இந்திய ரயில்வே வாரியத் தலைவரான முதல் பெண் அதிகாரி ஜெயா வர்மா சின்ஹா - யார் இவர்?
முதன்முறையாக, இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கும் வாய்ப்பு பெண் ஒருவருக்கு கிடைத்துள்ளது. ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
முதன்முறையாக, இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கும் வாய்ப்பு பெண் ஒருவருக்கு கிடைத்துள்ளது. ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரயில்வே வரலாற்றில் முதன் முறை:
118 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராக முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
![Jaya](https://images.yourstory.com/cs/18/536edf40e52011e9bc420fad7003cf62/JayaVarmaSinha-1693548607487.jpg?fm=png&auto=format&w=800)
இதுவரை ரயில்வே வாரியத்தின் தலைவராக அனில் குமார் லஹோடி செயல்பட்டு வந்தார். ஜெயா வர்மா தற்போது போக்குவரத்துத் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ரயில்வே வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாட்டுத் துறையின் உறுப்பினராகவும் உள்ளார்.
“இந்திய ரயில்வே மேலாண்மை சேவைகள் (IRMS), உறுப்பினர் (செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாடு), ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவிக்கு ஜெயா வர்மா சின்ஹாவை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) ஒப்புதல் அளித்துள்ளது,” என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக ஜெயா வர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயா வர்மா அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை இந்தப் பதவியில் நீடிப்பார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் இந்த ஜெயா வர்மா?
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் படித்த ஜெயா வர்மா, 1988-ம் ஆண்டு இந்திய ரயில்வே போக்குவரத்து சேவையில் சேர்ந்தார். ஜெயா வர்மா வடக்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களில் பணியாற்றியுள்ளார். ரயில்வே மின்மயமாக்கல் மையத்திலும் (CORE) பணியாற்றியுள்ளார்.
![Jaya Varma](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/JayaVarma-1693808022990.png?fm=png&auto=format)
வங்கதேசத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ரயில்வே ஆலோசகராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். கொல்கத்தாவில் இருந்து டாக்கா செல்லும் மைத்ரீ எக்ஸ்பிரஸ் அவர் வங்கதேசத்தில் பணிபுரிந்த காலத்தில் துவக்கப்பட்டது. கிழக்கு இரயில்வேயின் சீல்டா பிரிவில் கோட்ட ரயில்வே மேலாளராகவும் பணியாற்றினார்.
ஆனால், அவர் இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஜெயவர்மாவுக்கு ரயில்வே வாரிய தலைவர் பதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.