‘தமிழகத்தில் முதல் மிதக்கும் உணவகம்’ - 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் அமையும் பிரம்மாண்டம்!
தமிழகத்திலேயே முதன் முறையாக அமைய உள்ள பிரம்மாண்டமான மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று தொடங்கிவைத்தார்.
தமிழகத்திலேயே முதன் முறையாக அமைய உள்ள பிரம்மாண்டமான மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் சந்தரமோகன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் ஜோஜி செபஸ்தியான், ஒஜெஸ் செபஸ்தியான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மிதக்கும் உணவகம்:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு இல்லத்தில் மிதவை படகுகள், எந்திர படகுகள் உள்ளிட்ட பலவகையான படகுகளில் மக்கள் சாகசப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டை சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்கி வருகின்றார்கள். மாமல்லபுரத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியினை, ஒலிம்பிக் உள்ளிட்ட உலக விளையாட்டு போட்டிகளுக்கு இணையாக பிரம்மாண்டமாக நடத்தி மாமல்லபுரம் சுற்றுலா தலத்தினை உலகப் புகழ் பெற செய்தார்.
தற்போது மேலும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் விதமாக இந்த படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
மிதக்கும் உணவகம் அமைக்கும் இந்த பணியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூபாய் 5 கோடியாகும்.
- தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) அமைக்கப்படுகிறது. இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.
- முதல் தளம் திறந்த வெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இக்கப்பலில் சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை (மோட்டார் இன்ஜின்) அமைக்கப்பட உள்ளது.
- இந்த கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் க்கப்பட உள்ளது.