பனையாகும் பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கு கமிஷன் பெறுவதன் மூலம் இந்தத் தளம் வருவாய் ஈட்டுகிறது.

வைஷ்ணவி மட்டுமல்லாது அவரது கணவர் டி எஸ் விஸ்வநாதன், ஃபேஸ்புக் குழுவில் சந்தித்த அபர்னா வாசுதேவன் ஆகிய இருவரும் The Nestery நிறுவனத்தின் இணை நிறுவனர்களாக உள்ளனர்.

2

வைஷ்ணவி, டி எஸ் விஸ்வநாதன், அபர்னா வாசுதேவன் - இணை நிறுவனர்கள், The Nestery

“பொறுப்புகள் முறையாக வகுக்கப்பட்டிருப்பதால் நாங்கள் ஒரு குழுவாக செயல்பட்டு வருகிறோம். அத்துடன் நாங்கள் மூவருமே விமர்சனங்களை நேர்மறையான சிந்தனைகளுடன் அணுகும் குணம் கொண்டவர்கள்,” என்கிறார் வைஷ்ணவி.

ஒன்றரை ஆண்டுகள் வரை இணை நிறுவனர்களின் சொந்த சேமிப்பு கொண்டு இந்நிறுவனம் சுயநிதியில் இயங்கி வந்தது. அதன் பிறகு நண்பர்கள், குடும்பத்தினர், FirstCheque&Tremis Capital போன்றோரிடமிருந்து 3.74 கோடி ரூபாய் ப்ரீ-சீட் நிதி திரட்டியுள்ளது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட Sequoia Spark Fellowship முதல் பிரிவில் 100K டாலர் ஈக்விட்டி இல்லாத நல்கை மற்றும் வழிகாட்டல் திட்டத்திற்கு, இந்தியா மாறும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 15 ஸ்டார்ட் அப்கள் மற்றும் 20 பெண் தொழில்முனைவோர்களில் The Nestery நிறுவனமும் அடங்கும்.

குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்புப் பிரிவில் The Nestery நிறுவனத்துடன் தேர்வான மற்றொரு தளம் Firstcry.

“பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்குத் தேவையான தயாரிப்புகளை சரியாகவும் எந்தவித சிக்கலும் இன்றி வாங்க உதவவேண்டும் என்பதே எங்களது ஸ்ட்ராடெஜி. அவர்கள் எளிதாகத் தேர்வு செய்ய உதவும் வகையில் தயாரிப்புகளை வகைப்படுத்தியிருக்கிறோம். மேலும், இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்திய மற்ற பெற்றோரின் பரிந்துரைகளைகள் அவர்கள் தேர்வு செய்ய உதவுகிறது,” என வைஷ்ணவி விவரிக்கிறார்.

இந்தியாவில் உள்ள இன்றைய நவீன தலைமுறையைச் சேர்ந்த பெற்றோர்களின் ஒட்டுமொத்த தேர்வாக The Nestery இருக்கவேண்டும் என்பதே வைஷ்ணவியின் விருப்பம்.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா