ஃபேஸ்புக் இந்தியா க்ளோபல் பிசினஸ் இயக்குனராக அருண் ஸ்ரீனிவாஸ் நியமனம்!
பேஸ்புக் இந்தியா நிறுவனம், குளோபல் பிஸ்னஸ் குரூப் புதிய தலைவரை நியமனம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்திய மார்க்கெட்டிங் தீர்வுகளுக்கான உத்திகளை வகுப்பதற்காக ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம், குளோபல் பிஸ்னஸ் குரூப் இயக்குனராக அருண் ஸ்ரீனிவாஸ் என்பவரை நியமனம் செய்துள்ளது. பெரிய விளம்பர நிறுவனங்கள் தொடர்பான பணிகளுக்கான உத்திகளை வகுப்பது இவரது முக்கியப் பொறுப்பாக இருக்கும்.
கடந்த சில மாதங்களில் மார்க்கெட்டிங், தகவல் தொடர்பு என பல்வேறு பிரிவுகளில் புதிய நியமங்களை மேற்கொண்டு வரும் நிலையில் ஃபேஸ்புக் இந்த புதிய நியமனத்தை அறிவித்துள்ளது.
இந்த பொறுப்பின் கீழ், நாட்டின் முன்னணி விளம்பர நிறுவனங்கள், பிராண்ட்கள், பங்குதாரர்கள் உடனான ஃபேஸ்புக் உத்தியை வகுப்பதில் மற்றும் ஃபேஸ்புக்கின் வருவாயை பெருக்குவதில் அருண் ஸ்ரீனிவாஸ் கவனம் செலுத்துவார்.
நிறுவனத்தில் முக்கிய வர்த்தகக் குழுக்கள், ஏஜென்சி குழுக்கள், மற்றும் வர்த்தகத் தீர்வு குழுக்கள் அவரின் கீழ் பணியாற்றும்.
ஸ்ரீனிவாஸ்; ஓலா, யூனிலீவர், ரீபாக் உள்ளிட்ட நிறுவனங்களில் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறையில் 24 ஆண்டு அனுபவம் உள்ளவர். முதலீட்டி நிறுவனமான வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் பாட்னர்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றி இருக்கிறார்.
இதற்கு முன் அண்மையில், ஓலாவில் முதன்மை செயல்பாட்டு அதிகாரியாவுகவும், ஓலா மொபிலிட்டியில் முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரியாகவும் இருந்திருக்கிறார். ரீபாக் நிறுவனத்தில் பணியைர்க் துவக்கியவர் யூனிலீவரில் 15 ஆண்டு பணியாற்றியுள்ளார். கொல்கத்தாவின் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் நிர்வாகவியல் பட்டம் பெற்றிருக்கிறார்.
ஃபேஸ்புக் அண்மை மாதங்களில், அதிலும் குறிப்பாக கொரோனா தொற்றுக்குப்பிறகு, சிறு மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஓராண்டு காலத்தில் மீஷூ, Unacademy உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதோடு, அண்மையில் ஜியோ மேடையிலும் முதலீடு செய்துள்ளது ஃபேஸ்புக். மேலும், இந்தியாவில் இன்ஸ்டாகிராம் சிறிய வீடியோ பகிர்வுக்கான ரீல்ஸ் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது.
“வர்த்தகங்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதில் ஃபேஸ்புக் ஈடுபாடு கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் பொருளாதார தேக்க நிலையில் இது முக்கியமாகிறது. இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தில் பெரிய நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குளோபல் பிஸ்னஸ் குழுவுக்கு அருணை வரவேற்கிறோம்,” என ஃபேஸ்புக் இந்தியா, குளோபல் மார்க்கெட்டிங் சொல்யூஷன்ஸ் இயக்குனர் மற்றும் தலைவர் சந்தீப் பூஷன் கூறியுள்ளார்.
தகவல்: பிடிஐ